வனிதா அவங்க அப்பா இருக்கிற தெருவில் நின்று செய்த விஷயம்.. நானே பார்த்தேன்! பாத்திமா பாபு எமோஷனல்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் கதாநாயகி ஆக நடிக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு வனிதா குறித்து சில விஷயங்களை நிகழ்ச்சி ஒன்றில் பேசுகின்றார். அதில் வனிதா தன்னுடைய திரைப்படம் வெளியாகும் சமயத்தில் தன்னுடைய அப்பா வசிக்கும் தெருவில் நின்று செய்த செயலை பார்த்து நான் எமோஷனல் ஆனேன் என பாத்திமா பாபு கூறியிருக்கிறார்.
நடிகை வனிதா பற்றிய செய்திகள் இணையத்தில் எப்போதும் பேசப்பட்டு கொண்டே இருக்கிறது. அவருடைய திருமண வாழ்க்கை திறந்த புத்தகமாக இருப்பது, மற்றும் அவருடைய வெளிப்படையான பேச்சு அவரை சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் வைத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவர் நடித்து வந்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

வனிதா நடிக்கும் திரைப்படம்
இந்த திரைப்படத்திற்கான ப்ரமோஷனில் வனிதா தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை வனிதாவின் மகள் ஜோவிகா தான் தயாரித்திருக்கிறார். அது குறித்து ஜோவிகா பேசும் போது நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பாதித்த பணத்தை வைத்துதான் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன். என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் உள்ள பணத்தை இந்த படத்தை எடுத்திருக்கிறேன். அதில் என்னுடைய அம்மாவை ஹீரோயினியாக நடிக்க வைத்திருப்பது எனக்கு சந்தோஷம் என்று கூறியிருக்கிறார்.
பாத்திமா பாபு பேட்டி
அதுபோல தன்னுடைய மகள் தயாரிக்கும் படத்தில் தான் நடிப்பது குறித்தும் வனிதா பெருமையாக பேசி இருக்கிறார். அதேபோல வனிதா நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கும். ஆனால் வனிதா தன்னுடைய அப்பா மற்றும் சகோதரி, சகோதரர்களை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் வனிதா பற்றி பாத்திமா பாபு நிகழ்ச்சியில் பேசி இருந்தார். அப்போது, வனிதா எவ்வளவு கஷ்டங்கள் பட்டிருக்கிறார் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
போஸ்டர் ஒட்டிய வனிதா
வனிதாவை எனக்கு அவருடைய 18 வயதிற்கு முன்பு இருந்தே தெரியும். இந்த படத்தின் ப்ரொமோஷனுக்காக வனிதா ரொம்பவும் உழைப்பை போட்டு இருக்கிறார். படத்தைப் பற்றிய போஸ்டர் ஒட்டுவாங்கல்ல, அந்த போஸ்டரை விடிய காலையில் எல்லோரும் ஒட்டிக் கொண்டிருக்கும் போது வனிதாவே அவர்களோடு சென்று அதை எல்லாம் பார்த்து இந்த இடத்தில் ஒட்டுங்க, அந்த இடத்தில் ஒட்டுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
வனிதா செய்த செயல்
ஆனால் வனிதா அவருடைய அப்பா (விஜயகுமார்) வசிக்கும் தெருவில் அதிகமான போஸ்டர்கள் ஒட்ட சொல்லி இருந்தார். காரணம் அவங்க அப்பா முன்னாடி நான் இப்போ எப்படி இருக்கிறேன் பாருங்க என்று சொல்வதற்காக தான் வனிதா பல கஷ்டங்கள் பட்டு இருந்தாலும் இன்று அவருடைய உழைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. வனிதா எப்போதுமே அவரை சுற்றி இருக்கிறவங்க நல்லா இருக்கணும் என்று நினைப்பாங்க.
கண் கலங்கிய வனிதா
கூட இருக்கறவங்க நல்லா இருக்கணும், இவங்க நல்லா இருக்கணும், அவங்களுக்கு அது பண்ணனும் என்று நினைப்பதுதான் வனிதாவின் குணம். ஆனால் அதுதான் அவளுக்கு ஏமாற்றத்தையும் கொடுக்கிறது. இப்போ இருக்கிற சோசியல் மீடியாவால் நம்முடைய முகத்துக்கு நேரா பேச முடியாதவங்கள் கூட எவ்வளவு தரம் தாழ்ந்து கமெண்ட் பண்ணுறாங்க. அதை எல்லாம் தாண்டி வனிதா வந்து கொண்டிருக்கிறார் என்று பாத்திமா பாபு பேசியிருக்கிறார். அவர் பேசும்போது வனிதா எமோஷனல் ஆகி கண்கலங்கி இருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications