Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.10000000 சம்பளத்துக்கு எகிறிய நடிகர் ராஜ்கிரண்.. இங்கே சர்ருன்னு சறுக்கல்? தன்மான தமிழர்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

Madras Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "1977 காலகட்டத்திலிருந்தே விநியோகஸ்தராக உள்ளவர் "ராஜ்கிரண் .. சின்ன சின்ன படங்களாக வாங்கி விநியோகஸ்தர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். முதன்முதலில் ஹீரோவாக ரஜினியை வைத்து, என் அப்பா "பைரவி" படம் டைரக்டர் செய்தார்.
அந்த படத்திற்கு பூஜை போடும்போது, பூஜைக்கு வந்திருந்த சின்னப்பா தேவர், ரஜினியை ஹீரோவாக போட்டு படம் எடுக்கறீங்களா? அப்படியானால் பைனான்ஸ் செய்ய முடியாதுஎன்று சொல்லிவிட்டு கிளம்பி போய்விட்டார்.

Television Rajkiran actor rajkiran

விநியோகஸ்தர்கள் தெரு

படம் பூஜை போட்டபிறகு, பைனான்ஸ் தரமுடியாது என்று தேவர் சொல்லிவிட்டதால, என் அப்பாவும், டைரக்டர் கலைஞானம் சாரும், தயாரிப்பாளரை தேடி அலைய ஆரம்பித்தார்கள்.. அப்போது மவுன்ரோடிலுள்ள மீரான் சாஹிப் தெருவுக்குள் நுழைந்தனர்.. காரணம், விநியோகஸ்தர்கள் எல்லாருமே அந்த தெருவில்தான் அப்போது இருப்பாங்க.. அந்த தெருவில்தான் சிறியதாக ஆபீஸ் ஒன்றை வைத்திருந்தார் ராஜ்கிரண் சார்.

அப்பாவும், கலைஞானம் சாரும், பைரவி படத்துக்கு உதவி செய்யுங்கள் என்று ராஜ்கிரணிடம் கேட்டுள்ளனர்.. அதற்கு ராஜ்கிரண் சார், கதை சொல்லுங்க, பிடித்திருந்தால் பண உதவி செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

பைரவி படத்துக்கு அட்வான்ஸ்

பைரவி படத்தின் கதை சொன்னதுமே ராஜ்கிரணுக்கு பிடித்துவிடவும், ஒரு அட்வான்ஸ் தொகையை தருகிறார். அந்த அட்வான்ஸ் வைத்துதான் பைரவி படமே துவங்கப்பட்டது. அதுக்கப்பறம் பல இடங்களில் பைனான்ஸ் வாங்கி, பல போராட்டத்துக்கு பிறகு பைரவி படம் எடுக்கப்பட்டது. ஆனால் முதல்முதலில் பைரவி படத்துக்கு பணஉதவி செய்தது ராஜ்கிரண் சார்தான்.
பிறகு, சினிமா தயாரிக்க முடிவு செய்தார ராஜ்கிரண்.. அப்போதுதான் ராமராஜனை வைத்து, என்ன பெத்த ராசா படத்தை வைத்து எடுத்தார்.. அடுத்ததாக, என் ராசாவின் மனசில படத்திற்கும் ராமராஜனையே நடிக்க வைக்க விரும்பினார்.. ஆனால், அதற்குள் ராமராஜன் சார் பீக்கிற்கு சென்றுவிட்டதால், அவரால் உடனே தேதி தர முடியவில்லை. எனவே, தானே அந்த படத்தில் நடிக்க முடிவு செய்தார்.

ஜம்முன்னு இருப்பார் ராஜ்கிரண்

அப்பவே இளம் வயதிலேயே, முரட்டுத்தனமாக ஜம்முனு இருப்பார் ராஜ்கிரண்.. அந்த படத்திற்கு பிரம்மாதமாக பாடல்களை போட்டுத்தந்தார் இளையராஜா.. மொய்தீன் அப்துல் காதர் என்பது ராஜ்கிரணின் அவரது பெயர்.. இந்த படம் வெளியானதுமே ராஜ்கிரண் யார் ? என்று அப்போதுதான் அனைவருமே உற்றுப்பார்த்தனர்.. பிறகு வரிசையாக படங்கள் வந்தன.. ரஜினிகாந்த் 1 கோடி ரூபாய் அப்போது சம்பளம் வாங்கிட்டு இருந்தபோது, ராஜ்கிரணும் 1 கோடி ரூபாய் சம்பளம் வரை உயர்ந்துவிட்டார்.

ஆனால், கோட்-சூட் போட்டெல்லாம் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.. எந்த காலத்திலாவது ராஜ்கிரண் ரஜினியாக முடியுமா? தனக்கு என்ன வரும்? தன்னிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? என்பதை விட்டுவிட்டு, நாம நடிப்பில் என்ன தந்தாலும், ரசிகர்கள் அதை பார்ப்பார்கள் என்று பலரும் நம்பிவிடுகிறார்கள்.

எலும்பு கடி - முரட்டுத்தனம்

முரட்டுத்தனம், எலும்பு கடிப்பதைதான் மக்கள் ரசித்தார்கள்., ரெகுலர் ஹீரோ, கமர்ஷியல் ஹீரோவாக மாற பார்த்து, கடைசியில் சரிவில் விழுந்துவிட்டார்.. நிறைய பொருட்செலவில் பட எடுத்து, கடனாளி ஆயிட்டார் ராஜ்கிரண். தன்னுடைய வீடு, வாசலை விற்கும் நிலைமை வந்தது.. அதுக்கப்புறம் ராஜ்கிரணை வைத்து யாரும் பட எடுக்க முன்வரல.

ரொம்ப நாளைக்கு பிறகு, நந்தா என்ற படத்தை எடுக்க பாலா முயன்றபோது, சிவாஜி கணேசனிடம் கதை சொல்லி உள்ளார்.. அப்போது சிவாஜிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. பிறகுதான் ராஜ்கிரண் நினைவு பாலாவுக்கு வந்துள்ளது.. நந்தா படத்தில் நடித்தது முதல் சிறந்த குணச்சித்திர நடிகராக பயணித்து வருகிறார்.

மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்

பவர் பாண்டி, சண்டைக்கோழி முதல் கடந்த 20 வருடங்களாக முத்திரை குத்தும் படங்களாகவே நடித்து வருகிறார்.. தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகராக உள்ளார்.

நம்ம வீட்டு அப்பா, நம்ம வீட்டு தாத்தா போல ராஜ்கிரணை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.. இன்று நல்ல நிலைமையில் உள்ளார்.. வடிவேலுவை ராஜ்கிரண் சினிமாவில் அறிமுகப்படுத்தியிருந்தாலும், ஒருகாலத்தில் தனக்கு கஷ்டம் வந்தபோதும் வடிவேலு உட்பட யாரிடமும் கேட்டதில்லை ராஜ்கிரண்.. தன்மானம் உள்ள மனிதர், தன்மானம் மிக்க தமிழர்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+