ரச்சிதாவுக்கு சூட்டிங்கில் நடந்த சம்பவம்! பெருந்தன்மையான வார்த்தை! மாறியது இங்கே தான்! இயக்குனர் ஓபன்
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி, பாலாஜி முருகதாஸ் நடித்த ஃபயர் திரைப்படம் குறித்தும் அந்த திரைப்படத்தின் இயக்குனர் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் ரச்சிதா மகாலட்சுமி மற்றும் பாலாஜி முருகதாஸ் பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
ரச்சிதா மகாலட்சுமி கன்னடத்தில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமானார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான்.

இந்த சீரியலில் பல சீசன்களாக இவர்தான் கதாநாயகியாக நடித்து வந்தார். அதற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியிலும் அதிக நாட்கள் இருந்தார். ஏற்கனவே சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது கதாநாயகியாக ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய கேரக்டரிடம் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் கன்னட திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ரச்சிதா மற்றும் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ், சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம்புலி உட்பட பலர் நடித்த ஃபயர் திரைப்படம் குறித்து அந்த திரைப்படத்தில் இயக்குனர் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாகத்தான் ரச்சிதா பிரபலமானாங்க.

ஆனால் ரச்சிதா மற்ற நடிகைகள் போல இல்லை. ஃபயர் திரைப்பட சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒருநாள் சூட்டிங் ஸ்பாட்டில் டோர் அவருடைய தலையில் விழுந்தது. நாங்கள் எல்லோரும் பதறி போய் ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்று கூப்பிட்டோம். ஆனால் அவர் எனக்கு ஒன்றும் இல்லை பரவாயில்லை இனி கொஞ்சம் பார்த்து பண்ணுங்கன்னு சொன்னாங்க.
அந்த சம்பவத்தை ஈஸியா எடுத்துக்கிட்டு அடுத்த கட்டத்திற்கு போனார். இப்படி எந்த நடிகையும் செய்ய மாட்டாங்க. அதுபோல சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறுவது, எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவது என்பது ரச்சிதா மகாலட்சுமியின் இயல்பாக இருந்தது.
அதுபோலத்தான் பாலாஜிக்கும் இந்த திரைப்படத்தில் தயாரிக்கும் போது உனக்கு இது ஒரு வாய்ப்பாகத்தான் கொடுக்கப்படுகிறது. இந்த படத்திற்கு 5 லட்சம் தான் சம்பளம் கொடுக்கப்படும் என்று பேசி தான் முடிவு செய்தோம். அந்த படத்தில் பல நடிகைகள் நடித்த பொழுதும் அதில் ரச்சிதா தான் ஹைலைட்டாக காணப்பட்டார்.

அதனால் தான் அவருடைய வீடியோ கிளிப்ஸை அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டோம். அதற்கு பிறகு தான் ஃபயர் படம் பற்றி எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. இந்த வீடியோவை நாங்க அப்போது வெளியிடுவதற்கு காரணம் ரச்சிதாவை அதுவரைக்கும் யாரும் அப்படி பார்த்திருக்க மாட்டாங்க என்ற காரணத்தினால்தான்.
அவரை வேறு ஒரு கோணத்தில் நாங்கள் அந்த வீடியோவை வெளியிட்டோம். ஆனால் அதனை ரச்சிதா தான் நெகட்டிவாக எடுத்துக் கொண்டார். இதனால்தான் முரண்பாடு ஏற்பட்டது. அதற்கு பிறகு பல தடவை இது பற்றி நாங்கள் விளக்கம் கொடுத்தோம். ஆனாலும் ரச்சிதா சமாதானம் ஆகவில்லை. அதனால் அவருடைய விருப்பம் என்று விட்டுவிட்டோம்.
பாலாஜிக்கு ஆரம்பத்தில் 5 லட்சம் தான் சம்பளம் பேசப்பட்டது. ஆனால் அவர் இடையிடையே பணத்தேவை என்று என்னிடம் வாங்கி இருக்கிறார். பின்பு போஸ்ட் போட்டு சர்ச்சையும் ஏற்படுத்தி இருந்தார். இந்த ரெண்டு விஷயங்கள் தான் நடந்தது என்று ஃபயர் திரைப்படத்தின் இயக்குனர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications