சிவகுமாருக்கு பாதி வயசுதான் அந்த நடிகை.. பொறந்த வீடா, புகுந்த வீடா படம் சக்ஸஸ்: நெகிழும் வி. சேகர்
சென்னை: பிரபல நடிகர் சிவக்குமார் மிகவும் பெருந்தன்மையானவர், நல்ல குணம் கொண்டவர் என்று டைரக்டர் வி.சேகர் புகழ்ந்துள்ளார்.. அத்துடன் தான் இயக்கிய, "பொறந்த வீடா, புகுந்த வீடா" படம் குறித்தும் விரிவாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Rednool என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டைரக்டர் வி.சேகர், "பாக்கியராஜ் சாரிடம் ஏற்கனவே நான் அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்திருக்கிறேன். காமெடி கலந்து படங்களை நான் எடுப்பதால், பாக்யராஜ் சார் என்னுடைய படத்தில் நடிக்க ஆசைப்பட்டார்..

உடனே நான் "பொறந்த வீடா, புகுந்த வீடா" படத்தில் நடிக்குமாறும், பானுப்பிரியா ஹீரோயின் என்றும் சொன்னேன். கதையை கேட்டதுமே பாக்யராஜுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் அந்த படத்தில் பானுப்பிரியா கேரக்டர் கிளைமேக்ஸில் சற்று டாமினேட்டிங் இருக்கும். அதனால் "அந்த கிளைமேக்ஸை கொஞ்சம் மாற்ற முடியுமா? எனக்கு முக்கியத்துவம் வரும்படி கதையை சரி செய்ய முடியுமா?" என்று பாக்யராஜ் சார் கேட்டார்.
ஹீரோயின்: "இது ஹீரோயின் கதை சார்.. அப்படி செய்தால், கதையின் பேட்டர்ன் குறைந்துவிடுமே" என்றேன். அப்படியா என்றவர், சரி, பிறகு யோசிக்கலாம் என்றார்.. குருநாதரை வைத்து படம் செய்யும்போது இப்படி சொல்லிவிட்டாரே? என்று நினைத்தேன்.. அவருக்கென ஒரு உச்சக்கட்ட இமேஜ் இருக்கிறது.. எம்ஜிஆர் வாரிசு.. அதிலிருந்து கீழே இறங்க முடியாது..
எனக்கும் யதார்த்தமான கதையை தருபவர் என்ற இமேஜ் இருக்கவும், அதிலிருந்து விட்டுக்கொடுக்க நானும் தயாராக இல்லை.. கடைசியில் அது ஈகோ மாதிரி ஆகிவிட்டது.. அதனால் பாக்யராஜிடம் நான், "அடுத்த படம் நாம் சேர்ந்து செய்யலாம்" என்று சொல்லிவிட்டேன்.
சிவக்குமார்: அடுத்ததாக, யாரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன். அபபோதுதான் சிவக்குமார் சார் ஞாபகம் வந்தது.. 10 வருடமாக படம் பண்ணாமல் அப்போது வீட்டில் இருந்தார் சிவக்குமார்.. அவரிடம் நான் சென்றதுமே, ஏதோ விழாவுக்கு கூப்பிட வந்திருக்கிறேன் என்று நினைத்து கொண்டார்.. படம் பண்ண வேண்டும் என்று சொன்னதுமே ஆச்சரியப்பட்டார்..
அண்ணன், அப்பா கேரக்டர் போல என்று சிவக்குமார் சார் நினைத்து கொண்டார். நீங்கள்தான் ஹீரோ, பானுப்பிரியா ஹீரோயின் என்றேன்.. இதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சிவக்குமார், "என் வயசென்ன தெரியுமா? என்னை ஹீரோவாக போட்டால் படம் பிசினஸ் ஆகாதே? பாதியில் படம் நின்னால் சிக்கலாயிடுமே? நீ ஒவ்வொரு படமும் வெற்றிப்படமாய் தந்து வரும்போது, இதில் சிக்கல் வந்துட போகுது" என்றார். உடனே நான், "அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லை, ரெகுலரான விநியோகஸ்தர்கள்" இருக்கிறார்கள் என்றேன்.
கல்யாணம்: மறுபடியும் சிவக்குமார், "பானுப்பிரியா என் வயசில் பாதியாச்சே? லாஜிக் சரியாக இருக்காதே" என்றார்... அதற்கு நான், "ஹீரோ ரொம்ப நாள் கல்யாணம் செய்துக்கொள்ளாமல், அம்மாவால் வற்புறுத்தி திருமணம் செய்து கொள்வதாக, கதையை லேசாக மாற்றி எழுதிவிடுகிறேன்" என்றேன்.
பாக்யராஜ் சார் எனக்கு போன் செய்து, அந்த படத்துக்கு யாரை ஹீரோவாக புக் பண்ணியிருக்கே? என்று கேட்டார்.. சிவக்குமார் சார் என்றதுமே ஆச்சரியப்பட்டார்.. "அவர் என்னைவிட சீனியர் ஆச்சே? நீ ஏதோ ரிஸ்க்கில் மாட்டிக் கொள்ளாதே" என்றார்.. "உங்க கிட்டதான் நான் டிரெயினிங் எடுத்திருக்கேனே சார்? நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம்" என்றேன்.
பெருந்தன்மை: "உன்னுடைய கடின உழைப்புக்கு நான் அடிமை" என்று சிவக்குமார் சார் என்னிடம் சொன்னதை மறக்கவே முடியாது. அந்த படம் முடிந்ததுமே, "சம்பளம் எல்லாருக்கும் தந்துட்டியா? பிசினஸ் ஆயிடுச்சா? ஏதாவது பற்றாக்குறை இருக்கா? எனக்கு ஒன்னு அல்லது ஒன்றரை லட்சம் சம்பளம் தந்தால் போதும்" என்றார் சிவக்குமார். அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சார் என்று சொல்லி, 3 லட்சம் நான்தான் தந்தேன். அந்த அளவுக்கு பெருந்தன்மையானவர் சிவக்குமார் சார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications