Good Bad Ugly Box Office: இரண்டாவது நாள் வசூல் இத்தனை கோடியா? மாஸ் காட்டும் அஜித்தின் குட் பேட் அக்லி
சென்னை: அஜித் நடிப்பில் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் இரண்டாவது நாளில் இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் பெற்று இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முதல் நாளை விட குறைந்திருக்கிறதா? அல்லது அதிகரித்து இருக்கிறதா என்று பார்க்கலாம்.
நடிகர் அஜித் நடிப்பில் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருந்த குட் பேட் அக்லி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் அஜித் குமாருக்கு கம்பேக் கொடுத்திருக்கிறது என்று பலர் அவரே பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்களும் தங்களுக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து நெகிழ்ந்து போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ரசிகர்களுக்கு வருத்தம்
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. முதல் நாளே இந்த திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் பெற தொடங்கியது. அதன் தாக்கம் வசூலை அதிகமாக பாதித்தது. இரண்டு வாரங்கள் தியேட்டரில் ஓடிய போதும் ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் ரூபாய் 135 கோடி மட்டும்தான் வசூல் செய்தது. இது அஜித்துடைய ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
ஏமாற்றிய விடாமுயற்சி
சில வருடங்கள் காத்திருப்புககு பிறகு வந்த விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்ததை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வரும்போது இந்த படம் பட்டையை கிளப்பும் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். அதேபோல ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் பேன் பாய் மொமண்டை சரியாக நிவர்த்தி செய்து இருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நட்சத்திர பட்டாளம்
அதே நேரத்தில் இந்த திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பழைய திரைப்படங்களில் ஹிட்டான பாடல்கள் பல இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருப்பதை சிலர் பாராட்டி வருகின்றனர் ஒரு சிலர் அதை விமர்சித்து வருகின்றனர். அதுபோல இந்த திரைப்படத்தில் திரிஷா ஆறாவது முறையாக அஜித்துடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.
முதல் நாள் வசூல்
அதுபோல வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார். இவர்களோடு சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், பிரபு, சிம்ரன் என அதிகமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மைத்ரி மூவி மேக்கர் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி குட் பேட் அக்லி திரைப்படம் முதல் நாளில் 30.09 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இரண்டாவது நாள் வசூல்
அதை தொடர்ந்து இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் இரண்டாவது நாளிலே உலகம் அளவில் சுமார் 90 கோடிக்கு மேலே வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது. அதுபோல தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை உள்ளதால் குட் பேட் அக்லி குறைந்தபட்ச 300 கோடி வசூல் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications