டிடி வாழ்க்கையில் விதி விளையாடி விட்டது.. மொத்த குடும்பத்திற்கும் வலி.. உருக்கமாக பேசிய எதிர்நீச்சல் ரேணுகா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் மனதை ஆட்கொண்ட சீரியல்களில் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்திருப்பது எதிர்நீச்சல். ஒரு வீட்டுக்குள் நடக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிராக பெண்கள் எழுந்து நிற்கும் கதை என்ற வலுவான கருவை கொண்ட இந்த தொடர், ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்தையும் தொட்டிருக்கிறது. இந்த சீரியலில் ரேணுகா என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை பிரியதர்ஷினி தன்னுடைய தங்கச்சி என்ன டி டி என்ற திவ்யதர்ஷினி பற்றி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் என்ற ஒரே மனிதனின் முடிவுகள் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை எப்படி கட்டுப்படுத்துகிறது... அந்த கட்டுப்பாட்டை உடைக்க பெண்கள் எவ்வளவு போராட வேண்டும்... அதுதான் இந்த கதையின் மையம்.
ஆனால் ரசிகர்களின் மனதில் ஒரு வலி - பெண்கள் போராடுகிறார்கள்... எழுந்து நிற்கிறார்கள்... ஆனால் மீண்டும் மீண்டும் தள்ளப்படுகிறார்கள். அந்த உணர்வு தான் இந்த சீரியலை பற்றி பேச வைத்துக் கொண்டிருக்கிறது.

பெண்ணின் வலி
இந்த சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் பிரியதர்ஷினி யின் நடிப்பு சத்தமாக இல்லை... ஆனால் மனதை நொறுக்கும் அமைதியான உணர்வு கொண்டது. கண்களில் பேசும் துக்கம்... குடும்பத்திற்காக தன்னையே மறக்கும் தன்மை...தன்னுடைய வலிகளை கூட காமெடியாக சொல்லும் கேரக்டர் தான் மக்களை கவர்ந்திருக்கிறது. இதனால் ரேணுகா பல பெண்களின் பிரதிநிதியாக மாறிவிட்டார்.
அம்மாவாக இருந்தது டிடிதான்
சமீபத்திய பேட்டியில் பிரியதர்ஷினி தனது சகோதரி திவ்யதர்ஷினி பற்றி பேசிய போது வார்த்தைகளில் மட்டும் இல்ல... இதயத்தில் இருந்த உணர்வுகளே வெளியே வந்தது. "நான் வீட்டின் மூத்தவள்... ஆனாலும் என்னை பார்த்தது டிடிதான்... எங்க அம்மா... எங்க தம்பி...
இந்த குடும்பம் முழுக்க அவள் தோள்மீது தான் இருந்தது..."
ஒரு தங்கை... அக்காவுக்கு துணையாக மட்டும் இல்லாமல் ஒரு வீட்டின் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பெண்ணாக தான் டிடி இருந்திருக்கிறார் ஆனால் இன்று அவருக்கு முட்டி வலி பிரச்சனையால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார் ஆனாலும் அவருடைய குடும்பத்தினர் அவருக்கு முழு சப்போர்ட் கொடுத்திருக்கின்றனர்.
காதலித்து திருமணம்
டிடியின் திருமண வாழ்க்கையை பற்றி பேசும்போது பிரியதர்ஷினியின் குரல் தளர்ந்துவிட்டது. "ஆசை ஆசையாக காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா... ஆனா அந்த வாழ்க்கை அவள் நினைச்ச மாதிரி அமையல... அது எங்கள் குடும்பத்துக்கே ஒரு பெரிய வலி..." ஒரு பெண் உடைந்தால் அவள் மட்டும் அல்ல... அவளை நேசிக்கும் ஒரு குடும்பம் முழுக்க உடைந்து போகும். அந்த உணர்வை இந்த ஒரு பேட்டி காட்டியது.
திரையில் சிரிக்கும் டிடி
திவ்யதர்ஷினி என்ற பெயர் வந்தாலே: சிரிப்பு, எனர்ஜி, கலகலப்பு எல்லோரையும் கம்பர்ட் ஆக பேச வைக்கும் திறன் இவை தான் நினைவுக்கு வரும். ஆனால் அந்த சிரிப்பின் பின்னால் உடல்நல சோதனைகள், திருமண வாழ்க்கை முறிவு, குடும்பப் பொறுப்பு எல்லாவற்றையும் தாங்கி நின்ற ஒரு பெண் இருக்கிறார். அதனால்தான் அவர் இன்று பள்ள தொகுப்பாளினிகளுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார்.
திரையில் எப்போதும் சிரிப்புடன், கலகலப்பாக ரசிகர்களை கவரும் டிடியின் பயணம் மிகவும் சிறிய வயதிலேயே தொடங்கியது. குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சியில் தோன்றிய அவர், பின்னர் தொகுப்பாளினியாக மாறி தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்டார்.
கேரளா ஸ்டோரி 2 படத்தில் நடித்திருக்கும் 'எதிர்நீச்சல்’ சீரியல் நடிகர்.. கேரக்டர் இதுதானா? அவரே வெளியிட்ட பதிவு
விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் அவரை வீட்டுக்கு வீடு அறிமுகப்படுத்தின. குறிப்பாக "காபி வித் டிடி" நிகழ்ச்சியில் அவர் நடத்திய உரையாடல்கள், பிரபலங்களை சிரிக்க வைத்த விதம், அவரின் தன்னம்பிக்கை மிக்க பேச்சு - இவை எல்லாம் சேர்ந்து அவரை தமிழ் தொலைக்காட்சியின் முக்கியமான தொகுப்பாளினிகளில் ஒருவராக மாற்றின.
திவ்யதர்ஷினி நிஜ வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்தும் குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர் என்பதையும் பிரியதர்ஷினி உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அக்கா - தங்கை உறவு மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்தின் தாங்கும் தூணாக டிடி இருந்ததை அவரது இந்த பேட்டி வெளிப்படுத்தியுள்ளது.
சீரியலில் அமைதியாக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு வாழும் ரேணுகா கதாபாத்திரம் போலவே, நிஜ வாழ்க்கையிலும் பல உணர்வுகளை சுமந்து நிற்கிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications