செல்லப் பிள்ளை கேபி.. சூடான போட்டோ.. சூப்பராக ரசிக்கும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் செல்லப்பிள்ளையாக அந்த வீட்டை விட்டு வெளியே வந்த கேப்ரில்லா தன்னுடைய ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் .
அதை பார்த்து அவருடைய ரசிகர்கள் ரசித்து ரசித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .இந்த போட்டோஸ்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
கேப்ரில்லா அறிமுகமானது என்னவோ திரைப்படங்களில் தான் அதுவும் தனுசுடன் நடித்திருக்கிறார் .இவர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் பிரண்டாக நடித்திருந்தார்.

3 தோழி
தோழியாக நடித்து இருந்தாலும் பருவ மங்கையாக தற்போது இவர் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு படிப்பில் கவனத்தை செலுத்தி வந்தாலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவனத்தையும் செலுத்தி வந்தார். அதனாலேயே இவருக்கு நாளுக்குநாள் ரசிகர்கள் வட்டாரம் பெருகி வந்தது.

பம்பர் பரிசு
இருந்தாலும் இவருக்கு ஒரு பம்பர் பரிசாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று தெரிந்ததுமே இவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர் .இனி தினமும் இவருடைய தரிசனத்தை டிவியில் இரண்டு மணி நேரம் பார்க்கலாம் என்று ஆவலுடன் காத்திருந்தனர்.

கேபி மீம்ஸ்
அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு தகுந்த மாதிரிதான் கேப்ரில்லாவும் அந்த வீட்டிற்குள் நடந்து கொண்டார். அவருடைய ரசிகர்கள் இவரை தினமும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு கொண்டாடி வந்தனர். அதுமட்டுமல்லாமல் இவர் அன்பு டீமில் உறுப்பினராக மாறியதால் சில நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வந்தனர். இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவு இவருக்கு தொடர்ந்து இருந்து கொண்டிருந்தது.

நல்ல அறிவாளி
இவர் வயதில் இளையவராக இருந்தாலும் இந்த வீட்டிற்குள் அறிவுத் திறனுடன் ரம்யா பாண்டியனின் முகத்திரையை கிழித்து விட்டார் என்று இதற்காக இவருடைய ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அது மட்டுமல்லாமல் தவறு என்று தெரிந்தால் உடனே சுட்டிக்காட்டும் தைரியமும் இவருக்கு இருக்கு என்று இவருக்காக பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

பணப்பெட்டியுடன் வெளியேறினார்
ஆனால் கடைசியில் இவர பணப் பெட்டியை தூக்கிக்கொண்டு இந்த வீட்டை விட்டு வெளியே வந்ததால் இவருடைய ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர் .இருந்தாலும் இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு மீண்டும் இவர் இன்ஸ்டாகிராமில் களைகட்டத் தொடங்கி விட்டார். அதனால் இவருடைய ரசிகர்கள் இவருக்காக இன்ஸ்டாகிராமில் காத்துக்கிடக்கின்றனர்.

அடிக்கடி இன்ஸ்டா போஸ்ட்
அதனால்தான் அடிக்கடி இவரின் போஸ்ட் காக பலர் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து செல்கின்றனர் என்று கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஊதா ஊதா ஊதாப்பூ என்று பாட்டுப்பாடி ரசிக்கும் ரசிகர்கள் இவருடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

ரசிகர்கள் ஹேப்பி
தனிமையில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை கேப்ரில்லா வெளியிட்டதும் அதைப்பார்த்து பார்த்து ரசித்து அவருடைய ரசிகர்களும் கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள் .அதுவும் இவருடைய வெறித்தனமான ரசிகர்கள் ஹாட்டின் களை பறக்கவிட்டு கவிதைகளையும் பொழிகிறார்கள்.

கேபி ஆர்மி
இவருக்காக பல ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஃபேன்ஸ் பேஜ்களை ஓபன் பண்ணி ஆர்மி அமைத்தும் வருகிறார்கள் .நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இவர் சீக்கிரத்தில் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய ரசிகர்களின் ஆசையாம். அதற்கு முன்னோட்டமாக தான் கேப்ரில்லா போட்டோ ஷூட் நடத்தி அவர்களுடைய ரசிகர்களை என்ஜாய் படுத்தி வருகிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications