எட்டிப்பார்த்து... ஏக்கம் மூட்டி.. இன்பத்தை காட்டிய தர்ஷா.. ஓடோடி வந்த ரசிகர்கள்!
சென்னை : வெள்ளித்திரைக்கு போனாலும் ரசிகர்களுக்காகவே பார்த்துப்பார்த்து போட்டோஸ்கள் வெளியிட்டிருக்கும் தர்ஷாவுக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை பொழிகிறார்கள்.
அடடா என்ன அழகு என்று சொல்வதுபோல தன்னுடைய அழகை எடுப்பாக காட்டியிருக்கும் தர்ஷா குப்தாவை பார்ப்பதற்காக ஓடோடி வரும் ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் கூட்டம் களைகட்டுகிறது.
எடுப்பாய் இருக்கும் இடுப்பை பட்டும் படாமல் காட்டி ரசிகர்கள் கண்கள் தட்டுத்தடுமாற வைத்திருக்கிறாரே என்று பலர் ஏங்கி போய் இருக்கிறார்கள்.

எட்டிப்பார்க்கும் பேரழகு
அழகழகாய் மாறும் வானிலைக்கு ஏற்ப தானும் விதவிதமாய் அழகை காட்டி கலக்கிய தர்ஷா குப்தாவை பார்ப்பதற்காக அவருடைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பெரிய க்யூவில் கமெண்ட்டுகளை போட்டு கொண்டிருக்கின்றனர். இவர் போஸ்ட் போட்ட ஒரு சில மணி நேரத்திற்குள்ளே கமெண்ட்டுகள் மலை போல குவிந்து வருகிறது. அதுவும் இவருடைய அழகை வர்ணிக்கவா அல்லது வாழ்த்துக்களை பொழியவா என்று தெரியாமலே ஒரு சிலர் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருக்கின்றனர். காலம் காலமாக அழகை ரசிக்கும் ரசிகர்கள் தற்போது சில காலங்களாக தர்ஷாவை மட்டுமே ரசித்து வருகிறார்களாம். அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும், குழந்தையின் செல்ல சிரிப்பாக இருந்தாலும் சரி, குமரியின் கொஞ்சல்களாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகாக தான் இருக்கும். அதை பார்த்து பார்த்து ரசிப்பது தான் மனித மனமே. தற்போது அந்த மனதினை அலைபாய வைத்திருக்கிறார் தர்ஷா குப்தா.

அழகிலும் ருத்ரதாண்டவம்
இவருடைய ருத்ர தாண்டவம் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது டிரைலர் வெளியாகி பெரும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.இவர் முதல் முறையாக திரை படத்தில் நடித்திருப்பதால் அவருடைய ரசிகர்கள் பெரிய அளவில் இவருக்கு சப்போர்ட் கொடுத்து வருகின்றனர். பொதுவாக வெள்ளித்திரையில் நடித்து அங்கு தனது மார்க்கெட் குறைந்த பிறகு தான் பல நடிகைகள் சின்னத்திரையில் காலடி எடுத்து வைப்பார்கள். ஆனால் தற்போதெல்லாம் ஒரு சில நடிகைகள் சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தாலும் தங்களுடைய நடிப்பாலும், அழகாலும் நாளுக்குநாள் முன்னேறி வெள்ளித்திரையில் மின்ன தொடங்கிவிட்டனர். அதில் தர்ஷா குப்தாவும் ஒருவர். இவருடைய சொந்த முயற்சியினால் சின்னத்திரையிலிருந்து இன்று வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து ஒரு திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.

எல்லாமே அத்துபடி தான்
தர்ஷா குப்தா சின்னத்திரையில் முதல்முதலில் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலின் மூலமாகத்தான் அறிமுகமானார். இந்த சீரியலில் கிராமத்து தேவதையாக பாவாடை தாவணியில் கலக்கியிருப்பார். அப்படியே கிராமத்து பட்டாம்பூச்சி போன்றே இவர் மாறி தன்னுடைய நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்து விட்டார். முதல் சீரியலில் கதாநாயகியாக நடித்தாலும் பிறகு இவருக்கு கிடைத்த வாய்ப்பு எல்லாம் நெகட்டிவ் கேரக்டர் தான். பொதுவாக நெகட்டிவ் கேரக்டர் என்றாலே கண்களாலே மிரட்டும் வில்லிகளாகத்தான் ரசிகர்களின் கண்களுக்கு தெரியும். ஆனால் இவருடைய க்யூட்டான அழகைப் பார்த்து இவர் செய்யும் வில்லத்தனத்தை எல்லாம் ரசிக்கவே பல ரசிகர்கள் தொடங்கிவிட்டார்கள். இவருக்கு சீரியல் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

அப்போ டிக்டாக் இப்போ இன்ஸ்டாகிராம்
டிக் டாக் ஆக்டிவாக இருந்த கால கட்டத்தில் தன்னுடைய க்யூட்டான அழகாலும் பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகை காட்டி பல ரசிகர்களை சமூக வலைத்தளத்தில் பெற்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் எவ்வளவுதான் இவர் பிஸியாக இருந்தாலும், டிக்டாக்கில் வீடியோக்களை அப்லோடு செய்வதை மட்டும் நிறுத்தாமல் இருந்து கொண்டு இருந்தார். அதனால் இவர் ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமான நபராக மாறி விட்டார். தன்னுடைய க்யூட்டான நடிப்பை பார்த்து இவரை பின்தொடர்ந்த நடிகர்கள் எல்லாம் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் தொடர ஆரம்பித்து விட்டனர். வெள்ளித்திரையில் பெரிய நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். தற்போது இவர் வெள்ளித்திரையில் நடிக்கப்போகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் இவரை விடவும் இவருடைய ரசிகர்கள்தான் சந்தோஷம் அடைந்தனர்.

எல்லாமே ரசிகர்களுக்காக தான்
இவர் நடித்துக்கொண்டிருந்த செந்தூரப்பூவே சீரியலில் இருந்து இவர் விலகிவிட்டார். ஆனாலும் ரசிகர்கள் இவரை ரொம்பவே மிஸ் பண்ணி வருகிறார்களாம். இந்த சீரியலில் இவருடைய நடிப்பு இல்லாததால் பலர் சீரியல் பார்ப்பதையே விட்டுவிட்டோம் என்று ஃபீல் பண்ணி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் அதிக படங்கள் நடிக்க வேண்டும் என்று தங்களுடைய வாழ்த்துக்களையும் கூறுகின்றனர். சீரியலில் நடிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடாமல் இருந்து விடாதீர்கள் என்று தான் இவருடைய ரசிகர்கள் அன்புக்கட்டளை இடுகின்றனர். ரசிகர்களின் ஆசைக்கு ஏற்ப தர்ஷாகுப்தாவும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி போஸ்ட் போட்டு கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது கிரே கலர் புடவையிலும் செமையான ஒரு போட்டோ சூட்டை எடுத்திருக்கிறார். இவருக்கு மாடர்ன் உடையை விடவும் புடவையில் தான் கலக்குகிறார் என்று ரசிகர்கள் கூறியிருக்கும் நிலையில், தற்போதைய இவருடைய ஃபோட்டோவை பார்த்து பலர் பெருமூச்சு விட்டு வருகின்றனர். இப்படியே தினமும் பார்த்துக் கொண்டே இருந்தாலே போதும் சோறு தண்ணி கூட தேவையில்லை என ஒரு கூட்டம் இன்ஸ்டாகிராமில் இவருக்காக சுற்றிக்கொண்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications