பிரபலத்தின் பங்களாவில் நடக்கும் கலைச்சேவை பார்ட்டிகள்? சொர்க்க பூமியில் கைமாறும் ஜோடிகள்? உண்மையா?
சென்னை: பட தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட ஹீரோயினுடன், ஹீரோவுக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பேச வேண்டிய நிலைமையும் உள்ளது.. ஒருவேளை அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்த கதாநாயகியை மாற்றிவிடுவார்கள். திரைப்பட உலகில் இதுபோன்ற அட்ஜெஸ்ட்மென்ட்டை அந்த காலத்திலிருந்தே தவிர்க்க முடியவில்லை" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சமீபத்தில் பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில், கலைச்சேவை குடும்பம் குறித்து, பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தந்துள்ள பேட்டியொன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
சமீபத்தில் Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றை தந்திருந்தார்..

அதில், "90கள் காலகட்டத்தில், சினிமாவில் நடைபெற்ற சில அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு தங்க நாணயங்களை வழங்கும் பழக்கம் இருந்தது.. வசதி படைத்தவர்கள் தங்க செயின்கள், வைர நெக்லஸ்களை தருவார்கள்.. அன்பளிப்பாகவும், வெகுமதியாகவும், தங்கத்தை தந்தார்கள்.
பண்ணை வீடு பார்ட்டி
ஈசிஆர் பங்களா, பண்ணை வீடுகளில் பார்ட்டிகளும் நடக்கும். ஒரு பெரிய நடிகர், தன்னுடன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடிய ஸோலோ டான்சருக்கு தங்கத்தை வாரி வழங்கினாராம்.. இத்தனைக்கும் அந்த டான்ஸர் நடிகை, ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்தான்.. அந்த பாடலில் பார்ப்பதற்கு அழகாகவும், கலர்புல்லாகவும் இருந்தார்.. அந்த பாட்டும் படுஹிட்டாகிவிட்டது.. எனவே, அந்த டான்சர் நடிகைக்கு தங்கத்தை அப்பெரிய நடிகர் கொட்டி தந்ததாக 90'களில் கேள்விப்பட்டுள்ளேன்.
கண்ணியமான தயாரிப்பாளர்கள்
ஆனால், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் டீசன்ட்டாகவே இருந்தனர்.. குறிப்பாக, மார்டன் தியேட்டர்சில் சொந்தமாக 100 படங்களை தயாரித்தார்.. அவ்வளவு பணம் வைத்திருந்தாலும், பெண்கள் விஷயத்தில் கண்ணியமாக இருந்தார்.. நடிகர்கள் யாராக இருந்தாலும்சரி, கண்டிப்பு கடைப்பிடித்தார்.. தன்னுடைய தொழிலின்மீது பக்தியை வைத்து, தானுண்டு தன்னுடைய வேலையுண்டு என்று பல தயாரிப்பாளர்கள் தமிழ்சினிமாவில் இருந்ததை மறுக்க முடியாது" என்றெல்லாம் கூறியிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் Realone Media என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், கோடம்பாக்கத்தில் கலைச்சேவை செய்யும் ஒரு குடும்பத்தை பற்றி விரிவாகவே பேசியிருக்கிறார்.
வாங்க பழகலாம்
"அந்த கலைகுடும்பம், தமிழ் சினிமாவில் மிகவும் ஃபேமஸ் ஆனது.. பிறமாநில பிரபலங்கள் முதல் நடிகைகள் வரை, இந்த கலைக்குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.. இந்த கலைக்குடும்பம் குறித்து, பிரபல தெலுங்கு வில்லன் நடிகர் என்னிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார்..
"வாங்க பழகலாம்" என்ற ரீதியில் அந்த கலைக்குடும்பத்தின் சேவைகள் அதிகம்.. இந்த கலைகுடும்பத்தின் சார்பில் பார்ட்டிகள் அடிக்கடி நடப்பதும் சகஜம்... இதற்காகவே அந்த பங்களாவில் கார்கள் வரிசையாக செல்லும்,... கார் பார்க்கிங்கில் ஏராளமான கார்கள் இருக்கும்..
இந்த பார்ட்டிகளில்தான் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் என ஒருவருக்கொருவர் அறிமுகம் நடக்கும்.. சில நடிகர்கள், நடிகைகளை சந்திக்க முடியாத சூழல் இருந்தாலும், இதுபோன்ற பார்ட்டிகளில் கலந்து கொள்ளும்போது, சந்திப்புகள் எளிதாகிவிடுகிறது.
பார்த்திபன் - சீதா
அதேபோல, இதுபோன்ற பார்ட்டிகளில் ஜோடிகளை மாற்றிக் கொள்ளலாம்.. சொர்க்க பூமி மாதிரியாக அந்த பங்களா காணப்படும்.. சுதந்திரமான உலகம் அது.
இங்கு எந்தவிதமான தடையும், விலங்கும் கிடையாது.. ஆட்டம், பாட்டம், குத்தாட்டம் என பங்களாவே அமர்க்களப்படும்.. பார்ட்டிகளை இப்படி வைப்பதால், பணமும், படங்களில் வாய்ப்புகளும் எளிதாக கிடைக்கும்..
இந்த குடும்பம் நடத்திய பார்ட்டிக்கு பார்த்திபன் சென்றுவந்ததுதான், சீதா-பார்த்திபன் பிரிவுக்கு காரணம், என்றுகூட சிலர் சொன்னார்கள்.. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications