Maharasi: அடிப்பாவி! மாமாவுக்கு ஆசைப்பட்டு வான்மதியை கிணற்றில் தள்ளிவிட்டுட்டாளே...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முறை மாமனுக்கு ஆசைப்பட்ட காயத்ரியும், வான்மதியும் தமிழ் மாமாவுடன் கல்யாணத்துக்கும் ஏற்பாடு செய்துட்டாங்க. கடைசியில் முறை மாமன் ஆசையால் காயத்ரி, வான்மதியை புடிச்சு கிணற்றில் தள்ளிவிட்டுட்டா...!

ஒரு மாப்பிள்ளை இரண்டு கல்யாண ஏற்பாடுகள் என்று சன் டிவியின் மகராசி சீரியலில் கதை நகர்ந்துக்கிட்டு இருந்தது. இத்தனைக்கும் தமிழ் ஏற்கனவே ராஹினியை கல்யாணம் செய்துகிட்டு ஒரு குழந்தைக்கும் தகப்பனா ஆகி இருக்கான்.

அவனை கல்யாணம் செய்துக்க இருவரும் போட்டி போடுகிறார்கள். தமிழும் பெண்டாட்டி ராஹினி விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருக்க, அந்த சமயத்தில் இவன் வான்மதி, காயத்ரி இரண்டு மாமா பெண்களில் ஒருத்தரை கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவுக்கு வந்துடறான்.

வான்மதி காயத்ரி

வான்மதி காயத்ரி

தமிழ் மாமாவை நான்தான் கல்யாணம் செய்துக்குவேன் என்று காயத்ரியும், வான்மதியும் அடம்பிடிக்க, இருவரில் யாரை கல்யாணம் செய்துக்கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் உங்களுக்குள் ஒரு முடிவுக்கு வாங்க என்று ஒதுங்கிக் கொள்ளும் தமிழ். தான் கல்யாணம் செய்துகொள்வது என்பதில் தீவிரமா இருக்கான். வான்மதி, காயத்ரி யாரோ ஒருத்தர் என் குழந்தைக்கு அம்மாவா வந்தால் சரி என்றும் சொல்கிறான்.

இரண்டு தாலி இரண்டு பெண்கள்

இரண்டு தாலி இரண்டு பெண்கள்

வான்மதி அம்மா அப்பாவும் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யறாங்க. காயத்ரி அம்மா அப்பாவும் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யறாங்க. இரண்டு தாலி, இரண்டு பட்டுப் புடவை, வேஷ்டி சட்டை செட், இரண்டு செட் மலைகள் என்று தூள் பறக்குது. கல்யாண மண்டபமாவது ஒண்ணா அதுவும் ரெண்டா என்று கிண்டல் பண்ணும் தமிழ், யார் கிடைத்தாலும் ஓகேதான்னு நினைக்கிறான்.

கியூட் பெண்கள்

கியூட் பெண்கள்

வான்மதி, காயத்ரியா நடிக்கும் இரண்டு நடிகைகளும் ரொம்ப அழகான பெண்களாக பார்க்க பார்க்க கியூட்டாக இருக்கிறார்கள். டீன் ஏஜ், ட்வென்டிஸ் பெண்கள் என்று கேரக்டருக்கு தகுந்த மாதிரி பொருத்தமாக இருக்கிறார்கள். முறை மாமனுக்கு ஆசைப்பட்டு போட்டி போடுவது என்பதும் பார்க்க நன்றாக இருக்கிறது. இதில் பேராசை கொண்ட அத்தை மகளாக இருக்கும் காயத்ரி தமிழ் மாமாவை அடைய செய்யக் கூடாத காரியத்தையும் செய்யத் துணிந்து விடுகிறாள்.

வான்மதி எஸ்கேப்

வான்மதி எஸ்கேப்

காயத்ரி தனக்கு போட்டியாக இருக்கும் வான்மதியை கிணற்றில் தள்ளிவிட்டுட்டு, தானே அவள் எழுதியது போல் ஒரு கடிதமும் எழுதி வைத்து விடுகிறாள். அதாவது நான் மாமாவை காயத்ரிக்கு விட்டுக் கொடுக்கிறேன் என்று வான்மதி எழுதி வைத்தது போல காயத்ரி எழுதி வைத்து விடுகிறாள். மாமாவை அடையணும் என்கிற வேகத்தில் இப்படி செய்துவிட்ட காயத்ரி, வான்மதி உயிரோடு வந்து நிற்பதை பார்த்து, தான் செய்த தவறை நினைத்து அழும்போது வயதுக்கே உண்டான இன்னொசென்ஸ் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+