கால் மேல கால் போட்டு.. குனிந்து பார்த்த பரீனா.. செம கேப்ஷன் வேற!
சென்னை: காரு மேல யாரு.. அது நம்ம வெண்பதாங்க.. செம கெத்தாக ஜம்முன்னு உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ளார் நம்ம பரீனா ஆசாத்.
கால் மேல கால் போட்டு இருக்கும் வெண்பா படத்தைப் பார்த்ததும் ரசிகர்கள் ஓடி வந்து விட்டனர். அவர் குட் மார்னிங் சொன்ன அழகைப் பார்த்ததும் குளிர்ந்தும் போய் விட்டனர்.
ஆனால் பரீனாவோ, அமைதியை கவனியுங்கள். அது பல உண்மகளைச் சொல்லும் என்று வித்தியாசமாக போட்டு ரசிகர்களின் மூளையைத் தூண்டி விட்டுள்ளார்.

கண்ணம்மா கண்ணம்மா
விஜய் டிவியில் டி ஆர் பி யில் முதலிடத்தில் வலம் வரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். அதற்கு முழு காரணம் அந்த சீரியலின் கதை தான் என்பது பலருக்கும் தெரியும். என்னதான் நெட்டிசன்கள் ட்ரோல் பண்ணி அதை வண்டி வண்டியாய் கலாய்த்து தள்ளினாலும் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் சீரியல் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது .அதனால் இந்த சீரியலின் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை .

அழகிய வில்லி
அதிலும் அந்த சீரியலின் வில்லி வெண்பாவை கலாய்த்து தீர்ப்பதற்காகவே ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது .பலபேர் வயித்தெரிச்சலை சம்பாதித்துக் கொண்டிருக்கும் வெண்பா சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் அனைவருக்கும் கெத்து காட்டி இருக்கிறார். சீரியலாக இருந்தாலும் சரி, சினிமா என்றாலும் சரி அதில் ஒரு கதாநாயகனை ரசிகர்கள் ரசிப்பதற்கு காரணமே அவர் வில்லனை எதிர்த்து நிற்பதால் தான்.

பெண் நம்பியார் மாதிரி
அது அந்த காலத்து எம்ஜிஆர் நம்பியார் ஜோடியாக இருந்தாலும் சரி இந்த காலத்து நடிகர்களாக இருந்தாலும் சரி ஹீரோவை ரசிகர்கள் ரசிப்பதற்கு வில்லன்களே காரணம். அதே போலத்தான் தற்போது பாரதிகண்ணம்மா சீரியல் கண்ணம்மாவை பலரும் சப்போர்ட் பண்ணுவதற்கு அந்த சீரியலின் வில்லி வெண்பா வாக நடித்துக்கொண்டிருக்கும் பரீனா தான் காரணம். தற்போது நடிகைகளை விடவும் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் வில்லிகள் தன் அழகாக இருந்து வருகின்றனர்.

அழகுச் செல்லங்கள்
இது ஒருபுறம் இவர்களை ரசிகர்கள் திட்டி தீர்த்தாலும் மறுபுறம் இவர்களுடைய அழகையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டனர் .அதிலும் இவர் எல்லோருக்கும் முன்னோடி தான். ஒரு தொகுப்பாளராக ரசிகர்களின் மனதில் கலக்கிக் கொண்டிருந்த இவரை ஜீ தமிழில் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் பார்த்தபோது ஆகா என்ன அழகு என்று புகழ்ந்து தள்ளிய ரசிகர்கள் வீட்டில் பையனுக்குப் பெண் பார்த்தால் கூட இந்த மாதிரி ஒரு அழகான பொண்ணு கிடைச்சா போதும் என சமையலில் இவர் சொல்லும் டெக்னிக்குகளையும் தினமும் பெண்களுக்கு தரும் மோட்டிவேஷன்களையும் பார்த்து கூறி வந்தனர்.

அடடா அடடா
ஆனால் இவர் இந்த சீரியலில் அறிமுகமாகும் போது இவர்தான் ஹீரோயின் என நினைத்து வந்த ரசிகர்கள் சிறிது நாட்கள் போகப்போக இவருடைய உண்மையான குணம் தெரியும் போது, ஐயோ இவரா என இவரை கழுவிக் கழுவி ஊற்றி வந்தனர். ஆனால் ரசிகர்கள் இவருக்கு நெகட்டிவ் கமெண்டுகள் கொடுத்து வந்தாலும் அது தன்னுடைய நடிப்பு தானே என்று மிகவும் சந்தோஷமாக இருக்கும் இவர். அது நடிப்பு மட்டும்தான் ஆனால் ரியலி நான் அப்படியெல்லாம் இல்லை.

வாய் நீளம்தான்
கொஞ்சம் வாய் பேசுவேன் என தன்னுடைய வாயாடி தனத்தையும் காட்டியிருக்கிறார் . சீரியலில் காட்டும் வில்லத்தனம் போதாது என்று தற்போது கால் மேல கால் போட்டு கெத்தாக தன்னுடைய வில்ல பார்வையை பார்த்து இருக்கிறார். இவரை இப்படி பார்த்ததும் வழக்கம் போல கமெண்ட்கள் குண்டக்க மண்டக்க வர ஆரம்பித்து விட்டதுதான்.

அதோ பார்
கமெண்ட் களில் கூட பலரும் எதற்காக இப்படி பாரதி மீது பித்து பிடித்து அலைகிறாய் என திட்டி வருகின்றனர். ஆனால் இவருடைய ரசிகர்கள் இவரை கொஞ்சி நீங்கதான் தேவதை .தேவதையை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை ஆனால் நாங்கள் இப்போது பார்த்து விட்டோமே மாடர்ன் உடையில் வந்த தேவதையே என காதல் வசனங்களை பேசியும் வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications