அரசு ஊழியர்களின் சம்பளம் ₹1.22 லட்சமாக உயரலாம்.. 2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர் கணிப்பு என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தில் 8-வது ஊதியக் குழு பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புதிய ஊதிய அமைப்பைத் தீர்மானிப்பதில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் முக்கியப் பங்கு வகிக்க போகிறது. அதன்படி 8-வது ஊதியக் குழுவில் 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' 2.57-ஆக உயர்ந்தால், கிரேடு 6 முதல் 8 வரையிலான அரசு ஊழியர்களின் மாதச் சம்பளம் ₹1.22 லட்சம் வரை உயரக்கூடும் என்று அனைத்து இந்திய என்பிஎஸ் ஊழியர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் மஞ்சித் சிங் படேல் கூறியுள்ளார்.

8-வது ஊதியக் குழு தனது அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டங்களை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று தொடங்கி உள்ளது. இந்த சூழலில் அறிக்கை தயாரிப்பதற்காக ஊழியர்கள் தொடர்பான விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களிடம் இக்குழு கோரியிருக்கிறது அந்தந்தத் துறைகளும் அமைச்சகங்களும் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.

8th Pay Commission

இம்மாதத் தொடக்கத்தில், மத்திய பொதுப்பணித் துறையின் தலைமையகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள துணை அலுவலகங்களிடம், 8-வது ஊதியக் குழுவிற்கான 'மத்திய அரசு ஊழியர்களுக்கான குழு காப்பீட்டுத் திட்டம்' தொடர்பான விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது.

பல்வேறு துறைகளுடனான கூட்டங்கள் மற்றும் பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் 8-வது ஊதியக் குழுவின் அறிக்கை உருவாக்கப்படும்; இவ்வறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய திருத்தங்கள் குறித்த பரிந்துரைகள் இடம்பெற உள்ளது.

அறிக்கை அறிவிக்கப்பட்டதும், அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கான நிலுவைத் தொகையையும், புதிய ஃபிட்மென்ட் ஃபேக்டர் அடிப்படையிலான திருத்தப்பட்ட ஊதியத்தையும் ஊழியர்கள் பெறுவார்கள். இந்த செய்தியில் நாம், 8-வது ஊதியக் குழுவில் 2.0, 2.15, 2.28 மற்றும் 2.57 ஆகிய ஃபிட்மென்ட் ஃபேக்டர் அளவுகளின் கீழ் கிரேடு 6-8 ஊழியர்களுக்கு எவ்வளவு அடிப்படைச் சம்பளம் கிடைக்கக்கூடும் என்பதைப் பார்க்க போகிறோம்.

8-வது ஊதியக் குழுவிடம் ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகள் முன்வைத்துள்ள ஊதியப் பரிந்துரைகள் என்ன?

மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய அமைப்பான 'கூட்டு ஆலோசனைக் கட்டமைப்பின் தேசியக் குழு' 8-வது ஊதியக் குழுவிடம் 3.833 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டரைப் பரிந்துரை செய்திருக்கிறது.. இதன் பொருள் என்னவென்றால், 7-வது ஊதியக் குழுவின் கீழ் இருந்த குறைந்தபட்ச ஊதியமான ரூ. 18,000, 8-வது ஊதியக் குழுவின் கீழ் ரூ. 69,000-ஆக உயர வேண்டும் என்பதுதான்.

'அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் கூட்டமைப்பு' (AIDEF), 'தேசிய அஞ்சல் துறை ஊழியர்கள் கூட்டமைப்பு' (FNPO) மற்றும் 'அகில இந்திய புதிய ஓய்வூதியத் திட்ட ஊழியர்கள் கூட்டமைப்பு' உள்ளிட்ட பல அமைப்புகளும் NC-JCM-இன் கிரேடுப்பாட்டையே பின்பற்றி, தலா 3.83 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டரைப் பரிந்துரை செய்துள்ளன.

மறுபுறம், இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் , பல்வேறு கிரேடு ஊழியர்களுக்கு ஐந்து விதமான 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்களை' பரிந்துரைத்துள்ளது; இதில் குறைந்தபட்சம் 2.92 ஆகவும், அதிகபட்சம் 4.38 ஆகவும் உள்ளன. 6-வது மற்றும் 7-வது ஊதியக் குழுக்களில் ஃபிட்மென்ட் ஃபேக்டர்கள் முறையே 1.86 மற்றும் 2.57 ஆக இருக்கின்றன.. முந்தைய தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், 2.92, 3.83 அல்லது 4.38 ஆகிய ஃபிட்மென்ட் ஃபேக்டர்கள் மிகவும் அதிகமாகத் தோன்றுகின்றன.

8-வது ஊதியக் குழுவிற்கான ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்னவாக இருக்கக்கூடும்?

அனைத்து இந்திய என்பிஎஸ் ஊழியர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் மஞ்சித் சிங் படேல் கூறும் போது, தற்போதைய அகவிலைப்படி மற்றும் ஊதியம் தொடர்பான ஃபேக்டர்களைக் கருத்தில் கொள்ளும்போது, 8-வது ஊதியக் குழுவிற்கு 2.1 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் அமைவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. எனினும் அரசு ஊதியக் குழுவின் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரே ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்த விவரம் தெரியவரும் என்றார்.

