“கருடன்" படத்தில் பாரதி கண்ணம்மா ரோஷினியை பார்த்து சூரி கேட்ட கேள்வி! அதிர்ச்சியில் உறைந்த நடிகை
சென்னை: நடிகர் சூரி நடிப்பில் உருவான கருடன் திரைப்படத்தின் ஃப்ரீ ஷோபிரபலங்களுக்கு போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. படத்தைப் பார்த்த பல பிரபலங்களும் திரைப்படத்தை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.
அதே நேரத்தில் ரோஷினி ஹரிப்பிரியன் பாரதி கண்ணம்மா சீரியல் முலம் பெரிய அளவில் பிரபலமடைந்திருந்தார். ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் இப்போது கருடன் திரைப்படத்தில் ரோஷினி ஹரிப்ரியன் நடித்திருக்கிறார் அவர் குறித்து நடிகர் சூரி மேடை ஒன்றில் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் பல நடிகர் நடிகைகள் சின்னதிரையில் இருந்து வெள்ளி திரையில் அடி எடுத்து வெற்றி பெற்று கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது ரோஷினி ஹரிப்பிரியன் இடம் பிடித்து இருக்கிறார். இவர் டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்திருந்த நிலையில் அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சீரியல் மூலமாக ரோஷினியே எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலமானார்.
அந்த சீரியலின் கதைப்படி கண்ணம்மா கர்ப்பமாக இருக்கும்போது கையில் பேக்கை தூக்கிக்கொண்டு பல மாதங்களாக நடந்து கொண்டிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் கண்ணம்மா பேக் உடன் கிரிக்கெட் ஸ்டேடியம் முதல் நிலா வரைக்கும் பல இடங்களுக்கும் சுற்று திரிவது போன்று மீஸ்களை உருவாக்கி ட்ரெண்ட் செய்துவிட்டனர். இதனால் இந்த சீரியல் மட்டுமல்லாமல் ரோஷினியும் பெரிய அளவில் பிரபலமடைந்தார்.

ஆனால் திடீரென்று தான் அந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக அறிவுத்திருந்தார். சீரியலில் இருந்து விலகி சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த நிலையில் தான் சில வருடங்கள் கழித்து ரோஷினிக்கு கருடன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. நடிகர் சூரி தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
நடிகர் சூரி ஆரம்பத்தில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த நிலையில் விடுதலை படம் அவரை புகழின் உச்சத்துக்கு கொண்டு போனது. அதற்குப் பிறகு இப்போது கொட்டு காளி, கருடன், விடுதலை இரண்டாவது பாகம் போற்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிற நிலையில் கருடன் திரைப்படம் இந்த வாரத்தில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பு பிரபலங்கள் பார்க்கும் ஃப்ரீஷோ வெளியாகி இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர்களின் நடிப்பை குறித்து பல பிரபலங்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூரி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சூரி நான் என்னுடைய படத்தில் ரோஷினியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். ஏனென்றால் எங்க வீட்டில் ரோஷினிக்கு ரொம்பவே ஃபேன்ஸ் இருக்காங்க. இவங்களை கண்ணம்மாவா எங்க வீட்டில் பலருக்கும் பிடிக்கும்.
அதனால் எங்க வீட்டில் நான் போன் பேசும்போதும், நான் நடிக்கும் படத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்த கண்ணம்மாவும் இருக்காங்க என்று சொன்னதுமே என்னுடைய மனைவி அவருடைய நடிப்பை ரொம்ப பாராட்டுனாங்க. அப்புறம் அவங்க கிட்ட வீடியோ கால் பேசணும்னு சொன்னாங்க. நான் ரோஷினியிடம் முதன் முதலில் பேசும் போதே என்னுடைய மனைவி உங்களிடம் வீடியோ கால் பேச வேண்டும் என்று சொன்னாங்க என்று சொன்னபோது ரோஷினி ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க என்று அந்த பேட்டியில் சூரி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications