அம்மா கள்ளக்காதல் வேண்டாம்.. கைவிட சொன்ன மகனையே காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய தாய்! கொடூரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ''அம்மா.. கள்ளக்காதல் தப்புமா.. கள்ளக்காதல் வேண்டாம்'' என்று கூறிய மகனையே தாய் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு தீர்த்து கட்டி நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவம் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வருமாறு:

bengaluru-man-killed-by-his-mother-and-her-lover-after-he-objected-for-affair

கர்நாடகாவில் பெலகாவி மாவட்டம் அருகே கோலாப்பூர் நெடுஞ்சாலையோரம் கடந்த 3ம் தேதி இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்த இளைஞரின் பெயர் விஜய் நாராயணன் (வயது 24) என்பதும், அவர் பெங்களூர் ஆர்டி நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதற்கிடையே தான் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் விஜய் நாராயணன் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. யாரோ அவரது கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது தான் விஜய் நாராயணனின் தாய் மீனா நாராயணன் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. தாய் மீனா நாராயணன் தான் மகன் விஜய் நாராயணனை கொன்றது தெரியவந்தது. அதாவது மீனா நாராயணன் பியூட்டி பார்லர் ஒன்றில் மேனேஜராக உள்ளார். இவரிடம் மகாராஷ்டிவை சேர்ந்த ராகேஷ் பரசுராம் ஜமுனி (34) என்பவர் டிரைவாக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் 2 பேரும் அடிக்கடி காரில் பயணிப்பதால் டிரைவர் - ஓணர் என்பதை தாண்டி இருவரும் நெருக்கமாக பழக தொடங்கினர். இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி வெளியே சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுபற்றி மகன் விஜய் நாராயணனுக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த விஜய் நாராயணன், தனது தாய் மீனா நாராயணனிடம், ''அம்மா கள்ளக்காதல் வேண்டாம். உடனடியாக டிரைவரை பணியில் இருந்து நீக்க வேண்டும். கள்ளக்காதலை கைவிட வேண்டும்'' என கூறியுள்ளார். ஆனால் மீனா கேட்கவில்லை. தொடர்ந்து டிரைவருடன் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக மீனா மற்றும் மகன் விஜய் ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் கோபமடைந்த மீனா தனது மகனை தீர்த்து கட்ட கள்ளக்காதலன் ராகேஷ் உடன் திட்டமிட்டார். அதன்படி நவம்பர் 1ம் தேதியான கன்னட ராஜ்யோத்சவா விழாவை பார்க்க மீனா தனது மகன் விஜய்யை பெலகாவி அழைத்து சென்றார். அப்போது குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார். விஜய் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது மீனாவின் கள்ளக்காதலன் ராகேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து விஜய்யின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பிறகு உடலை கோலாப்பூர் ரோட்டில் வீசிவிட்டு ஒன்றும் நடக்காதது போல் அவர்கள் நாடகமாடியதும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜய்யின் தாய் மீனா நாராயணன், கள்ளக்காதலன் ராகேஷ், ராகேஷின் நண்பர்களான சச்சின் காம்ப்ளி, மனோஜ் காம்பிளி, தமன்னா காம்ப்ளி, ஏக்நாத் காம்ப்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 18 வயது நிரம்பாத மைனர் ஒருவர் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். கள்ளக்காதலை கைவிட சொன்ன 24 வயது மகனை பெற்ற தாயே தனது கள்ளக்காதலன் உதவியுடன் தீர்த்து கட்டியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+