கிரேடு 6 முதல் 8 வரையிலான ஊழியர்களுக்கான 8-வது ஊதியக் குழுவின் ஊதிய மதிப்பீடுகள்

7-வது ஊதியக் குழுவின் ஊதிய விகிதங்களின்படி, கிரேடு 6, 7 மற்றும் 8 ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் முறையே ரூ. 35,400, ரூ. 44,900 மற்றும் ரூ. 47,600 ஆகும்.

ஊதிய கிரேடு மற்றும் அடிப்படை ஊதியம்

கிரேடு 6 ₹ 35,400
கிரேடு 7 ₹ 44,900
கிரேடு 8 ₹ 47,600

8-வது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் ஃபேக்டர்களாக 2.0, 2.15, 2.28 மற்றும் 2.57 ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, கிரேடு 6, 7 மற்றும் 8 ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை ஊதிய மதிப்பீட்டை நாம் கணக்கிடுவோம்.

2.0, 2.15, 2.28 மற்றும் 2.57 ஆகிய ஃபிட்மென்ட் ஃபேக்டர்களின் அடிப்படையில் 8-வது ஊதியக் குழுவின் (8th CPC) கிரேடு 6-க்கான (Level 6) ஊதிய மதிப்பீடுகள்

தற்போதைய அடிப்படை ஊதியம் ₹ 35,400
2x ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்றால் ₹ 70,800 ஆக உயரும்
2.15x ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்றால் ₹ 76,110
2.28x ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்றால் ₹ 80,712
2.57x ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்றால் ₹ 90,978

2.0, 2.15, 2.28 மற்றும் 2.57 ஆகிய ஃபிட்மென்ட் ஃபேக்டர்களின் அடிப்படையில் 8-வது ஊதியக் குழுவின் கிரேடு 7-க்கான ஊதிய மதிப்பீடுகள் எப்படி இருக்கும்

தற்போதைய அடிப்படை ஊதியம் ₹ 44,900
2x ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்றால் ₹ 89,800
2.15x ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்றால் ₹ 96,535
2.28x ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்றால் ₹ 1,02,372
2.57x ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்றால் ₹ 1,15,393

2.0, 2.15, 2.28 மற்றும் 2.57 ஆகிய ஃபிட்மென்ட் ஃபேக்டர்களின் அடிப்படையில் 8-வது ஊதியக் குழுவின் கிரேடு 8-க்கான ஊதிய மதிப்பீடுகள்

தற்போதைய அடிப்படை ஊதியம் ₹ 47,600
2x ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்றால் ₹ 95,200
2.15x ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்றால் ₹ 1,02,340
2.28x ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்றால் ₹ 1,08,528
2.57x ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்றால் ₹ 1,22,332

அதேநேரம் உண்மைக்கும் எதிர்பார்ப்புக்கும் எப்போதுமே வித்தியாசம் இருக்கும். உண்மையில் ஃபிட்மென்ட் ஃபேக்டர் 1.85-க்கு மேல் இருக்க வாய்ப்பு மிக குறைவு. 2.15x ஃபிட்மென்ட் ஃபேக்டர் கிடைக்க வேண்டும்; 3x ஃபிட்மென்ட் ஃபேக்டர் கிடைக்க வேண்டும்; 4x ஃபிட்மென்ட் ஃபேக்டர் நடைமுறைக்கு வரணும் என்று அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் கோரிக்கை வைத்தாலும், நடைமுறைக்கு வர வாய்ப்பே இல்லை.. அதிகபட்சம் ஃபிட்மென்ட் ஃபேக்டர் 1.85-க்கு மேல் இருக்காது என்றே பல நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதற்கு காரணம் 7-வது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம் ₹7,000-லிருந்து ₹18,000 ஆக உயர்த்தப்பட்ட போது ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.57 ஆக இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) ஏற்கனவே 50%-ஐத் தாண்டிவிட்ட நிலையில், அதை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதே அரசின் முதன்மை நோக்கமாக அரசுக்கு இருக்கிறது. ₹18,000 அடிப்படை ஊதியத்துடன் 50% அகவிலைப்படி + சிறிதளவு ஊதிய உயர்வைச் சேர்த்தால், கணக்கீடு தோராயமாக 1.85 மடங்கு (₹18,000 × 1.85 = ₹33,300) என்ற அளவில் இருக்கும். ஃபிட்மென்ட் ஃபேக்டரை 2.1 அல்லது 2.57 ஆக உயர்த்தினால், அரசுக்கு ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்பதால் , நிச்சயமாக மத்திய அரசு ஒப்புக்கொள்ளாது. தற்போதைய சூழலில் நாட்டின் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு நிதி தேவைப்படுவதால், நிதி அமைச்சகம் 1.80 முதல் 1.85-க்கு மேல் ஃபிட்மென்ட் ஃபேக்டரை உயர்த்த ஒப்புக்கொள்வது மிகக் கடினம் ஆகும். எதார்த்தம் என்னவோ இதுதான் என்கிறார்கள் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+