Flashback: "டிரெண்டிங் ஆளு சார் நான்.." ஜோதிடர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கிய நடிகர் மாரிமுத்து
சென்னை: எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமான நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இதற்கிடையே இப்போது அவரது பழைய வீடியோக்கள் பல டிரெண்டாகி வருகிறது.
எதிர்நீச்சல் சீரியல் மூலம் டிரெண்டானவர் நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து காலமானார். எதிர்நீச்சல் சீரியல் அவருக்குக் கொடுத்த லைம்லைட்டை தொடர்ந்து அவர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரத் தொடங்கினார்.

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் கூட அவர் வில்லன் கேங்கில் முக்கிய நபராக நடித்திருந்தார். இதற்கிடையே இன்று காலை வழக்கம் போல டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 56.
நடிகர் மாரிமுத்து: அவர் கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல் தான் அவருக்கு மிகப் பெரிய ஹைம்லைட்டை கொடுத்தது. குறிப்பாக அவரது ஏய் இந்தாம்மா என்ற வசனமே செம டிரெண்டிங்கில் சென்றது. இப்படி டாப்பில் வந்து கொண்டிருந்த போது அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். மாரடைப்பால் உயிரிழந்த அவரது உடல், விரைவில் ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே அவரது ரசிகர்கள் பலரும் மாரிமுத்துவின் பழைய வீடியோக்களை பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர். அதன்படி கடந்த ஜூலை 23ஆம் தேதி ஒளிபரப்பாகிய தமிழா தமிழா ஷோவில் மாரிமுத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய இந்த நிகழ்வு ஜோதிடம் பார்ப்போர் குறித்து இருந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாரிமுத்து ஜோதிடம் குறித்துக் கூறிய கருத்துகள் அப்போது டிரெண்டானது.
பழைய வீடியோ: ஜோதிடம் மீது தனக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை எனக் கூறிய அவர், பல அதிரடி கருத்துகளைத் தெரிவித்தார். அந்த வீடியோக்கள் அப்போதே பயங்கரமாக டிரெண்டானது. சந்திராஷ்டம நாளில் செல்ஃபி எடுத்து க்ளிக் செய்து டெலிட் செய்தால் அது போய்விடும் என்று கூறிய நிலையில், இதெல்லாம் உண்மை என நம்ப முடியுமா என மாரிமுத்து கேள்வி எழுப்பியிருந்தார். ஒட்டுமொத்த உலகமே கொரோனா வைரசால் போராடி நிலையில், அது குறித்தும் ஜோதிடர்கள் எச்சரிக்கவில்லை என்று சீறியிருந்தார்.
சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அது குறித்தும் கூட ஜோதிடர்கள் யாரும் எச்சரிக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக மாட்டார் என்று சில ஜோதிடர்கள் சொன்னதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால், இப்போது ஸ்டாலின் முதல்வராகி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ அப்போதே இணையத்தில் டிரெண்டாகி இருந்தது. மாரிமுத்து அப்போது முன்வைத்த வாதத்திற்கு அப்போது ஜோதிடர்களால் பதில் அளிக்க முடியவில்லை.
நெட்டிசன்கள்: அந்த நிகழ்வில் ஜோதிடர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழலும் உருவானது. அந்த வீடியோவில் ஜோதிடர் ஒருவர், "உங்களால் நினைத்த துறையில் முன்னேற முடியாது.. நினைத்த இடத்தை அடைய முடியாது" எனக் குறிப்பிட்டார். அதற்கு மாரிமுத்து, "என்னால் விரும்பிய துறையில் (இயக்குநர்) வர முடியவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நான் புகழை அடையவில்லை என்பதை ஏற்க முடியாது. இன்றைய காலத்தில் டிரெண்டிங் ஸ்டார் நான்தான்" என்றார்.
இந்த வீடியோ அப்போதே டிரெண்டாகியிருந்தது. இப்போது நடிகர் மாரிமுத்து உயிரிழந்த நிலையில், நெட்டின்சன்கள் சிலர் அந்த வீடியோவை இப்போது மீண்டும் பகிர்ந்து வருகின்றனர். 56 வயதான மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலுக்கு பிறகு மீண்டும் புகழ் பெற்றார். அவர் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இப்போது அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications