நடிகை மீது தங்க காசை கொட்டி.. அதுவிடுங்க, கட்டி வைத்து தாக்கப்பட்ட ஹீரோ.. நடிகர் சிவகுமார் கண்ணியம்
சென்னை: "தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட ஹீரோயினுடன், ஹீரோவுக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பேச வேண்டும்.. படத்தின் ஹீரோவை யாரும் மாற்ற முடியாது. எனவே அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ஹீரோயினை மாற்றிவிடுவார்கள். திரைப்பட உலகில் இதை அந்த காலத்திலிருந்தே தவிர்க்க முடியாது" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில், பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தந்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப். "90கள் காலகட்டத்தில், சினிமாவில் நடைபெற்ற சில அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு தங்க நாணயங்களை வழங்கும் பழக்கம் இருந்தது..

வசதி படைத்தவர்கள் தங்க செயின்கள், வைர நெக்லஸ்களை தருவார்கள்.. அன்பளிப்பாகவும், வெகுமதியாகவும், இந்த தங்கத்தை வழங்கினார்கள்.. ஈசிஆர் பங்களா, பண்ணை வீடுகளில் பார்ட்டிகளும் நடக்கும்.
டான்சர் நடிகை
ஒரு பெரிய நடிகர், தன்னுடன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடிய நடிகைக்கு இப்படி தங்கத்தை வாரி வழங்கினாராம்.. இத்தனைக்கும் அந்த டான்ஸர் நடிகை, ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்தான்.. அந்த பாடலில் பார்ப்பதற்கு அழகாகவும், கலர்புல்லாகவும் இருந்தார்.. அந்த பாட்டும் படுஹிட்டாகிவிட்டது.. இதையடுத்து, அந்த டான்சர் நடிகைக்கு தங்கத்தை அப்பெரிய நடிகர் கொட்டி தந்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.
இன்று சாமியாராக மாறி போயிருக்கும் புவனேஸ்வரி, தன்னை ஒரு பேட்டி எடுக்க வேண்டும், அது பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்று என்னிடம் சொன்னார்..
தங்க தட்டில் சாப்பாடு
அந்த பேட்டியில், "அட்ஜெஸ்ட்மென்ட் செய்வதில் என்ன தவறு" என்று சொன்னார்.. இதையே டைட்டிலாக வைத்து அந்த கட்டுரை எழுதினேன். அது பரபரப்பாக அன்று பேசப்பட்டது.. புவனேஸ்வரிக்கு ஓவர்நைட்டில் 19 சீரியல்கள் புக் ஆகிவிட்டன.. இதைப்பார்த்து பொறாமைப்பட்ட போட்டி நடிகை ஒருவர், தனக்கும் அப்படி ஒரு பேட்டியை எடுக்கும்படி என்னிடம் கேட்டார்..
அந்த காலத்தில் எல்லாம் தங்கம் விலை குறைவாகவே இருந்தது. தியாகராஜ பாகவதர் தங்கத்தட்டிலேயே சாப்பிடுவாராம்.. பலவிதமான பதார்த்தங்களை அந்த தங்க தட்டிலே சுற்றி வைத்து கொண்டு சாப்பிடுவார்.. அதேபோல தனக்கு மிகவும் நெருக்கமானவர்களை மட்டும், தங்க தட்டில் சாப்பாடு போடுவாராம். ஏதோ ஒரு படத்துக்காக விமர்சனம் எழுதியதற்காக, கவிஞர் சுரதாவை உட்கார வைத்து தங்க தட்டில் உணவு பரிமாறினாராம் இதை சுரதாவே பதிவு செய்துள்ளார்.
ஹீரோவை கட்டிப்போட்டு
டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் டீசன்ட்டாகவே இருந்தனர்.. மார்டன் தியேட்டர்சில் சொந்தமாக 100 படங்களை தயாரித்தார்.. அவ்வளவு பணம் வைத்திருந்தாலும், பெண்கள் விஷயத்தில் கண்ணியமாக இருந்தார்.. நடிகர்கள் யாராக இருந்தாலும்சரி, கண்டிப்பு கடைப்பிடித்தார்.. தன்னுடைய ஒரு படத்தில் நடிக்கும் அந்த பிரபல ஹீரோ, காலை 10 மணி வரைக்கும் ஸ்டுடியோவுக்கு வராமல் போய்விட்டார்..
இதனால் கடுப்பான தயாரிப்பாளர், தானே மேக்கப் போட்டுக் கொண்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார்.. 10 மணிக்கு மேல் வந்த அந்த நடிகரை, கட்டிப்போட்டு வைத்து, தான் தந்த அட்வான்ஸ் பணத்தையும் திரும்ப பெற்றுக்கொண்டார்.. இப்படி தன்னுடைய தொழிலின்மீது பக்தியை வைத்து, தானுண்டு தன்னுடைய வேலையுண்டு என்று பலரும் அன்று சின்சியராக இருந்தனர்.
நடிகர் சிவகுமார் கண்ணியம்
நடிகர் சிவகுமார் எப்போதுமே கண்ணியமானவர்.. அன்று பிரபலமாக இருந்தபோதுகூட, அதிகமான சம்பளத்தை வாங்கவில்லை.. விதவித கார்கள், பங்களா வாங்கி வேறு வகையான பழக்கங்களும் வந்துவிடும் என்பதால், சம்பளத்தைகூட அதிகம் வாங்காமல் தவிர்த்தவர் சிவகுமார்..
ஆட்டுக்கார அலமேலு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டது.. உடனே படம் எடுத்த சின்னப்பா தேவர் சிவகுமாரை அழைத்து, வெறும் 30 ஆயிரம் சம்பளம் வாங்குறியே? இனிமேல் 60 ஆயிரம் வாங்கி கொள் என்று பணத்தை தர முன்வந்தார்.. ஆனால், சிவகுமார் வேண்டாம் முதலாளி என்று சொல்லி அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டாராம்.. போதும் என்ற மனநிலைமையிலேயே சிவகுமார் இருந்தார்.. இதுபோல வேறு நடிகர்கள் இருந்ததாக தெரியவில்லை என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications