பாண்டியன் ஸ்டோர்ஸ் "கதிர்” பெயரில் மோசடி..2,3 நிமிடம்தான் வீடியோ கால்.. மொத்தமும் போச்சு.. வார்னிங்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கேரக்டரில் குமரன் தங்கதுரை நடித்து வருகிறார்.
அவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பெயரில் facebook ஓப்பன் செய்யப்பட்டு ஏமாற்று வேலை நடப்பதாக கூறியிருக்கிறார்.

அத்தோடு நான் பேஸ்புக் பக்கத்தில் இல்லை என்றும் தன்னுடைய பெயர் வைத்து சிலர் போலி அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள் என்று மேலும் சில தகவல்களையும் கூறியிருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரசிகர்களின் மத்தியில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பெரிய அளவில் பிரபலமடைந்திருக்கின்றனர். அதிலும் கதிர் முல்லைக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கின்றது.

அதில் கதிர் கேரக்டரில் நடிக்கும் குமரனுக்கு அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ் தொடங்கி வைத்திருக்கின்றனர். இவர் இதற்கு முன்பு ஒரு குரூப் டான்சராக இருந்து தன்னுடைய பயணத்தை தொடங்கி பிறகு சின்னத்திரையில் நடனம் மூலம் தன்னுடைய வெற்றி பயணத்தை துவங்கி இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் விஜய் டிவியில் ஒரு சில டான்ஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்ட குமரன் இப்போது அடுத்தடுத்து சின்னத்திரை மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய பெயரில் பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓபன் செய்யப்பட்டு போலியாக சிலர் அடுத்தவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆதாரப்பூர்வமாக ஸ்க்ரீன் ஷாட் வெளியிட்டு இருக்கிறார்.

அத்தோடு இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தன்னுடைய பெயரில் போலி அக்கவுண்ட் தொடங்கப்பட்டு சிலரிடம் சாட்டிங் செய்யப்பட்டிருக்கிறது என்றும் அப்போது அந்த ஐடியில் இருந்து சிலரிடம் whatsapp நம்பர் கேட்டு தொந்தரவு செய்த ஸ்க்ரீன் ஷாட் முதலியவற்றையும் குமரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் அவர் அந்த பதிவில் நான் பேஸ்புக் பயன்படுத்துவது இல்லை. என்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடி என்று சிலர் போலியான ஐடிகளை உருவாக்கி அதிலிருந்து நான் பேசுவது போன்று சில ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் அப்படி ஏமாந்து விடாதீர்கள். நான் யாரிடமும் அப்படி பேசுவது கிடையாது. அதே நேரத்தில் நீங்கள் வீடியோ கால் அல்லது உங்களுடைய போன் நம்பரை கொடுத்தால் அவர்கள் உங்களை தவறான சித்தரித்து வீடியோவாக எடுத்து விடுவார்கள் என்று ரசிகர்களிடம் குமரன் எச்சரிக்கை செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications