பூப் போட்ட ரவிக்கை.. எடுப்பான அழகு.. அம்சமான பரீனா.. அசத்தறீங்களே வெண்பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வில்லத்தனம் செய்தாலும் அதிலும் ஒரு முத்திரையைக் குத்தாமல் விடுவதில்லை பரீனா ஆசாத். அழகிய வில்லிகள் வரிசையில் மக்கள் மனம் கவர்ந்தவர்களில் ஒருவராக இவர் திகழ்கிறார்.

இப்படிப்பட் பரீனா ஒரு மேக்கப் பிரியை.. எப்பவுமே மேக்கப் போடுவது என்றால் அவருக்கு அல்வாவை தேனில் முக்கி சாப்பிடுவது போல. ரசித்து செய்வார்.

என் மனசுக்குள்ள ஒன்னுமே இல்லை வெளியே இருந்து பார்த்தாலே எல்லாமே தெரியும் என தற்போது கண்ணாடி
உடையில் விதவிதமான போட்டோக்களை எடுத்து குவித்துள்ளார் பரீனா.

பாரதி கண்ணம்மா பரீனா

பாரதி கண்ணம்மா பரீனா

பாரதி கண்ணம்மா சீரியலில், நடிப்பில் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் பரீனா, நான் எல்லாம் நிஜத்தில் வில்லி இல்லைங்க பச்ச மண்ணு என்று பச்ச புள்ளையாட்டம் முகத்தை வைத்துக்கொண்டு லேட்டஸ்ட் போட்டோ சூட் எடுத்திருக்கிறார் . இவர் போஸ்ட் போட்டதும் இவரை வகைவகையாக கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள் இப்படி எல்லாம் கமெண்டுகளில் ஒருவரை திட்டுவார்களா என அதிசயப்படும் வகையில் திட்டி வருகின்றனர்.

நிஜத்தில் ரொம்ப ஸ்வீட்

நிஜத்தில் ரொம்ப ஸ்வீட்

சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அதில் நடிக்கும் கேரக்டரை அப்படியே நம்பிவிடும் ரசிகர்கள் வில்லனாக நடித்தால் அவர்களை நிஜத்தில் வில்லனாகவே பார்த்து வருகின்றனர். அதுவே ஹீரோவாக இருந்தால் அவர் ஹீரோவாக இருந்தாலும் தலையில் வைத்துக் கொண்டாடி விடுவார்கள் .அந்த மாதிரி தான் தற்போது சீரியல்களில் கண்ணாலே மிரட்டி பலபேர் வயித்தெரிச்சலை சம்பாதித்துக் கொண்டிருக்கும் பரீனாவையும் பார்க்கிறார்கள்.

நல்லவங்கப்பா.. நம்புங்க

நல்லவங்கப்பா.. நம்புங்க

உண்மையிலும் இவர் இப்படித்தான் போல என நினைத்து பார்க்கும் இடமெல்லாம் திட்டி வந்த ரசிகர்கள் தற்போது அவர் போஸ்ட் போட்டு சிறிது நேரத்திற்குள் அவருக்கு தங்களால் முடிந்த அளவிற்கு கோபத்தோடு கமெண்ட்களால் அர்ச்சனை செய்து வருகின்றனர். பட், அதை அவர் ஸ்போர்ட்டிவாகவே எடுத்துக் கொள்வாராம். ஒரு திரைப்படமாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி ஹீரோ என்று ஒருவர் இருந்தால் அதில் வில்லன் இருந்தால்தான் அதற்கு சுவாரஸ்யமே.

பரபரப்பு வில்லி

பரபரப்பு வில்லி

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் பற்றி கேட்கவே வேண்டாம் .இது பல போராட்டங்களுக்குப் பிறகும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் ஹீரோயினிக்கு இருக்கும் மதிப்பை விடவும் வில்லியாக நடிக்கும்படி பரீனாவிற்கு தான் அதிகப்படியான பங்கு இருக்கிறது. இவரை ரசிகர்கள் தான் திட்டி தீர்க்கிறார்கள் என்றால் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் தங்களால் முடிந்த அளவிற்கு வைத்து செய்து வருகின்றனர் .

இது கூடவா தெரியாது டாக்டர்

இது கூடவா தெரியாது டாக்டர்

ஒரு டிஎன்ஏ ரிப்போர்ட் எடுப்பதற்கு கூட தெரியாத டாக்டரை வைத்துக்கொண்டு இந்த சீரியலை பல வருடங்களாக ஓட்டிக் கொண்டிருக்கும் போது அடுத்தவர் புருஷன் என்று தெரிந்த பிறகும் ஒன்றுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தாலும் எனக்கு அவர்தான் வேண்டுமென்று படையப்பா பட நீலாம்பரி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

பகீர் பாரதி

பகீர் பாரதி

இந்த சீரியலில் இவர் பாரதி என்ற ஒரே ஒரு கேரக்டருக்காக பல கொலைகளை செய்து கொண்டு முன்னணி டாக்டராக வலம் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து பலபேர் வயிறு எரிந்து சாபம் இட்டு வருகின்றனர் .ஆனால் சீரியல் பார்க்கும் நேரம் மட்டும் தான் இவர்கள் இப்படி திட்டுகிறார்கள் என்று பார்த்தால் தற்போது இன்ஸ்டாகிராமில் புதியதாக ஒரு போட்டோ ஷூட் எடுத்து போஸ்ட் போட்டு இருக்கிறார்.

திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கொதித்து எழுந்து கமெண்டுகளால் இவரை திட்டி வருகின்றனர் .ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு ரசிகர்கள் தங்களை திட்டுகிறார்களோ அந்த அளவிற்கு என்னுடைய நடிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது என்றுதான் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன் என கூறி வந்தவர் . இதில் எந்த ரசிகர்களின் கமெண்ட் களுக்கும் பதில் கூறாமல் மௌனமாக இருந்துவருகிறார்.

நடையாய் நடந்த கண்ணம்மா

நடையாய் நடந்த கண்ணம்மா

ஏற்கனவே போன ஊரடங்கு நேரத்தில் கண்ணம்மா பாரதியுடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து அவர் கையில் பேக்கோடு நடந்துகொண்டிருந்த எபிசோடுகள் பார்த்து மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து தள்ளி வைரல் ஆகி விட்டனர் .இந்த நிலையில் மீண்டும் கண்ணம்மாவின் குழந்தை ஹேமாவை காப்பாற்றுவதை வைத்து தற்போது மீம்ஸ்கள் ரெக்கை கட்டி பறந்து வருகிறது .

வெண்பா பரீனா

வெண்பா பரீனா

அதுவும் இல்லாமல் வெண்பா வாக நடிக்கும் பரீனா போட்டோவை வைத்து கன்னாபின்னாவென மீம்ஸ் களில் கிழித்து எடுத்து வருகின்றனர். ஆனால் வில்லியாக இருந்தாலும் பேரழகியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் .இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது இவருக்கு பெண்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.

நேர்த்தியான அழகு

நேர்த்தியான அழகு

ஆடையாக இருந்தாலும் சரி அதற்கு நேர்த்தியாக அணியும் அணிகலன்களாக இருந்தாலும் சரி இவர் யாரையும் போல இல்லாமல் தனித்து இருப்பதே பேரழகு என ரசித்து வந்த ரசிகர்கள் தற்போது லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் இவருடைய அழகை புகழ்ந்து கமெண்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். என்னதான் பலரும் இவரை கலாய்த்தாலும் இவரது தன்னம்பிக்கையை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அந்த அளவுக்கு போராடி இந்த இடத்தைப் பிடித்தவர் பரீனா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+