கார்த்திக்கால் விஷம் குடித்த ஹீரோயின்? அதுவிடுங்க, முத்துராமன் சொத்து அவ்ளோதானா? நவரச நாயகன் கிரேட்
சென்னை: நடிகர் கார்த்திக் எல்லாரும் விரும்பக்கூடிய ஹீரோவாக இருந்தார்.. பிரபு போலவே கார்த்திக்கையும் பல நடிகைகள் விரும்பினார்கள். ஆங்கிலம் பேசுவது, ஈகோ இல்லாமல் ஜோவியலாக பேசுவது அனைவருக்குமே கார்த்திக்கிடம் பிடித்தமான விஷயங்கள் என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியிருக்கிறார். அத்துடன் கார்த்திக் குறித்த பல்வேறு நல்ல விஷயங்களையும் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "காலில் பிரச்சனை ஏற்பட்டதால், சர்ஜரி செய்தார் கார்த்திக்.. இது முட்டியில் சில தொந்தரவுகளை தந்துவிட்டது. பிறகு மருத்துவமனையில சிகிச்சை பெற்று, ஓய்விலும் இருந்து வந்தார்.. இப்போது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள தொடங்கியிருக்கிறார்.. இப்போது நன்றாகவே நடக்கிறார்.. நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள துவங்கியிருக்கிறார்..

அப்பா சொத்துக்கள்
கார்த்திக்கின் வீட்டிலும் சொத்து பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.. அவரது அப்பா சம்பாதித்த சொத்தினை, கார்த்திக்கின் அண்ணன் அனுபவித்து வருவதாக தெரிகிறது. அப்பாவின் சொத்து தனக்கும் இருக்க வேண்டும் என்று கார்த்திக் நினைக்கிறார்..
படங்களும் தற்போது கைவசம் எதுவும் இல்லை.. படம் இருந்தால்தான் சுறுசுறுப்பு, பரபரப்பு இருக்கும்.. படங்கள் இல்லாமல் வெளியே போனாலும் துக்கம் விசாரிப்பதுபோல கேட்பார்கள்.. அதனால் பல நடிகர்களுக்கு அர்த்த ராத்திரியில் வெளியே நடமாடும் நிலைமை உள்ளது.. கார்த்திக்குக்கு மது அருந்தும் பழக்கம் அவ்வளவாக இல்லை.. கார்த்திக்கின் முதல்மனைவிக்கு 2பிள்ளைகள்.. இரண்டாவது மனைவிக்கு 1 பிள்ளை இருக்கிறார்கள்..
யாரந்த நடிகைகள்
நவரச நாயகன் என்று பீக்கில் இருந்தபோது, அவரது படங்களைவிட, அவர் சம்பந்தப்பட்ட கிசுகிசுக்களே அதிகம்.. பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார்.. இதில் சில உண்மையாகவும் இருக்கும்.. சில பொய்யான கிசுகிசுவாகவும் இருக்கும்.. ஆனால், எல்லாரும் விரும்பக்கூடிய ஹீரோவாக இருந்தார்.. பிரபு போலவே கார்த்திக்கையும் பல நடிகைகள் விரும்பினார்கள். ஆங்கிலம் பேசுவது, ஈகோ இல்லாமல் ஜோவியலாக பேசுவது அனைவருக்குமே கார்த்திக்கிடம் பிடித்தமான விஷயங்கள்.
தாழ்வு மனப்பான்மை
தலைமுடி அவருக்கு இல்லை என்பதால், விக் வைத்துள்ளார்.. பின்பக்கம் இருந்த தலைமுடியைமுன்பக்கம் வைத்து சிகிச்சை செய்ததால், வியர்த்து கொட்டிவிடும்.. இதனால் குளிர்ச்சியான இடத்தில்தான் அவரால் இருக்க முடியும்.. இதற்காகவே ஊட்டிக்கு அடிக்கடி சென்றுவிடுவார்.. அதேசமயம், முடி கொட்டிவிட்டது தாழ்வு மனப்பான்மையையும் தந்துவிட்டது. ஆனால், போதை பழக்கம் அவருக்கு கிடையாது.
இப்போது தெம்பாக இருக்கிறார் கார்த்திக்.. அடிப்படையிலேயே மிகவும் நல்ல மனிதன்.. கமலுக்கு அடுத்து நடிப்பு திறமை கொண்டவர் கார்த்திக்.. தேவையில்லாமல் செய்த விஷயம் அரசியல் கட்சியை ஆரம்பித்ததுதான்.. மற்றபடி தன்மையானவர்.. அவர் நல்லபடியாக இருக்க வேண்டும்" என்றார்.
தோல் அலர்ஜி
சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "கார்த்திக்கிற்கு தோல் அலர்ஜி பிரச்சனை உள்ளதால், 10 நிமிடம் தொடர்ந்து நின்று பிரச்சாரம் செய்ய முடியாது.. மகன் கவுதம் கார்த்திக்கிற்குடன் சரியான உறவு இல்லை.. கார்த்திக்கின் உடன்பிறந்தவர்கள், முத்துராமனின் சொத்துக்களை எடுத்துக் கொண்டார்கள். முத்துராமனின் சொத்துக்கள் பேரனுக்கு அதாவது கவுதமுக்கு இன்றுவரை வந்து சேரவில்லை. அந்த சொத்தை, இவர்களும் கேட்கவில்லை, அவர்களும் முன்வந்து கவுதமுக்கு தரவில்லை என்று கூறியிருந்தார்.
விஷம் - நடிகை
அதேபோல, பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தந்திருந்த பேட்டியில், "கார்த்திக்கை யாருமே திட்ட மாட்டார்கள்.. கார்த்திக்கால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, அவரை திட்ட மாட்டார்கள்.. எனினும், சொந்த பிரச்சனையில் நிறைய பஞ்சாயத்துகளை சந்தித்தார்.. இவர் திருமணம் செய்தபோது, ஒரு நடிகை விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. இப்படி பல பஞ்சாயத்துகள் அன்று நடந்தது.. மொத்தத்தில், தன்னுடைய செயல்பாடுகளினாலேயே, சினிமா, அரசியலில் சரிந்துவிட்டார் கார்த்திக்" என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
அவருக்கும் சேர்த்தே வேலை பார்ப்பேன்.. நடிகர் விஷால் விமர்சனத்திற்கு ராஜ்மோகன் பதில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications