பிக் பாஸ் 7: நிக்சனுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்.. கமல்ஹாசன் கேட்ட கேள்வி.. செம ட்விஸ்ட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நிக்சன் சக போட்டியாளராக இருந்த வினுஷா தேவி உடல் அமைப்பு குறித்து உருவ கேலி செய்திருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து வினுஷா தேவி தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருந்த நிலையில் வினுஷாவிற்கு ஆதரவாக நிக்சனை பலரும் பற்றி திட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் கடந்த வாரத்திலும் நிக்சன் பேசியது பற்றி கமல் எந்த கேள்வியும் கேட்கவில்லை என்பது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் நிக்சன் விசித்திராவிடம் தன்னை மரியாதையாக சார் என்று அழைக்கும் படி கூறியது பற்றி கமல் விசாரிக்கிறார். கூடவே தான் அப்படி சொன்னது ஞாபகம் இல்ல சார் என்று நிக்சன் சொல்ல, அதை நாங்கள் பார்த்தோம் என்று கமல் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் நிக்சன் ஒரு பெண்ணைப் பற்றி அவருடைய உடல் அமைப்புகள் குறித்து கேவலமாக வர்ணித்தது பற்றி விஜய் டிவியே அவருக்கு நினைவு படுத்திய போது கூட கமல்ஹாசன் அது குறித்து கேள்வி எழுப்பாமல் இருந்த நிலையில் இப்போது விசித்ராவை சார் என்று கூப்பிட சொன்னது பற்றி கேள்வி எழுப்பு இருக்கிறாரே? இது என்ன கணக்கு? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதோடு ஒருவேளை இன்றைக்காவது நிக்சன் ஏற்கனவே வினுஷா பற்றி பேசியது குறித்து கேள்வி கேட்பாரா? என்று ரசிகர்கள் கேள்வியோடு காத்திருக்கின்றனர். ஏற்கனவே ஐஷு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு காரணம் நிக்சன் தான் என்று பிக் பாஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டியாளர்களுக்கும் தெரிந்திருக்கிறது.
அது குறித்து தான் நேற்றைய எபிசோடில் கூட விசித்ரா மற்றும் அர்ச்சனா இருவரும் நிக்சனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அர்ச்சனா, உன்னால் தான் ஐசு இந்த 40 நாளில் எதுவுமே செய்யாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்று நேரடியாகவே நிக்சனிடம் கூறியிருந்தார்.
குழந்தைகளும் பெரியவர்களும் பார்க்கும் நிகழ்சியில் நிக்சன் மற்றும் ஐசு இருவரும் முத்தக்காட்சிகளில் ஈடுபட்ட போது கூட அது குறித்து கமல் கேள்வி எழுப்பவில்லை என்பதும் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த நிலையில் இன்று விசித்ராவிற்க்கு ஆதரவாக நிக்சனிடம் கமல் கேள்வி கேட்டு இருக்கிறார்.
அதனால் ஏற்கனவே கமல்ஹாசன் மாயாவிற்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார் என்று பலரும் பேசி வருவதால் இப்போது விசித்திராவிற்க்கு சப்போர்ட் செய்கிறாரா? என்றும் பலர் கொழுத்தி போடுகின்றனர். அதாவது தற்போது வெளியான ப்ரோமோவில் கூட விசித்ரா கமலிடம் நிக்சன் சார் சொன்னாரு, நான் உங்களை விசித்ரா மேடம்னு கூப்பிடனும்னா நீங்க என்னை சார் என்று கூப்பிடுவீங்களா? என்று கேட்டார்.
நான் அதனால அவரை நிக்சன் சார் என்று தான் சார் கூப்பிடுறேன் என்று சொல்லி இருந்தார். அதற்கு நிக்சன் என்னை சார் என்று கூப்பிட சொல்லி நான் சொல்லவே இல்ல என்று சொல்ல, அதற்கு கமல் நீங்க சொன்னதை நான் பார்த்தேனே என்று சொல்கிறார். அதற்கு நிக்சன் எனக்கு ஞாபகம் இல்லை என்று சொல்ல அதற்கு கமல் எங்களுக்கு ஞாபகம் இருக்கு எல்லாமே என்று சொல்கிறார்.
அப்போது அங்கிருக்கும் பொதுமக்கள் கைதட்டுகின்றனர். அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் உங்களுக்கு இது தப்பாவே தோணலையா? என்றும் நிக்சனிடம் கேள்வி கேட்டிருக்கிறார். இந்த ப்ரோமோ வெளியான பிறகு கமல்ஹாசன் கடந்த வாரம் சொதப்பியதை இந்த வாரம் சரி பண்ண பார்க்கிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனாலும் இன்று என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications