Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயில் போலி.. சிவாஜி வீட்டில் ரூ.2000 கோடி சொத்து வழக்கு.. "ராங்குமார்" ஆன ராம்குமார்.. இது உண்மையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் சொத்து பிரச்சனை நடந்து வருகிறது. நடிகர் பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம்குமாருக்கு எதிராக அவரது சகோதரிகள் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், இதுகுறித்து பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

சிவாஜி கணேசன் குடும்பத்தில் சொத்து பிரச்சனை வெடித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்கு பிறகு, 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சமீபத்தில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

prabhu ramkumar


நடிகர் சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது, உயில் சட்டபடி மெய்ப்பித்து சான்று பெறாததால் அது செல்லத்தக்கதல்ல என்றும், சாந்தி தியேட்டரில் இருந்த தந்தை சிவாஜியின் 50 சதவீதம் பங்குகளும், தாய் கமலாவின் 50 சதவீதம் பங்குகளும் முறைகேடாக ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது என்றெல்லாம் புகார்கள் முன்வைக்கப்பட்டு, இது தொடர்பான விசாரணையும் நடக்கிறது.

சிவாஜி உயில்: சிவாஜி எழுதியதாக சொல்லப்படும் உயில் போலியானது என்றால் உண்மையான உயில் எங்குள்ளது? பிரபு மற்றம் ராம்குமார் மீது அவரது சகோதரிகள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா? என்ற பல கேள்விகள் திரையுலகில் பரபரப்பை கிளப்பியிருந்தன.

இந்நிலையில், Aagayam Tamil என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில், "எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி வகித்து மரணமடைந்தார். சிவாஜியோ, முதலமைச்சர் பதவிக்கு முயன்று, அது முடியாமல் மரணமடைந்தவர். தமிழ்நாட்டில் 8 கோடி பேருக்கும் எம்ஜிஆரை தெரியும் அளவுக்கு, சிவாஜியையும் தெரியும்.

சொத்துக்கள்:
பிரபு, ராம்குமார், தேன்மொழி, சாந்தி என்று சிவாஜிக்கு 2 மகன்கள், 2 மகள்கள் இருக்கிறார்கள்.. சாந்தியும், தேன்மொழியும் பல ஆயிரம் கோடி சொத்துக்களை, பிரபுவும் ராம்குமாரும் எங்களை மோசடி செய்துவிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். அதேபோல 1000 பவுன் நகை, 500 கிலோ வெள்ளி, சாந்தி தியேட்டர், 2 ஏக்கர் அன்னை இல்லம், போரூரில் உள்ள பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள இடம், இதெல்லாம் மோசடி செய்துவிட்டார்களாம்.

அன்னை இல்லத்தில் இன்று யாருமே இல்லை.. சிவாஜி, கமலாம்மாள் வாழ்ந்த வீட்டை இப்போது வழக்கு காரணமாக பூட்டு போடப்பட்டுள்ளது.. இன்று அன்னை இல்லம் இருட்டில் உள்ளது. அன்னை இல்லத்தில் அன்று அத்தனை காங்கிரஸ்காரர்களும், அத்தனை அரசியல்வாதிகளும் சிவாஜியை சந்தித்த, அப்பேர்ப்பட்ட அன்னை இல்லம் இன்று அனாதை இல்லமாகிவிட்டது.

ராம்குமார்: என்ன காரணமென்றால் சிவாஜி மறைவுக்கு பிறகு, ராம்குமார், பிரபு இருவருமே, சிவாஜி எழுதியது போல உயில் எழுதிவைத்து, சகோதரிகளை போலி உயில் எழுதி வைத்து, சொத்துக்களை ஏமாற்றி விட்டார்களாம். தங்களுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் சொத்துக்களை கிடைக்க செய்யவில்லை என்றும் புகார் சொல்கிறார்கள். சிவாஜி தன்னுடைய சொத்துக்கள் வெளியில் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே மகன்களை குடும்பத்துக்குள்ளேயே திருமணம் செய்து வைத்தும், விவகாரம் வெடித்துவிட்டது.

ராம்குமாரால் சிவாஜி புரடொக்‌ஷன் என்ற சொந்த சினிமா கம்பெனியைகூட நிர்வகிக்க முடியவில்லை. சிவாஜிக்கு பிறகு சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவும் முடியவில்லை. அதனால்தான், அத்தனை கோடி ரூபாயையும் ராம்குமார் அழித்துவிட்டதாக கூறி இப்போது சகோதரிகள் வழக்கு போட்டிருக்கிறார்கள்.

சிவாஜியின் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை பங்கு போட வேண்டியிருக்கிறது.. பெண்களுக்கும் சொத்தில் சரிசமமாக பிரிக்க வேண்டியிருக்கிறது.. 2000 கோடி என்றால், 2 மகள்களுக்கும் 1000 கோடியாவது வரணும். ஆனால் வரவில்லையாம்.

தேன்மொழி:
சொத்து வெளியே போய்விடக்கூடாது என்பதற்காகவே, பிரபுவின் மகளை, சொந்த சகோதரி தேன்மொழியின் மகனுக்கு திருமணம் செய்து தரப்பட்டது. ஆனால், சொத்து சண்டை, வெடித்துமே, இந்த குடும்பம் பிரிகிறது.. 1000 சவரன் நகை விவகாரமும் வெடிக்கிறது.

சமீபத்தில் சிவாஜிக்கு விழா எடுக்கப்பட்டது.. அந்த விழாவில் சிவாஜி தொண்டர் ஒருவர் முந்திக் கொண்டு வருகிறார்.. தன்னுடைய அப்பாவின் ரசிகர் என்றும் பாராமல், உடனே அவரது நெஞ்சில் கையால் குத்துகிறார் ராம்குமார் என்கிற ராங்குமார்.

சிவாஜி கணேசன்: சிவாஜியின் மீதுள்ள பற்றால் தேடி வருபவர்களை, தோளோடு கை போட்டு அணைத்திருந்தால், அவர் சிவாஜியின் மகனாக போற்றப்படுவார். ஆனால் நெஞ்சில் குத்தினால் எப்படி? எப்பேர்ப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன்? உலகம் முழுவதும் அறியப்பட்ட நடிகர்.. அவ்வளவு பெரிய நடிகரின் பெயர் முழுமையாக காப்பாற்றப்படவில்லை என்பதுதான் வேதனையாக பலரிடம் உள்ளது.

சிவாஜி குடும்பத்தில் எந்த தவறு நடந்தாலும், அது குற்றமாக பார்க்கப்படாது. சிவாஜி மரணமடைந்தபோது, ராம்குமாரின் 2வது மனைவிக்கு பிறந்த சிவக்குமாருக்கு 7 வயது.. சிவாஜி உயிரிழந்ததால், நேரில் பார்க்க செல்லும்போது, யார் இந்த சிறுவனை இங்கே கூட்டிட்டு வந்தது? என்று சிவாஜி குடும்பத்தினர் கேட்டார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு, நாளைக்கு உரிமை கொண்டாடி விடுவானோ? என்று 7 வயது சிறுவனை விரட்டியடித்த குடும்பம்தான் அந்த சிவாஜி குடும்பம். " என்றெல்லாம் கூறியிருக்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+