எனக்கும் கன்பர்ம் ஆயிருச்சு.. சாதாரணமா நினைக்காதீங்க.. செல்ல மகளின் கோரிக்கை!
சென்னை: சுந்தரி சீரியலில் நடித்து வரும் கேப்ரியல்லா செல்லஸுக்கும் கொரோனா வந்து விட்டதாம்.
ரொம்ப சாதாரணமாக நினைச்சிடாதீங்க மாஸ்க் போடாம வெளிய போகாதீங்க. பாதுகாப்பாக இருங்க. கடைசியா எனக்கு கன்ஃபார்ம் ஆயிடுச்சு என்று அவர் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.
சன் டிவியின் சீரியல் மூலமாக ரசிகர்களின் செல்ல மகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கேப்ரியெல்லா செல்லஸ் வெளியிட்ட போஸ்ட் பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள் சீக்கிரம் குணமாகச் சொல்லி வருகின்றனற்.

தீவிர கொரோனா
தற்போது இருக்கும் சூழ்நிலையில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சாதாரண மக்கள் முதல் மேல்மட்டத்தில் இருக்கும் பணக்காரர்கள் வரை அனைவரையும் ஆட்டம் காண வைத்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் குறிப்பிட்ட வயதில் தான் தாக்கும் என கூற முடியாத வகையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாண்டவம் அதிகரித்து வருகின்றது.

அதிகரிக்கும் மரணம்
பலர் இதற்கு கொத்துக்கொத்தாக இறந்த கொண்டிருக்கும் நிலையில் சினிமாத்துறையினரையும் இது விட்டுவைக்கவில்லை. தொடர்ந்து சினிமா துறையில் இருப்பவர்களும் இதில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசும் பொதுமக்கள் மத்தியில் இதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் தற்போது சின்னத்திரையில் கிராமம் முதல் நகரம் வரை பலரின் அன்பையும் சம்பாதித்துக் கொண்டிருக்கும் கேப்ரியெல்லா செல்லஸுக்கும் கொரோனா வந்து விட்டது.

சுந்தரியின் நாயகி
இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் அவருக்கு ஆறுதலாக பலரும் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மூலமாக சீரியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் இதற்கு முன்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் .

கபாலியில் கலக்கல்
அதற்கு முன்னரே இவர் 2016 ஆம் ஆண்டில் கபாலி எனும் திரைப்படத்தின் மூலமாக திரைப்படத்திலும் அறிமுகமாகியிருக்கிறார் .அதுமட்டுமல்லாமல் இவர் பல ஷார்ட் பிலிம் களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் மேலும் திரைக்கதை எழுத்தாளராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் .இவ்வளவு திறமைகள் தனக்குள் இருந்தாலும் தன்னுடைய திறமையினால் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இவருக்கும் கொரோனா பாதித்துள்ளது.

எனக்கும் வந்துருச்சு
இதுகுறித்து அவர் போட்டுள்ள வீடியோவில், என்னுடைய நிலைமை யாருக்கும் வந்துவிடக் கூடாது .யாரும் ஈசியாக நினைத்து விடாதீர்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என தன்னுடைய ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். பலரும் அழகு இருந்தால்தான் நம்மால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என நினைத்துக் கொண்டு இருக்கும்போது அழகு எல்லாம் பிரச்சனையே இல்லை தன்னுடைய திறமை மட்டும்தான் என தன்னுடைய திறமையினால் ஒவ்வொருநாளும் முன்னேறிக் கொண்டிருக்கிறார் இவர்.

தூய தமிழ்
ரசிகர்களுக்கு கருத்துக்களை கூறி தன்னுடைய அங்கீகாரத்தை வேற லெவலில் அனைவரின் மனதிலும் ஏற்றிவிட்டார். டிக் டாக் செயலி இருக்கும்போது அந்த செயலியில் பலரும் தன்னுடைய வாழ்க்கையை தொலைத்து இதனால் பல சீரழிவுகளை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இவர் இந்த டிக்டாக் மூலமாக பல்வேறு கருத்துக்களையும் குடும்ப ஒற்றுமை களையும் தெளிவாக தன்னுடைய தூயதமிழாலும் கவிதை யாலும் சொன்னவர்.

டீசன்ட்டான டிக்டாக்
அனைவருக்கும் புரியும்படியாக கவிதை நடையில் பேசி அனைவரின் மனதிலும் நன்றாகவே ஒட்டிக் கொண்டவர் .அரைகுறை ஆடை போட்டு ஆட்டம் போட்டால் தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் இல்லை கண்ணியத்தோடு ஆடை அணிந்து கருத்தோடு கருத்துக்களை கூறினாலும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என எடுத்துக்காட்டாக இவர் இருந்து வந்தார்.

மக்களுக்கு அட்வைஸ்
தற்போது இந்த நோயின் தீவிரம் தெரியாமல் பலரும் சுற்றிக் கொண்டிருக்கும் வேளையில் பாதிக்கப்பட்ட ஒரு நபராக இவரும் சமுதாயத்திற்கு அறிவுரை கூறியிருந்தாலும் அதனை புரிந்து கொள்ளாத சிலர் நீங்கள் கூறியதில் தமிழ் கொலை பண்ணி இருக்கிறீர்கள் எனவும் இவருக்கு கமெண்ட் போட்டு இருக்கிறார்கள் .ஆனால் இவருடைய ரசிகர்கள் சீக்கிரமாக குணமாகி மீண்டும் நல்லபடியாக திரும்பி வருவீர்கள் என இவருக்கு ஆறுதல்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications