பிக் பாஸ் தமிழ் 8 லிருந்து கமல் விலகியதற்கு காரணம் பிரதீப்பா? இப்படியுமா யோசிப்பாங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் தான் விலகப்போவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கும் நிலையில் கமல்ஹாசன் இந்த முடிவெடுத்து இருப்பதற்கு காரணம் பிரதீப்பிற்கு கடந்த சீசனில் கமல்ஹாசன் செய்த விஷயம் தான் அவருக்கு இப்போது திருப்பி தாக்குகிறதா என்று ரசிகர்கள் கருத்து மோதல்களில் ஈடுபடுகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகிய கமல்ஹாசன் இப்ப வரைக்கும் கதாநாயகனாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். உலகநாயகன் என்று சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை கொடுத்தது.

Vijay TV Bigg Boss Entertainment

ஆனாலும் சின்னத்திரை களத்தையும் தன்னுடைய அரசியல் சொற்பொழிவு ஆற்றும் களமாக மாற்றி கமல்ஹாசன் முதல் சீசனில் இருந்து ஏழாவது சீசன் வரைக்கும் லாவகமாக கையாண்டு கொண்டிருந்தார். அதுபோல புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசன் வார இறுதி நாட்களில் சில சிறந்த புத்தகங்கள் பற்றிய சொற்பொழிவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் கடந்த சில சீசன்களாக கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு தலை பட்சமாக செயல்படுகிறார் என்ற விவாதம் அளவுக்கு அதிகமாக இருந்தது. பொதுவாக பாசிட்டிவ் ஒரு இடத்தில் இருந்தாலே அங்கே நெகடிவ் பஞ்சமில்லாமல் தான் இருக்கும். அதுபோல்தான் கமல்ஹாசன் எந்த மாதிரி யாருக்கு சப்போர்ட் செய்தாலும் அது சமீபத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

இதன் வெளிப்பாடு தானோ என்னவோ இந்த முறை கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகப்போவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே நடந்து முடிந்த ஏழாவது சீசனில் மாயா கேங்கிற்கு ஆதரவாக கமல்ஹாசன் அதிகமாக பேசுகிறார் என்று பெரிய குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது. அதுபோல அந்த சீசனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் பிரதீப் வெளியேற்றப்பட்டதுதான்.

பிரதீப் ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான நாளிலிருந்து இந்த சீசன் டைட்டிலை தட்டி தூக்கி விடுவேன் என்று பெரிய அளவில் நம்பிக்கையாக இருந்தார். ஆனால் அவர் மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுகளால் பிரதீப் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் பிரதீப் இருப்பது பெண்களுக்கு ஆபத்து என்று ஒரு காரணத்தை சொல்லி அனுப்பப்பட்டது பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது.

அதே நேரத்தில் பிரதீப் வெளியேற்றப்படும் போது கமல்ஹாசன் சில வார்த்தைகளையும் பேசி இருந்தார். அதாவது பிரதீப்புக்கு எதிராக சிலர் சிவப்பு கொடி தூக்கி கம்பளைண்ட் சொல்லி இருக்கிறார்கள். அது குறித்து நான் சேனல் தரப்பில் பேசினேன் அவர்கள் பிரதீப் வெளியேற வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தார்கள். அவர்கள் இந்த முடிவு எடுக்கவில்லை என்றால் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்து இருப்பேன் என்று கறாராக சொல்லியது பெரிய அளவில் பேசப்பட்டது.

அதற்குப் பிறகு அடுத்த வாரமே கமல்ஹாசன் நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளால் தான் நாங்கள் இந்த முடிவெடுத்தோம் என்று போட்டியாளர்கள் வாயாலையே சொல்லும் வகையில் கேள்விகளை டுவிஸ்டாக கையாண்டு பிரதீப் மீது குற்றம் சுமத்திய போட்டியாளர்களிடம் கேட்டிருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் பிரதீப்பை அதிரடியாக வெளியேற்றியதுதான் இந்த சீசனில் கமல்ஹாசன் கலந்து கொள்ளாமல் போய்விட்டது கர்மா திருப்பித் தாக்கி இருக்கிறது என்றெல்லாம் இப்போது இணையத்தில் ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் கமல்ஹாசன் தான் திரைப்பட சூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் தன்னால் பிக் பாஸ் தமிழ் 8இல் கலந்து கொள்ள முடியவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் ரசிகர்கள் இதை நம்ப மறுத்து பிரதீப்பின் வருத்தத்தால் தான் கமல்ஹாசன் இந்த சீசனில் கலந்து கொள்ள முடியாமல் ஆகிவிட்டது என்று கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+