எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை தேவயானி? அதுவும் என்ன கேரக்டர் தெரியுமா? கதை தலைகீழாக போகுமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு காலத்தில் சின்னத்திரை ரசிகர்கள் தினமும் காத்திருந்து பார்க்கும் சீரியல் அது எதிர்நீச்சல் தான். குடும்ப அரசியல், பெண்களின் போராட்டம், ஆதி குணசேகரனின் ஆட்டம் - இப்படி பரபரப்பாக போய்கிட்டிருந்த கதை திடீரென மாற்றப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதனாலேயே முதல் சீசன் திடீர்னு முடிவுக்கு வந்தது.

அதை தொடர்ந்து எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் இரண்டாவது சீசன் வந்தது அதுவும் நெகடிவ் விமர்சனங்கள் தான் வந்தது. இந்த நிலையில் இப்போது இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத என்ட்ரி வரப்போகிறார் என்ற தகவல் ரசிகர்களை ரொம்பவே எக்சைட் பண்ணியிருக்குது.

Ethirneechal serial Devayani Kanika

ஆதி குணசேகரனின் திடீர் மாற்றம்

இதுவரை கடுமையான வில்லனாக இருந்த ஆதி குணசேகரன் திடீர்னு மென்மையாக பேச ஆரம்பிச்சது ரசிகர்களுக்கே சந்தேகம். "இவ்ளோ சீக்கிரமா மனசு மாறிடுவாரா?"ன்னு சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுந்துட்டே இருக்கு. பலரும் இது ஏதோ பெரிய சூழ்ச்சிக்கான முன்னோட்டமா இருக்கும் என்று பேசிக்கிட்டு இருக்காங்க.

ஈஸ்வரியின் ரீ-என்ட்ரி

குணசேகரனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிர் போராட்டம் நடத்திய ஈஸ்வரி கண் திறக்கப் போறாங்கன்னு தகவல் பரவியிருக்குது. அந்த ஒரு காட்சி வந்துட்டா கதையே வேற லெவலுக்கு போயிடும் என்பதில் ரசிகர்களுக்கு சந்தேகமே இல்லை. இதுவரை அமைதியாக கண்ணீர் வடித்த ஈஸ்வரி, இனிமேல் அதே மாதிரி இருப்பாங்களா? இல்ல வேற மாதிரி மாறுவாங்களா?ன்னு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கு.

தேவயானி என்ட்ரி

இந்த நேரத்தில்தான் இன்னொரு தகவல் பரவ ஆரம்பிச்சது. ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வந்த நடிகை கனிகா நான் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன் என்று ஏற்கனவே சொல்லி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக கோலங்கள் சீரியல் நாயகி தேவயாணி வரப்போறாங்கன்னு சொல்லப்படுது. இது உண்மையா இருந்தா, அது சாதாரண கம்பேக் கிடையாது. சின்னத்திரை ரசிகர்களுக்கு இது ரொம்ப பெரிய விஷயம்.

தேவயாணி என்றாலே குடும்ப பெண்களின் மனசை கவர்ந்த நடிகை. பல வருடங்களாக வெள்ளி துறையிலும், சின்னத்திறையிலும் தன்னுடைய தனி இடத்தை பிடிச்சிருக்காங்க. அவங்க நடிப்பு, டயலாக் டெலிவரி, முகபாவனை - எல்லாமே ரொம்ப இயல்பாக இருக்கும். அந்த மாதிரி ஒரு நடிகை எதிர்நீச்சல் மாதிரி ஒரு வலுவான கதைக்கு வந்துட்டாங்கன்னா, கதை இன்னும் பலம் பெறும் என்பது நிச்சயம்.

இனி ஈஸ்வரி மௌனம் காக்க மாட்டாரா?

தேவயாணி இந்த ரோலில் வந்தா, ஈஸ்வரி இனிமேல் அமைதியா இருக்க மாட்டாங்கன்னு ரசிகர்கள் நம்புறாங்க. தன்னை அழிக்க முயன்ற குணசேகரனையே நேரில் நின்று கேள்வி கேட்பாரா? குடும்பத்துக்குள் நடந்த அநியாயங்களுக்கு பதில் கேட்பாரா? பெண்கள் குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் முன்னணியில் நிற்பாரா?ன்னு பல கேள்விகள் எழுந்து கொண்டு இருக்கு.

இதுவரை வீட்டு சண்டை மாதிரி இருந்த விஷயம், இனி நேரடி மோதலாக மாறும் சூழல் உருவாகியிருக்கு. பெண்களின் தன்னம்பிக்கையை மையமாக வைத்து போகும் இந்த கதையில், ஈஸ்வரியின் திரும்பி வருதல் ஒரு பெரிய டர்னிங் பாயிண்ட் ஆகும்.

Ethirneechal serial Devayani Kanika

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா?

இப்போ வரை சேனல் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரல. ஆனா இந்த ஒரு தகவல் போதும்னு ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்காங்க. சமூக வலைத்தளங்களில் "தேவயாணி வந்துட்டாங்கன்னா குணசேகரனுக்கு இனி ஆப்பு தான்டா!"ன்னு மீம்ஸ்களும் சுற்றி வருகிறது.

உண்மையிலேயே தேவயாணி எதிர்நீச்சலில் களமிறங்குவார்களா? ஈஸ்வரியின் கதை இனிமேல் எப்படி நகரும்? ஆதி குணசேகரனின் அமைதிக்குப் பின்னால் என்ன இருக்கிறது? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லப்போவது அடுத்தடுத்த எபிசோடுகள் தான்.

ஒரு விஷயம் மட்டும் உறுதி - தேவயாணி என்ட்ரி நடந்துட்டா, எதிர்நீச்சல் TRP வேற லெவலுக்கு போகும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+