Flash back: நிறைவேறாமல் போன மாரிமுத்துவின் காதல்.. ஆனால் மாமன் மகளால் “மாறிய” வாழ்க்கை
சென்னை: மறைந்த நடிகர் மாரிமுத்து இழப்பு குறித்து பல ரசிகர்களும் தங்களுடைய வருத்தங்களை தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவர் உயிரோடு இருக்கும்போது பேசிய வீடியோக்களை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் மாரிமுத்து தான் கல்லூரி படிக்கும் போதே காதலித்த பெண் பற்றியும் அதில் தான் ஏமாற்றமடைந்தது குறித்தும் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

தன்னுடைய காதல் கதையை தான் இயக்கிய திரைப்படத்தின் முக்கிய கதையாக மாற்றி இருந்தது குறித்தும் தன்னுடைய வாழ்க்கை எப்படி மாறியது என்பது பற்றியும் அந்த பேட்டியில் மாரிமுத்து பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் நான் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன். நான் சிவகாசியில் பொறியியல் படிப்பில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு கவிதையின் மூலமாக ஒரு பெண் ஒருவரின் நட்பு கிடைத்தது. ஆரம்பத்தில் எங்களுடைய கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்த எங்களுடைய நட்பு பிறகு காதலாக மாறியது. ஒரு நாள் அந்தப் பெண்ணை நேரில் பார்க்க நான் குற்றாலத்துக்கு புறப்பட்டு சென்றேன்.
ஆனால் அந்தப் பெண்ணுடைய வீடு பூட்டப்பட்டிருந்தது. என்னவென்று பக்கத்து வீட்டில் விசாரித்தேன். ஆனால் அவங்க சொன்ன விஷயம் என்னை தூக்கி வாரி போட்டது. அது என்னன்னா அந்தப் பெண்ணுடைய அப்பா ஏதோ குடும்ப பிரச்சனையில் ஒரு நபரை கொலை செய்து விட்டாராம். அதனால் அந்த குடும்பமே அங்கிருந்து போய்விட்டதாக அவங்க சொன்னாங்க.
எனக்கு அதற்குப் பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் இப்ப வரைக்கும் அந்தப் பெண் எங்கே இருக்காங்க என்று எனக்கு தெரியாது. அந்த சம்பவம் என்னுடைய மனதை மிகவும் பாதித்தது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு ஒரு பெண்ணை ஒருவன் பார்க்காமல் காதலித்தான் என்று சொன்னால் அது காதல் கோட்டை படம் மாதிரி இருக்கும் அந்த பெண்ணை பார்க்க போன இடத்தில் அவரை காணவில்லை இதை எல்லாம் வச்சு தான் நான் கண்ணும் கண்ணும் படத்தின் கதையை எடுத்தேன். அதோடு சகோதரியின் பாசத்தையும் சேர்த்து அந்த திரைப்படத்தில் கதையாக வைத்திருந்தேன் என்று மாரிமுத்து தன்னுடைய காதல் குறித்து பேசி இருக்கிறார்.
அதுபோல இன்னொரு பேட்டியில் நான் காதலிச்ச காதல் எனக்கு கை சேரவில்லை. ஆனால் அந்த நேரத்தில் நான் மனசோர்வில் இருக்கும்போது என்னுடைய மாமன் மகள் நான் என்ன வேலை பார்க்கிறேன் என்று தெரியாமல், எனக்கு எவ்வளவு சம்பளம் என்று தெரியாமல் என்னோடு வந்துவிட்டார்.
எங்களுடைய வாழ்க்கையில் நாங்கள் பல வருடங்கள் வறுமையில் கஷ்டத்தில் தான் இருந்து இருக்கிறோம். வீட்டு வாடகை கொடுக்க கூட முடியாமல் இருந்த சூழ்நிலையில் நான் கேட்காமலே என்னுடைய மனைவி அவள் போட்டு இருக்கும் கம்மல், மூக்குத்தி முதலியவற்றை கூட கழட்டி நான் பார்க்கும் இடத்தில் வைத்து விடுவாள்.
எந்த இடத்திலும் நான் கஷ்டப்பட்டால் என்னுடைய மனைவியால் தாங்க முடியாது. அதே போல அவர் எந்த கஷ்டத்தையும் வெளியே சொல்லவும் மாட்டார். இப்படி கஷ்டமாக இருக்கிறது என்று என்னிடம் பகிர்ந்து கொள்ளவும் மாட்டாள். அதை எல்லாம் இறுக்கமாக மனதிற்குள்ளே வைத்துக் கொள்வார். ஆனால் என்னுடைய முகத்தில் என்ன ஒரு கலக்கம் வந்தாலும் அதை எளிதாக கண்டுபிடித்து அவளால் என்ன முடியுமோ அதை என்னிடம் மனம் விட்டு பேசாமலே செய்து விடுவார் என்று தன்னுடைய மனைவி குறித்து பெருமையாகவும் பேசி இருக்கிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள் இது பலருக்கும் பாடமாக அமைய வேண்டும். மாரிமுத்துவின் வாழ்க்கையில் காதலும் அதை பிறகு அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றமும் திரைப்பட கதை போல இருக்கிறது. ஆனாலும் எத்தனையோ வருடங்கள் கஷ்டத்தில் இருந்த மாரிமுத்து இப்போது ஏழு வருடங்களாக நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன் என்னுடைய மனைவியை நல்ல படியாக பார்த்துக் கொள்கிறேன்.
அவள் ஆசைப்பட்டதெல்லாம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அது குறித்து தான் அதிகமான ரசிகர்கள் எல்லாருக்கும் நல்லதை செய்துவிட்டு அவர் போயிருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் இந்த சோகத்தில் இருந்து சீக்கிரமாக மீண்டு வர வேண்டும் என்று தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.
-
மாநகரம் ஸ்ரீ-யா இது? மீண்டும் பழைய நிலை, மாஸ் லுக்.. இளம் பெண்ணுடன் உருக்கமான போஸ்ட்! -
TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி! -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன் -
பெரிய தப்பு செய்த திரிஷா.. ஒரே ஒரு போட்டோவால் கொந்தளிப்பு.. இந்த நேரத்தில் இது தேவையா? வருத்தத்தில் ரசிகர்கள் -
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு -
காதலர் தினம் பட ஹீரோயினி சோனாலிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன புகார்.. நடிகை கொடுத்த விளக்கம் -
வாழ்க்கையில் சில நேரம் தோற்று போய் விடுகிறோம்.. எதிர்பாராத விஷயங்கள்! எமோஷனலாக பேசிய நடிகர் பிரசாந்த் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications