Baakiyalakshmi serial: பாக்யா- ராதிகா இடையே பஞ்சாயத்து.. கைது செய்யப்பட்ட கோபி?.. விறுவிறு ப்ரோமோ
சென்னை: என்னாது பாக்கியலட்சுமி தொடரில் பாக்யாவும் ராதிகாவும் நேருக்கு நேர் மல்லுக்கட்டியதால் கோபியை கைது செய்துவிட்டது போல் வீடியோ ஒன்று வெளியானது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் உள்ளது. பாக்யாவாக நடித்து வரும் சுசித்ராவின் நடிப்பை மக்கள் ரசிக்கிறார்கள். மாமனார், மாமியார், கணவர், 3 பிள்ளைகள், மருமகள் என தினந்தோறும் தன் வாழ்வில் பிரச்சினைகளை சந்திக்கும் இல்லத்தரசியின் கதைதான் இந்த பாக்கியலட்சுமி சீரியல் ஆகும்.

கல்யாணம்
தனக்கென இரு மகன்கள், அதில் ஒருவருக்கு கல்யாணம் ஆகி மருமகள் வந்த நிலையில் குடும்பத் தலைவன் கோபிக்கு ராதிகா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. கடைசியில் பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை எப்படியாவது திருமணம் செய்ய துடிக்கிறார் கோபி.

மூடி மறைத்த
இந்த விஷயத்தை எப்படியோ மூடி மறைத்த நிலையில் ஒரு நாள் பூதாகரமாகிவிட்டது. பாக்கியா வீட்டை விட்டு வெளியே போகிறார். இந்த சீரியலில் இனி என்ன நடக்க போகிறது என்பதுதான் கதை. அதாவது கோபி பாக்யாவுடன் வாழ போகிறாரா இல்லை ராதிகாவுடன் வாழ போகிறாரா என்பதுதான். விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் இந்த சீரியலில் நடித்து வரும் சுசித்ரா, ரேஷ்மா உள்ளிட்டோர் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளனர்.

விஜய் டிவி
விஜய் டிவியில் ராஜூவூட்ல பார்ட்டி எனும் நிகழ்ச்சியில் சொல்வெதல்லாம் உண்மை நிகழ்ச்சியை போல் ராமர் தலைமையில் பாக்யாவுக்கும் ராதிகாவுக்கும் இடையே பஞ்சாயத்து செய்வது போல் செய்து வருகிறார். அப்போது உங்களுக்கு என்னதாம்மா பிரச்சினை என கேட்க இருவரும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் காட்டிக் கொள்கிறார்கள்.

கோபி எங்கே
அப்போது கோபி எங்கே அவர வரச்சொல்லுங்க என ரேஷ்மா சொல்ல அதற்கு ராமரோ அவரை கைது பண்ணிட்டாங்கம்மா என சொல்கிறார். ஒரு கிளிப்பிங்கில் ஒருவர் தலையில் துணியால் மூடப்பட்டு போலீஸார் அழைத்து செல்வது போல் காட்டப்பட்டுள்ளது. அவர் யார் என தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு ஒளிபரப்பாகும். அப்போதுதான் அவர் யார் என்பது தெரியவரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications