சரிதாவை வயிற்றிலேயே எட்டி உதைத்த நடிகர்.. பதற வைத்த புகார்.. மிகச்சிறந்த டப்பிங் ஆரட்டிஸ்ட்: பிரபலம்
சென்னை: நடிகை சரிதாவை தங்கள் வீட்டு பெண்ணாக, தமிழக மக்கள் இன்றளவும் நினைப்பதற்கு காரணமே, தமிழக இயக்குனர்கள்தான்.. பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா, டி.ராஜேந்தர, பாக்யராஜ் போன்றவர்கள், சரிதாவுக்கு அருமையான படவாய்ப்புகளையும், கதைகளையும் தந்து நடிக்க வைத்தார்கள்.. அதனால்தான் சரிதா எப்போது எந்த மேடையில் பேசினாலும், தமிழக ரசிகர்களுக்கு நன்றியுடையவளாக இருப்பேன் என்று அடிக்கடி சொல்வார்" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Behind cienma என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன், "சரிதா ஒரு மிகச்சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட்.. விஜயசாந்தி, அம்பிகா, ராதா, நதியா, சிம்ரன், மீனா, நக்மா, சவுந்தர்யா, தபு என எல்லாருக்குமே பின்னணி குரல் பேசியிருக்கிறார்..

பல மொழிகளில் நடிக்கும் பல நடிகைகளுக்கு, டப்பிங்கில் ஏற்ற இறக்கத்துடன் பேசத்தெரியாது. இப்போதுள்ள நவீன தொழில்நுட்பங்கள் அப்போதைய டப்பிங்கில் இல்லை.. ஏற்ற இறக்கத்துடன் சரியாக பேசினால் மட்டும்தான் பதிவாகும். அந்தவகையில் சரிதா, சர்வ சாதாரணமாக டப்பிங் பேசிவிட்டு போவார்.. காதல் தேசம் படத்தில் தபுவுக்கு சரிதான் டப்பிங் தந்தார்.. தபு நடிக்கும் எல்லா படத்துக்கும் சரிதாதான் டப்பிங் பேசுவார்..
விஜயசாந்தி முதல் தபு வரை
விஜயசாந்தி முதல் தபு வரை சரிதாவின் டப்பிங்கையே விரும்புவார்கள். தயவுசெய்து எனக்கு டப்பிங் குரலுக்கு சரிதாவை போடுங்கள் என்று அத்தனை பேரும் சரிதாவையே பரிந்துரைப்பார்கள்.. அந்த அளவுக்கு ஏற்ற இறக்கத்துடன் பேசுவார்.
மன்னன் படத்தில் விஜயசாந்தியின் வசனங்கள் மிகப்பெரிய வெற்றியடைய காரணம், அதை ஏற்ற இறக்கத்துடன் பேசிய சரிதாதான். சரிதா டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதே நிறைய பேருக்கு தெரியாது. குணா படத்தில், கண்மணி அன்போடு என்ற பாட்டில், புது கதாநாயகிக்கு சரிதாதான் டப்பிங் வாய்ஸ் தந்தார்.. சரிதாவின் குரல் மட்டும் இல்லாமல் குணா படமும் ஹிட்டாயிருக்காது, அந்த நாயகியும் அந்த புகழை அடைந்திருக்க முடியாது.
ஹேமா கமிட்டியில் புகார்
சரிதா 2011-ல் முகேஷ் என்ற மலையாள நடிகரை 2வதாக திருமணம் செய்தார். ஆனால், திடீரென சரிதா, ஹேமா கமிட்டியில் புகார் செய்தார்.. "நான் கர்ப்பமாக இருக்கும்போது, நான் அடித்து விரட்டப்பட்டேன், வயிற்றிலேயே எட்டி உதைத்தார். அப்போது வலியால் நான் கீழே விழுந்து கதறி அழுதேன்" என்று கணவர் மீது புகார் செய்தார்..
இது அப்போது மிகப்பெரிய செய்தியாக மாறியது. இத்தனைக்கும் கொல்லம் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார் அவரது கணவர் முகேஷ். இதனால் மீண்டும் சரிதாவுக்கு விவாகரத்து நடந்தது.
ஒரு மூத்த நடிகை, தன்னுடைய கணவர் சித்ரவதை செய்வதாக புகார் தந்ததை, திரையுலகம் அதிர்ச்சியோடு பார்த்தது. இதற்கு பிறகு, 10 ஆண்டு காலம் பிள்ளைகளுக்காக, திரையுலகத்தைவிட்டே விலகி சென்றுவிட்டார்.. அதன்பிறகு, பல வருடம் கழித்து சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க துவங்கினார்.
மலையூர் மம்பட்டியான் - கிசுகிசு
திரைப்பட உலகில் கிசுகிசு இல்லாத நடிகை சரிதா.. மலையூர் மம்பட்டியான் படத்தில், தியாகராஜனுடன் கிசுகிசு பேசப்பட்டது.. ஆனால், தியாகராஜனை பொறுத்தவரை, நல்ல குடும்பஸ்தன். நல்ல தயாரிப்பாளரும்கூட. அதனால், இந்த கிசுகிசுவெல்லாம் ஆதாரமில்லாத கிசுகிசுவாகவே மறைந்து போய்விட்டது..
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என பல்வேறு மாநில விருதுகளை பெற்ற சரிதாவுக்கு, இந்திப்பட உலகில் நிலவும் போட்டியால், மத்திய அரசு விருது மட்டும் மயிரிழையில் தப்பிவிட்டது. இந்த வருத்தம் சரிதாவுக்கு அதிகமாகவே இருக்கிறது.
தமிழக மக்கள் - ரசிகர்களுக்கு நன்றி
நடிகை சரிதாவை தங்கள் வீட்டு பெண்ணாக, தமிழக மக்கள் இன்றளவும் நினைப்பதற்கு காரணமே, தமிழக இயக்குனர்கள்தான்.. பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா, டி.ராஜேந்தர், பாக்யராஜ் போன்றவர்கள், சரிதாவுக்கு அருமையான படவாய்ப்புகளையும், கதைகளையும் தந்து நடிக்க வைத்தார்கள்.. அதனால்தான் சரிதா எப்போது எந்த மேடையில் பேசினாலும், தமிழக ரசிகர்களுக்கு நன்றியுடையவளாக இருப்பேன் என்று அடிக்கடி சொல்வார்" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications