எதிர்நீச்சலில் இனி கதை இதுதானா? அதனால் தான் கயல்விழி- வென்பா அறிமுகமா? அந்தப் பேட்டி ஞாபகம் இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தத்தின் மனைவி மற்றும் மகள் அறிமுகம் வந்திருக்கிறது.

இதுவரைக்கும் ஜீவானந்தம் பணக்காரர்களிடம் இருந்து சொத்தை பிடுங்கி ஏழைகளுக்கு கொடுக்கும் ஒரு நபராக மட்டும் இருந்த நிலையில் இப்போது அவருக்குள் இருக்கும் பாசமும் நேற்றைய எபிசோடில் தெரியவந்தது.

Ethirneechal serial up comming story is why Kayalvizhi- Venpa debut

இந்த நிலையில் இனி சீரியல் என்ன மாதிரி கதைக்கொண்டு நகரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கும் நிலையில் அது குறித்த பல கருத்துக்களும் குவிந்து வருகிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

\சன் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் குறித்த தகவல்கள் இணையத்தில் அடிக்கடி காண முடிகிறது. இந்த சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பதால் இந்த சீரியல் குறித்து ஆர்வம் ரசிகர்களின் மனதில் தொற்றிக் கொள்கிறது.

Ethirneechal serial up comming story is why Kayalvizhi- Venpa debut

முதல் முறையாக ஜீவானந்தத்தின் மனைவி மற்றும் மகள் நேற்றைய எபிசோட்டில் அறிமுகமாகி இருந்தனர்.. அதுவும் அவர்களுக்கு என்று அதிகமான முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் "வா வா என் தேவதையே" என்ற பாடல் பேக்ரவுண்டில் போடப்பட்டு ஜீவானந்தம் அவருடைய மகள் மற்றும் மனைவியோடு இருக்கும் பாசமான காட்சிகள் பலருடைய மனதையும் கவர்ந்திருந்தது.

ஜீவானந்தம் ஈஸ்வரியின் முன்னாள் காதலன் என்று பலருக்கும் ஆரம்பத்திலேயே அவருடைய அறிமுகம் ஆனபோது தெரிந்து விட்டது. ஆனாலும் அவர் திருமணம் செய்திருக்க மாட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது ஜீவானந்தத்தின் குடும்பம் அறிமுகம் ஆகி இருப்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் ஜீவனந்தத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக ஜனனி ஜீவானந்தத்தின் சொந்த ஊருக்கு சென்று இருக்கிறார்.

அதுபோல ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக கதிர் மற்றும் கிள்ளிவளவன் அதே ஊரில் ஜீவானந்தம் வரும் வழியில் காத்திருக்கின்றனர். ஜீவானந்தம் தன்னுடைய அணியில் இருக்கும் அவருடைய தோழர்களிடம் கூட தான் தன்னுடைய குடும்பத்தை பார்க்க போகும் விஷயத்தை சொல்லாமல் கிளம்பி எளிமையாக காட்டு வழியில் நடந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் இனி சீரியல் எப்படி நகர போகிறது என்று எதிர்பார்க்கப்படும் கதை குறித்து பார்க்கலாம்.

Ethirneechal serial up comming story is why Kayalvizhi- Venpa debut

ஏற்கனவே குணசேகரன் கதிர் போயிருக்கும் இடத்தில் இருந்து எப்படி வருவான் என்று சொல்ல முடியாது. ஒருவேளை பிணமாக கூட வரலாம் என்று கூறியிருக்கிறார். அதே நேரத்தில் ஜீவானந்தம் கெட்டவன் அவனும் குணசேகரன் போலவே ஆண் ஆதிக்கம் உள்ளவர் என்று ஜனனி நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் இப்போது அடுத்தடுத்து ஜனனிக்கு ஜீவனந்தம் பற்றி உண்மைகள் எல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஜீவானந்தத்திற்கு வளவன் மற்றும் கதிரால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கதை போகலாம். அப்போது ஜனனி ஜீவானந்தத்தை காப்பாற்றி விடலாம். அல்லது ஏற்கனவே பேட்டியில் இந்த சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் சொன்னது போலவே ஜீவானந்தத்தின் கதை இதோடு முடிந்து விடலாம்.

அதற்குப் பிறகு ஜீவானந்தம் பட்டம்மாள் பற்றிய ரகசியத்தை ஜனனியிடம் சொல்லி விடுவதால் இந்த கூட்டத்திற்கு தலைவியாக ஜனனி மாறி பல பெண்களுக்கும் கஷ்டப்படுபவர்களுக்கும் முன்னேற்றம் கொடுக்கும் விதமாக இருப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஒருவேளை கதிர் மற்றும் வளவனால் ஜீவானந்தம் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால் ஜீவானந்தத்தின் குடும்பத்தை ஜனனிதான் காப்பாற்றுவதாக கதை நகரவும் வாய்ப்பிருக்கிறது.

Ethirneechal serial up comming story is why Kayalvizhi- Venpa debut

அது மட்டும் அல்லாமல் ஒருவேளை ஜீவானந்தத்தால் கதிருக்கு உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்குப் பிறகு குணசேகரன் பற்றிய உண்மைகளை தெரிந்து கதிர் மனம் மாற வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே நந்தினி குணசேகரன் தன்னை அடிக்க வந்தது குறித்து கதிரிடம் சொல்லப் போகிறேன். கதிர் இனி என்னக்காகத்தான் நிற்பான் என்று கூறி இருக்கும் நிலையில் கதிருக்கு ஏதாவது மனமாற்றம் ஏற்படுவதற்கும் இந்த விஷயத்தில் வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி மற்றும் மகள் வெண்பாவிற்கு இனி அதிகமான முக்கியத்துவம் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம் எதிர்நீச்சலில் இனி கதை எப்படி நகரப் போகிறது என்பதை. ஏற்கனவே ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் தான் என்று ஆரம்பத்தில் கூறியது போல தான் நடந்தது. அதுபோல இப்போதும் நடப்பதற்கும் அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+