கையைத் தூக்கி ஒரு கும் டான்ஸ்.. தலைக்கு தில்லைப் பார்த்தியா.. கலக்கிய பரீனா
சென்னை: லாக்டவுன் நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் இந்த நேரத்திலும் கடற்கரையில் வெள்ளை உடையில் அதுவும் உடையை குறைத்து குத்தாட்டம் போட்டுள்ளார் பரீனா.
அவர் கலக்கலாக போட்டோ வெளியிட்ட போட்டோவை பார்த்து தில்ல பார்த்தியா தலைக்கு என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.
பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி ஹீரோயினி அழகாக இருப்பார் .அவருக்கு போட்டியாக வரும் நெகட்டிவ் கேரக்டருக்கு தகுந்த மாதிரிதான் ஹீரோயினியை விடவும் அழகில் குறைந்த மாதிரி இருப்பார் .

பாரதி கண்ணம்மா சீரியல்
ஆனால் இந்த பாரதிகண்ணம்மா சீரியலில் இதற்கு அப்படியே ஆப்போசிட் ஆக நடந்திருக்கிறது .நடிகைகளை விடவும் வில்லி தான் அழகாக காட்டுகிறார்கள் .அதுவும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் கவர்ச்சியாகவும் அழகாகவும் அசத்திக் கொண்டிருக்கிறார் வில்லி பரீனா. இந்த சீரியலில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் வந்து கொண்டிருப்பதற்கு காரணம் இந்த சீரியலில் வில்லியாக நடித்துக்கொண்டிருக்கும் பரினாவும் தான்.

ஹிந்தி சீரியல் மோகம்
இவருடைய அழகையும் இவர் போடும் மேக்கப்பை பார்ப்பதற்காகவும் பலர் தொடர்ந்து இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். ஏற்கனவே பலருக்கு ஹிந்தி நாடகங்களில் மோகம் இருக்கிறது .காரணம் அந்த சீரியல்களில் நடிகைகள் போடும் உடைகளையும் ஜூவல்ஸ்களையும் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் இந்த சீரியல்களை பார்த்து வருகின்றனர்.

ரசிகர்களைக் கவர்ந்த வெண்பா
அதுபோல தற்போது தமிழ் சீரியல் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பாவின் உடைகளையும் அதற்கு மேட்சாக அவர் போடும் நகைகளையும் பார்ப்பதற்காக பலர் பரினாவை ரசித்து வருகின்றனர் . இவர் இந்த சீரியலுக்கு முன்பு வரை தொகுப்பாளராக கலக்கி கொண்டிருந்தாலும் தற்போது முதல் முதலில் சீரியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த சீரியல் இவர் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களிடம் நன்றாகவே ரீச்சாகி விட்டது .

பெரும் ரசிகர்கள்
அதுவும் நன்றாக இவருக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டது .அதனால் தொடர்ந்து இந்த மாதிரி நெகட்டிவ் ரோல் வந்தால் கூட நன்றாக நடிப்பேன் என கூறியிருக்கிறார். இப்ப இருக்கிற சூழ்நிலையில் பல நடிகைகளும் ஹீரோயினியாக நடிப்பதை விடவும் நெகட்டிவ் கேரக்டரையே அதிகமாக விரும்புகின்றனர் .அதுபோல பரினாவும் கதாநாயகியை விடவும் எனக்கு இதுதன் பிடித்திருக்கிறது என கூறியிருக்கிறார் .

விமர்சிக்கும் ரசிகர்கள்
ஆனாலும் சீரியலில் இவரது கேரக்டரை பார்த்து கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள் சீரியலை தாண்டி இவருடைய அழகையும் புகழ்ந்து வருகின்றனர் .அதுவும் தன்னுடைய முட்டை கண்ணாலேயே இவர் வில்லத்தனத்தில் பின்னி பெடல் எடுத்து வருகிறார். இவர் எப்போதுமே துருதுருவென சேட்டைகள் செய்து கொண்டு ஜாலியாக இருப்பாராம் .ஆனால் ஷட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருக்க யாரையும் விட மாட்டாராம் .

வேற மாதிரி
குறிப்பாக இந்த சீரியலில் கதாநாயகியாக கண்ணம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ரோஷினி நிஜத்திலும் இதேபோலத்தான் அமைதியான கேரக்டர் ஆனாலும் அவரையே இவர் சீரியலில் படுத்தும்பாடு கானாது என்று நிஜத்திலும் பாடாய்படுத்தி விடுவாராம் . தானும் அமைதியாக இருக்கப் பிடிக்காது அடுத்தவர்களையும் அமைதியாக இருக்க விடக்கூடாது என்பதுதான் இவருடைய லட்சியம் .

செம ஜாலி
அதனாலே ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் சூட்டிங் ஸ்பாட்டில் சின்னச் சின்ன சேட்டைகள் செய்து அதை அப்படியே வீடியோவாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் டுவட்டரில் போஸ்ட் போட்டு வருகிறார். தற்போது அந்தி சாயும் மாலை வேலையில் மயங்கும் நேரத்தில் வெள்ளை உடையில் அதுவும் முட்டிக்கு மேலே தெரியும்படி கைகளை தலைக்கு மேலே தூக்கி மாலை நேரத்தை பீல் பண்ணி ரசித்தபடி ரசிகர்களுக்காக கலக்கல் போஸ் கொடுத்திருக்கிறார்.

ரசிகர்களின் கொஞ்சல்
இந்த போட்டோக்களை பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் இவரைப் பார்த்து கொஞ்சி கொஞ்சி கமெண்டுகளை போட்டு வருகின்றனர். என்ன தான் இவர் வில்லத்தனம் செய்தாலும் அதையெல்லாம் மறந்து இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. உண்மையில் வாழ்க்கையில் யாருமே பரீனா போலத்தான் இருக்க விரும்புவார்கள். காரணம், கவலைகளை தேக்கி வைத்து என்னங்க ஆகப் போறது.. உண்மைதானே!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications