முன்னாள் கணவர் இறந்த நிலையில் நடிகை வனிதா வெளியிட்ட பதிவு.. இந்த மாதிரியா? கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: நடிகை வனிதாவின் முன்னாள் கணவர் பீட்டர் பால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த நேரத்தில் நடிகை வனிதாவின் கடைசி instagram பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
என்னதான் இருந்தாலும் இந்த நேரத்தில் இந்த பதிவு தேவையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நடிகர் விஜயகுமாரின் மகள் ஆன வனிதா ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் ஹீரோயினியாக நடித்து வந்தார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர் வெள்ளி திரையில் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆக இருந்த நிலையில் பிறகு சின்ன திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அந்த சீசனில் கொளுத்தி போட்ட சண்டை பெரிய அளவில் வெடித்து வந்தது. ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அடிக்கடி கண்டெண்ட் கொடுத்து வந்ததாலோ என்னவோ இவரை அதிகமான ரசிகர்கள் திட்டினாலும் இவரால் இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக இருப்பதாக கூறி வந்தனர்.
அதே நேரத்தில் நடிகை வனிதாவின் குடும்ப பிரச்சனையும் சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் வெட்ட வெளிச்சம் ஆனது தான். நடிகை வனிதாவின் திருமண வாழ்க்கை குடும்ப வாழ்க்கையின் திறந்த புத்தகமாக அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகத்தான் இருந்து வருகிறது. அவர் 2020 ஆண்டு லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து இருந்தார்.
தங்கள் மகள்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்று சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இவர்கள் குடும்பத்தோடு கோவா சென்று இருந்த நிலையில் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் பீட்டர் பாலை நடிகை வனிதா வீட்டை விட்டு வெளியேற்றியதாக தகவல்கள் வெளியானது
அதற்குப் பிறகு இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பீட்டர் பால் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுகுறிப்பு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இப்படிப்பட்ட நிலையில் வனிதா நேற்றைய தினம் தன்னுடைய மகள்களோடு பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்க சென்றிருக்கிறார். அப்போது தன்னுடைய மகளுடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறா
என்ன இருந்தாலும் ஒரு காலத்தில் காதலித்த நபர் இறந்துவிட்டார் என்று தெரிந்தும் கூட ஜாலியாக இப்படி ஊர் சுற்றுகிறார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து கமாண்ட் அனுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் வனிதா பதிவுகளை வெளியிட்டது நேற்று என்பது பலரும் கவனிக்க மறந்து இருக்கிறார்கள்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications