பானுப்ரியாவை "கால் கட்டில்" ஏமாற்றினாரா கார்த்திக்? ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓயாமல் பரபரப்பு: பிரபலம்
சென்னை: சினிமாவை பொறுத்தவரை, "மினி கவுன்சிலராக" மாறிவிடுபவர் நடிகை பானுப்பிரியா" என்று தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.. அத்துடன் சக்கரவர்த்தி பட ஷூட்டிங் சம்பவத்தையும் அந்த பேட்டியில் விலாவரியாக நினைவு கூர்ந்திருக்கிறார்.
Behindcinema என்ற சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், நடிகை பானுப்பிரியாவின் திறமை, நடிப்பு, நடனம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.. அதில் சக்கரவர்த்தி பட நிகழ்வு பற்றி சொன்னதாவது:

"சக்கரவர்த்தி என்ற படத்தில் கார்த்திக்குடன் நடித்து கொண்டிருந்தார் பானுப்பிரியா.. எப்போதுமே கார்த்திக்கை வைத்து வேலை வாங்குவது தயாரிப்பாளர்களுக்கும், டைரக்டர்களுக்கும் குதிரை கொம்பான விஷயம்.. கார்த்திக் 2 நாள் தொடர்ந்து ஷூட்டிங் வருவதே பெரிய விஷயம்.. அதற்குபிறகு வரமாட்டார்.
பானுப்பிரியா கார்த்திக்
அப்படிப்பட்ட கார்த்திக்கை, அந்த படம் முடியும்வரை இழுத்துக் கொண்டு வந்ததே பானுப்பிரியாதான். "எந்த சீன் என்றாலும், பாடல் காட்சிகளாக இருந்தாலும், ஆட வேண்டாம், நடிக்க வேண்டாம், எந்த வேலையும் செய்ய வேண்டாம், அமைதியாக வந்து ஷூட்டிங்கில் உட்கார்ந்திருந்தாலே போதும்" என்று கார்த்திக்கிடம் சொன்னார் பானுப்பிரியா.
ஏனென்றால் எந்த தயாரிப்பாளரும் நஷ்டம் ஆயிடக்கூடாது என்று நினைப்பவர் பானுப்பிரியா.. "எப்போதுமே தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். நாம ஒத்துழைப்பு தருவதுடன், சக கலைஞர்களையும் எந்த தடங்கல் இல்லாமல், படம் வெளிவரும் வகையில் பார்த்து கொள்ள வேண்டும்" என்று பானுப்பிரியாவுக்கு அவரது அம்மா ஏற்கனவே பலமுறை அட்வைஸ் தந்திருந்தார்.
அம்மா சொன்ன மந்திரம்
அம்மாவின் அந்த மந்திரம்தான், சக்கரவர்த்தி படத்தில் உபயோகமானது.. பானுப்பிரியா இல்லையென்றால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே கார்த்திக் வர மாட்டார்... பானுப்பிரியா, கார்த்திக்கின் கெஸ்ட் ஹவுஸ்ஸுக்கு சென்றதுபோக, ஷூட்டிங் ஸ்பாட்டே கெஸ்ட் ஹவுஸா மாறிவிட்டது.. கார்த்திக் ஷூட்டிங்கில் தொடர்ந்து பங்கேற்றது தயாரிப்பாளருக்கும் பெரிய சந்தோஷம்தான்..
ஆனாலும், அடுத்த சில நாட்களிலேயே பானுப்பிரியாவையும் ஏமாற்றி, தயாரிப்பாளரையும் ஏமாற்றிவிட்டார் கார்த்திக். ஒருநாள் காலில் பெரிய கட்டு போட்டுக்கொண்டு கார்த்திக் உட்கார்ந்திருந்தார். பானுப்பிரியா அவரிடம் சென்று என்ன காயம்? என்று கேட்டார். அதற்கு, பாத்ரூமில் தடுக்கி விழுந்துவிட்டதாக கார்த்திக் கூறியிருக்கிறார்.,
தயவுசெய்து வந்து நடிங்க
உடனே பானுப்பிரியா, "பாத்ரூமில் தடுக்கி விழுந்ததில் இவ்வளவு பெரிய கட்டா? உண்மையிலேயே பாத்ரூமில் வழுக்கி விழுந்தீங்களா? அல்லது மாடியிலிருந்து குதிச்சீங்களா? நீங்கள் செய்வது தவறு.. தயாரிப்பாளர் இந்த படத்தை நிறுத்திவிட்டால் நம்மையும் சேர்த்து நூற்றுக்கணக்கான கலைஞர்களும் பாதிக்கப்படுவார்கள்,.. தயவுசெய்து வந்து நடிங்க" என்று கேட்டுக் கொண்டார்.
அத்துடன், ஒரு டாக்டரையும் உடனடியாக வரவழைத்துள்ளார். கார்த்திக்கின் கால் கட்டை டாக்டர் பிரித்து பார்த்தால், அங்கு எந்த காயமும் இல்லை.. போலி காயம், போலி கட்டு, போலி கார்த்திக்.
கார்த்திக் சரியாயிட்டாரு, நீ கெட்டுப்போயிட்டேம்மா
பிறகு கார்த்திக் பானுப்பிரியாவிடம், "நீ இந்த படத்தில் அளவுக்கு அதிகமாக நடித்துவிட்டாய். அதனால் தயாரிப்பாளரிடம், இன்னொரு மடங்கு சம்பளம் கேள்" என்று பானுப்பிரியாவை தூண்டிவிட்டார். அதன்படியே பானுப்பிரியாவும், தயாரிப்பாளரிடம் 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று டிமாண்டு செய்திருக்கிறார்.. இதைக்கேட்ட தயாரிப்பாளர், "ஏம்மா, கார்த்திக் சரியாயிட்டாரு, நீ கெட்டுப்போயிட்டேம்மா" என்று கேட்டுள்ளார்.
கடைசியில் இந்த பண விவகாரம் தயாரிப்பாளர் கவுன்சிலர் வரை சென்றுள்ளது.. 5 லட்சம் ரூபாய்க்கு DD எடுத்து தந்து, இந்த விவகாரம் பேசி முடிக்கப்பட்டது.. அதற்கு பிறகே சக்கரவர்த்தி படம் ரிலீஸ் ஆனது. இப்படி சினிமாவை பொறுத்தவரை, "மினி கவுன்சிலராக" மாறிவிடுபவர்தான் பானுப்பிரியா" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications