Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்த கண்ணும் நடிகை மீதுதான்.. தங்கத்தில் மின்னிய சானியா ஐயப்பன் ஜாக்கெட்.. வாயை பிளந்த இணையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் ரிலீஸ் ஆகி வசூலில் பட்டையை கிளப்பியிருந்தது. சர்ச்சைகள் பல இருந்தாலும், படம் நன்றாக ஓடி தாறுமாறான விமர்சனங்களை பெற்றுள்ளது.. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ல், மலையாள சினிமாவில் குயின் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் சானியா ஐயப்பன்... இந்த படத்தில் நடித்ததற்காக, சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுகளை வாங்கி குவித்திருந்தார்.. முக்கியமாக, சைமா விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் பல, சானியாவை தேடிவந்தன..

Television Golden Blouse Saniya Iyyappan

சிறந்த துணை நடிகை

சமீபத்தில், லுசிஃபர் படத்தில் சானியா ஐயப்பன் நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது சைமாவால் சமீபத்தில் வழங்கப்பட்டது. மலையாளத்தில் இவர் நடித்த படங்கள் வெற்றி பெற்ற நிலையில், தமிழிலும் காலடி வைத்தார்.. கடந்த 2023ல் வெளியான இறுகப்பற்று , 2024 ல் வெளியான சொர்க்கவாசல் என்ற இரண்டு படங்களிலும் சானியா நடித்திருக்கிறார்.

மேற்கண்ட 2 படங்களும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன், சானியா மீதான கவனத்தையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருந்தது.. இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாளை சானியா கொண்டாடியிருந்தார்.. அப்போது, தங்கத்தாலேயே அவர் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தங்கத்தினால் ஜாக்கெட்

ஜாக்கெட் முழுவதுமே தங்கமா? அல்லது தங்க இழைகளால் செய்யப்பட்டதா? தங்க முலாம் பூசப்பட்டதா? என்று தெரியவில்லை. ஆனால், கிளாமராக ஜாக்கெட் அணிந்து வந்து கேக் வெட்டியது, இணையத்தில் போட்டோக்களாகவும், வீடியோவாகவும் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரம் விற்கப்படுகிறது.. ஆனால் சானியா ஐயப்பன், தங்கத்தாலேயே ஜாக்கெட் அணிந்து வந்துள்ளார்.. இறுகப்பற்று, சொர்க்க வாசல் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சானியா ஐயப்பன்..

விருதுகளை குவித்தவர்

சமீபத்தில் மம்முட்டி நடித்து வெளிவந்த லூசிபர் 2 எம்புரான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.. இன்று பல மலையாள படங்களில் நடித்து கொண்டிருக்கிறார் சானியா ஐயப்பன். சிறு வயதிலிருந்தே குறும்படங்கள், விளம்பரங்கள், டெலிவிஷன் படங்களில் நடித்து அசத்தியவர் சானியா.. லூசிபர் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றுள்ளார்.

2016ம் ஆண்டு மலையாள சினிமா குயில் என்ற படத்தில் அறிமுகமானார்.. இதற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான விருதுகளை வாங்கி குவித்தார்.. சைமா விருது, பிலிம்பேர் விருது, மலையாளத்தில் பல விருதுகளை பெற்றுள்ளார்.. கதைகளை தேர்வு செய்வதில் மிகவும் திறமைசாலி.. தனக்கு நல்ல பெயர் கிடைக்கக்கூடிய, திறமையை வெளிப்படுத்தக்கூடிய, நடிப்புக்கான வாய்ப்பு இருக்கக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்கிறார்..

ரிசார்ட்டில் பிறந்த நாள் விழா

தமிழிலும் முன்னணி நடிகையாக உள்ளார், மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார்.. கடந்த 20ம் தேதி, கேரளாவிலுள்ள பிரம்மாண்டமான ரிசார்ட் ஒன்றில் தன்னுடைய 23வது பிறந்தநாளை கொண்டாடினார்.. அப்போது, அவர் அணிந்திருந்த ஜாக்கெட் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது.. தங்கத்தினால் ஆன ஜாக்கெட் அணிந்திருந்தாலும், அதன் விலையை பற்றி சானியா சொல்லவில்லை..

மிக சிறப்பாக நடத்திய பிறந்தநாள் விழாவின் போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பலரையும் திகைப்பில் ஆழ்த்தி வருகின்றன.." என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+