நீ பாடுனாலும் வாய்ப்பு தர மாட்டோம், எங்க குடும்பம் பாடணும்! இளையராஜா மருமகளிடம் கங்கை அமரன் பேச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் உட்பட பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஹாசினி இசையமைப்பாளர் இளையராஜாவின் மருமகள் என்று பல இடங்களில் கூறி இருக்கிறார். ஆனால் அருமையாக பாடும் ஹாசினிக்கு எதற்காக இளையராஜா சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில் அது குறித்து கங்கை அமரன் ஹாசினிடம் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி விடுகிறது.
பொதுவாக ஒரு சில பிரபலங்கள் தங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களை முன்னேற்றி வைப்பார்கள். அதே நேரத்தில் சிலர் சொந்த குடும்பத்தில் உள்ளவர்களை கூட கண்டுகொள்ள மாட்டார்கள். அதுபோலத்தான் இளையராஜாவின் மருமகளான ஹாசினிக்கும் அருமையாக பாடும் திறமை இருந்தாலும் அவருக்கு சரியான வாய்ப்பும் அங்கீகாரமும் இல்லாமல் இருக்கிறது.

அருமையான பாடகி
ஆனாலும் ஹாசினி சீரியலில் நடித்துக் கொண்டு தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் இளையராஜா உட்பட பலருடைய பாடல்களை பாடி அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் ரசிகர்கள் உங்களுடைய குரல் அருமையாக இருக்கிறது, நீங்கள் சினிமாவில் முயற்சி செய்யலாமே உங்களுடைய மாமா இளையராஜாவிடம் நீங்கள் வாய்ப்பு கேட்கவில்லையா? அவருடைய மகன்கள் கூட பல ஹிட்டு பாடல்கள் கொடுத்திருக்கிறார்கள் அதில் உங்களை ஏன் பாட வைக்கவில்லை என்றெல்லாம் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
ரசிகர்களின் கேள்விகள்
பேட்டிகளிலும் இதே கேள்வி ஹாசினி இடம் கேட்கப்படுகிறது. இந்த நிலையில் ஹாசினி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் கங்கை அமரருடன் சேர்ந்து ஹாசினையும் பாடல் பாடி இருக்கிறார். அப்போது கங்கை அமரன் "உனக்கு பெயர் வைத்தது யாரு?" என்று கேட்க, அதற்கு ஹாசினி, "இளையராஜா சார்" என்று சொன்னார். எனன்து இளையராஜா சாரா? என்று கங்கை அமரன் மிரட்டியதும், ஹாசினி "இல்லை மாமா" என்று சொல்கிறார்.
கங்கை அமரன் பேச்சு
அதற்கு கங்கை அமரன் எல்லோரிடமும் "இவங்க யாரு தெரியுமா இளையராஜாவின் சொந்த அக்காவுடைய பேத்தி தான்" என்று கூறுகிறார். அதோடு "இந்தப் பொண்ணு அருமையா பாடுறா.. ஆனால், உனக்கு நாங்க வாய்ப்பு தர மாட்டோம். எங்க குடும்பத்தில் உள்ளவங்க தான் பாடணும். மத்த யாரையும் நாங்க பாட வைக்க மாட்டோம். நீ நல்ல பாடுனா எங்களுக்கு என்னம்மா... நீ பாடுனா பாடிகிட்டு போ. அவ்வளவுதான்" என்று கூறியிருக்கிறார்.
நடிகை ஹாசினி பதிவு
அந்த வீடியோவை ஹாசினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "பதில் இதோ. இசை குடும்பத்தை சேர்ந்த எனக்கு ஏன் பாட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று எல்லா பார்வையாளர்களும் என்னிடம் கேட்கும் கேள்விக்கு இப்போது உண்மையான பதில் கிடைத்திருக்கிறது. ஊடகங்களில் நான் சந்தித்த தொடர்ச்சியான கேள்விகளுக்கு அமர் மாமா உண்மையான பதில் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி" என்று ஹாசினி தெரிவித்து இருக்கிறார்கள்.
இளையராஜாவின் மருமகள்
அதுபோல ஹாசினி இளையராஜாவின் அக்கா உடைய பேத்தி. அதே போல இளையராஜா மனைவியின் தம்பியின் மகள்தான். இளையராஜா அவருடைய உறவினரை திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இரண்டு பேருமே ஹாசினிக்கு உறவினர்கள் தானாம். ஆனாலும் ஹாசினிக்கு எந்த திரைப்படத்திலும் இளையராஜாவும், அவருடைய மகன்களும் வாய்ப்பு வழங்கவில்லை என்பது பலருடைய வருத்தமாகவும் இருக்கிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
"நான்கு” தலைமுறையாக மாஸ் காட்டும் "இசைஞானி..” இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த 10 ஆச்சரிய சம்பவங்கள்! -
83 வயதில் இசைஞானி இளையராஜாவின் காப்பி ரைட்ஸ் போராட்டம்.. இளைஞர்கள் அறிய வேண்டிய பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications