கே.ஆர். விஜயா இல்லேன்னா.. திருவேற்காடு கோயில் ஃபேமஸ் ஆகியிருக்காது.. பலே சிற்பங்கள்.. பிரபலம் அதிரடி
சென்னை: நம்முடைய தமிழகத்தின் கோயில்களிலுள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை.. இந்த சிலைகள் நம்மிடம் நேரில் பேசுவது போலவே இருக்கும்.. கோயில் சிற்பங்கள் குறித்து, தமிழக சுற்றுலாத்துறை இன்னமும் முயற்சி எடுத்து பிரபலப்படுத்த வேண்டும் என்று மூத்த அரசியல் விமர்சகர், டாக்டர் காந்தராஜ் கருத்து தெரிவித்துள்ளார்,
Retroluxe என்ற யூடியூப் சேனலுக்கு டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், ஸ்ரீரங்கம் கோயில் இளையராஜா விவகாரம், அதற்கு நடிகை கஸ்தூரியின் பதிலடி போன்றவைகள் குறித்து கேள்விகள் காந்தராஜிடம் எழுப்பப்பட்டது. இதற்கு காந்தராஜ் பல்வேறு விரிவான தகவல்களை பேசினார். அதன் சுருக்கம்தான் இது:

ஆரியர்கள்: "சனாதனம் என்பதே குழப்பமான ஒன்று.. மனிதர்களுக்குள் வர்க்கபேதத்தை உண்டாக்கக்கூடியது. அதை கொண்டுவந்ததே ஆரியர்கள்தான்.
ஆரியர்களுக்கு நாடு கிடையாது. எந்த ஊருக்கு போறாங்களோ, அந்த ஊரின் கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டு, அந்த கலாச்சாரத்தையே மாற்றி, தன்வசப்படுத்துவதுதான் இவர்களின் வேலை. தண்ணீர் போல நிறமும் கிடையாது, சுவையும் கிடையாது. ஆந்திராவுக்கு சென்றால் தெலுங்கு, கர்நாடகம் சென்றால் கன்னடம் பேசுவார்கள்.. இவர்களுக்கென தாய்மொழி இல்லை.
ஆனால், எல்லா இடங்களிலும் சமஸ்கிருதம் மட்டும் வெச்சிருப்பாங்க.. கடவுளையும், சித்தாந்தத்தையும் திணிப்பார்கள்.
அதனால்தான் இவைகளையெல்லாம் ஒழித்துகட்டவே கொண்டுவரப்பட்டது பெளத்தம்.. ஆவேசமாக கிளம்பிய புத்தருக்கு, அசோகர் போன்றோர் எல்லாம் ஆதரவு தந்தார்கள்.. அதனால்தான் ஆரியர்கள் அடங்கினார்கள்.. யாகம் வளர்ப்பதும் அப்போதுதான் நிறுத்தப்பட்டது. பசுமாடுகள் அடித்து கொல்லப்படுவதும் அப்போதுதான் நிறுத்தப்பட்டது.
இந்து கடவுள்கள்: இந்துக்களின் அனைத்து கடவுளையும் இவர்கள் எடுத்து கொள்ளவில்லை.. கோலவிழியம்மாள், மாரியம்மாள், கருப்பண்ணசாமி, மதுரைவீரன், அங்காள பரமேஸ்வரி, துர்க்கையம்மன்போன்ற எந்த கடவுகளையும் இவர்கள் ஏற்கவில்லை.. அம்மன் வழிபாடு ஆரியர்களுக்கு எப்போதுமே கிடையாது. ஒரு கோயில், சாதாரண நடைபாதையாக இருந்தால் அதை யாருமே கண்டுக்க மாட்டாங்க.. ஆனால், அந்த கோயிலில் வசூல் வருகிறது என்றால் உடனே உள்ளே வந்துடுவாங்க.
இதுக்கு தெளிவான உதாரணம் சொல்ல வேண்டுமானால், திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலை சொல்லலாம்.. நடைபாதை கோயிலாக இருந்தது.. அங்கு நானும் அப்போது சென்றிருக்கிறேன்.. இந்த நடைபாதை கோயிலை, பிரபலமாக்கியது நடிகை கேஆர் விஜயாதான்..
அப்போது பொம்மை என்ற பத்திரிகையில், இது குறித்து கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. இந்த கோயிலுக்கு கேஆர் விஜயா சென்று, சாமி கும்பிட ஆரம்பித்த பிறகுதான் தனக்கு வாழ்க்கையில் எல்லா நன்மையும் நடந்ததாக அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
பிரபல நடிகை: அப்போதுதான் பலருக்கும் இப்படியொரு கோயில் இருப்பதே தெரிந்தது.. இதைக்கேள்விப்பட்டு பலரும் அந்த கோயிலுக்கு போக துவங்கினார்கள்.. அந்த நேரத்தில் பத்திரிகை அதிபர் ஒருவர், இந்த கோயிலுக்கு சென்று வேண்டிக் கொள்ள, அவருக்கு சில நன்மைகள் நடந்துள்ளது.. உடனே இந்த கோயிலை மிகப்பெரிய அளவில் கட்டித்தந்தார்..
ஆனால், எப்போது இது கோயிலாக உருவெடுத்ததோ, அப்போதே அந்த கோயிலில் அதுவரை பரம்பரை பூசாரிகளாக இருந்தவர்கள் அடித்து விரட்டப்பட்டார்கள்.. அன்று தொட்டு நான் கும்பிட்ட சாமி அது.. இன்னைக்கு என்னாலும் அந்த கருவறைக்குள் போக முடியல.
தஞ்சை கோயில்கள்: நான் தமிழகத்தின் பல கோயில்களுக்கு போய்விட்டேன்..ஆனால், கங்கைகொண்ட சோழபுரம் மட்டும் இன்னும்போகவில்லை. கோயில்களில் நம்முடைய சிற்பக்கலைகள் அதிசயம் வாய்ந்தவை.. தஞ்சாவூர் கோயில்களை அதிகம் முறை பார்த்துள்ளேன்.. தமிழர்களின் கட்டிடக்கலை., பொறியாளர்களின் திறமைகளை கண்டு உலகமே வியக்குது.
காஞ்சிபுரம் கைலாச நாதர் கோயிலில், கர்ப்பகிரகம் பக்கத்தில், ஒரு இடத்தை மரக்கதவு போட்டு மூடி வைத்திருப்பார்கள். அதை திறந்து பார்த்தால், சிவபெருமான், பார்வதியின் நடன சிற்பம் தெரியும். ஒவ்வொரு சிற்பங்களும் நம்மிடம் பேசுவது போலவே இருக்கும். இப்படி கோயில் சிற்பங்களில் இன்னும் ஏராளமாக அற்புதங்கள் உள்ளன. நம்முடைய சுற்றுலாத்துறை இதை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும்" என்றெல்லாம் பேசியிருக்கிறார் டாக்டர் காந்தராஜ்.












Click it and Unblock the Notifications