பிரபல நடிகை மாளவிகா துடிதுடித்து சொன்ன வார்த்தை.. "மகனுக்காக போகாத கோவில் இல்ல, கும்பிடாத சாமி இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நம்மால் இந்த உலகத்திற்கு வந்த ஒரு உயிர், ஒரு தவறும் செய்யாமல் படும் அவஸ்தையை, எந்தவொரு பெற்றோராலும் சகித்துக் கொள்ளவே முடியாது" என்று மனம் நொந்து சொல்லியிருக்கிறார் நடிகை மாளவிகா அவினாஷ்.

பாலசந்தர் இயக்கிய அண்ணி சீரியல் மூலம் பிரபலமானவர் மாளவிகா அவினாஷ்... இதற்கு பிறகு, தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, மாதவன், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் அக்கா, அண்ணி போன்ற கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர்.

malavika aavinash actress malavika

ஜே ஜே, ஆறு, டிஸ்யூம், கேஜிஎப், ஆதி, கள்வனின் காதலி, ஜெயம் கொண்டான், டிஷ்யூம், வந்தான் வென்றான், பைரவா உள்ளிட்ட படங்களிலும் நடித்தவர். சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும், டிவி சீரியலில் இவர் நடித்த ராஜராஜேஸ்வரி சீரியல், அண்ணி சீரியல், சிதம்பர ரகசியம், அண்ணி சீரியல், செல்லமே சீரியல்களில் நடித்ததன்மூலம், ஏராளமான ரசிகர்கள் இன்றும் மாளவிகாவுக்கு உண்டு.

பிரபல வில்லன் நடிகர் அவினாஷை திருமணம் செய்துள்ளார் மாளவிகா.. கடந்த 2001 ம் ஆண்டு அவினாஷ் மற்றும் மாளவிகாவுக்கு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு மாளவிகா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், தன்னுடைய மகன் கால்வியை பற்றி சில விஷயங்களை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அம்மா டான்ஸ்: "சினிமா பேக்கிரவுண்டே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவள்தான்.. என்னுடைய அம்மாவிற்கு டான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால், நான் பள்ளியில் படிக்கும்போதே, பாட்டு டான்ஸ் கற்றுக்கொண்டேன். குழந்தை நட்சத்திரமாகவும் சில படங்களில் நடித்தேன். சீரியல்களிலும் அப்படித்தான் சான்ஸ் கிடைத்தது.

சினிமாவில் நடிக்கும்போது, அவினாஷை சந்தித்தேன். எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது. ஆனால், காதல் கிடையாது.. ஏனென்றால், எங்கள் இருவருக்குமிடையே, 15 வருடம் வயது வித்தியாசம் உள்ளது. எனினும், ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டதால், திருமணம் செய்து கொண்டோம்..

என்னுடைய மகன் கால்வி மிகவும் அழகாக இருப்பான்... நல்ல முகத்தோற்றம் அவனுக்கு.. ஆனால், அவனால் பேச முடியவில்லை.. பார்த்தால் ஒரு வித்தியாசமும் தெரியாது..

ஸ்பெஷல் சைல்ட்: ஸ்பெஷல் சைல்ட் என்று தெரிந்ததுமே, நாங்கள் இருவரும் சுக்குநூறாக நொறுங்கி போய்விட்டோம். ஏற்கனவே நாங்கள் இந்த வேதனையில் உள்ளபோது, ரோட்டில் போறவங்க, வர்றவங்க , சொந்தக்காரங்க எல்லாருமே , பல டாக்டர்களை பற்றி சொல்வார்கள்.. அந்த டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க, இந்த டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க என்று அட்வைஸ் செய்துட்டே இருப்பாங்க.. இதுதான் எனக்கு கொடுமையா இருக்கும்.

என் மகனை டெஸ்ட்டுக்காக, எத்தனையோ டாக்டர்களிடம் அழைத்து சென்றிருக்கிறேன்.. எனினும், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.. கர்ப்பத்திலிருக்கும்போதே டெஸ்ட் செய்திருந்தால், குழந்தையின் நோய் என்னவென்று முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் அப்படி வசதி இல்லாததால், எனக்கும் அதைபற்றி தெரியாமல் போய்விட்டது.

தாயின் ஆசை: எந்த ஒரு தாயின் உச்சபட்ச ஆசையும், தன்னை தன்னுடைய குழந்தை அம்மா என்று அழைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்க முடியும்.. ஆனால் என் மகன் என்னை அம்மா என்று கூப்பிட்டதே இல்லை.. அவனால் கூப்பிடவும் முடியாது...

என்ன பிரச்சனை என்று எங்களுக்கு தெரியாததால், அவன் நாளைக்கு உயிரோடு இருப்பானா? இருக்க மாட்டானா என்று நினைத்தே 15 வருடங்கள் ஓடிவிட்டது.. இந்த 15 வருடமும் எங்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டோம்.. என் மகனுக்காக போகாத கோவில் இல்ல, கும்பிடாத சாமி இல்லை.. யார் யார் என்னென்ன சொல்றாங்களோ, அத்தனையும் செய்துவிட்டோம்.. இதுக்காக என்னிடம் என் கணவர் கோபித்து கொண்டார்.. பிறகு, ஒருத்தருக்கொருத்தர் குற்றம் சொல்வதை நிறுத்தி கொண்டோம்

வேதனை: நம்மால் இந்த உலகத்திற்கு வந்த ஒரு உயிர், ஒரு தவறும் செய்யாமல் படும் அவஸ்தையை, எந்தவொரு பெற்றோராலும் சகித்துக் கொள்ளவே முடியாது" என்றெல்லாம் மிகவும் வேதனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+