விஜயிடம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எடுத்திருக்கிறேன்.. அதில் அவர் சொன்ன விஷயம் இதுதான்! ஓபனாக உடைத்த கோபிநாத்
சென்னை: பிரபலமான நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடம் தனித்த இடத்தை பிடித்தவர் கோபிநாத். அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சில விஷயங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக நடிகர் விஜய் மற்றும் அஜித் குமார் பற்றிய அவர் கூறிய தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜயின் மௌனம்
சமீப காலமாக விஜய் எந்த யூடியூப் சேனல்களுக்கும் அல்லது டெலிவிஷன் சேனல்களுக்கும் பேட்டி கொடுக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு ஒரு குறையாகவே இருந்து வருகிறது. சினிமாவைத் தாண்டி அரசியலில் காலடி வைத்த பிறகு, அவர் பொதுவாக அதிகமாக வெளிப்படையாக பேசாமல் இருப்பது பலரிடமும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அவரது கடைசி படமான ஜனநாயகன் இன்னும் வெளியீட்டை நோக்கி காத்திருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் பிஸியாக இருக்கும் விஜய், தன்னைச் சுற்றி வரும் சர்ச்சைகள் மற்றும் வதந்திகள் குறித்து நேரடியாக விளக்கம் தருவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு அவர் ஒரு ஆங்கில சேனலுக்கு பேட்டி கொடுத்தார் என்ற தகவலும் வெளியானது. ஆனால் அதிலும் முகம் காட்டாமல் பேசியதாக கூறப்பட்டது இது ரசிகர்களை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
கோபிநாத் சொன்ன ரகசியம்
இந்த சூழலில் தான் கோபிநாத் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் சொல்வதாவது, "நான் விஜயிடம் ஒரு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எடுத்திருக்கேன். அப்போது அஜித் பற்றி கேட்டேன். அதுக்கு விஜய் 'அவர் தன்னம்பிக்கையின் உருவம்'ன்னு சொன்னாரு.
அதே மாதிரி, அஜித்திடமும் விஜய் பற்றி கேட்டேன். அவர் என்ன சொன்னார்னா 'விஜய் தான் தன்னம்பிக்கையின் உருவம்'ன்னு சொன்னார்." இரண்டு பேருமே தன்னம்பிக்கை என்று சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என கோபிநாத் சொல்லி இருக்கிறார்.
உள்ளுக்குள் மரியாதை
கோபிநாத் இதை தொடர்ந்து, "விஜய், அஜித் ரசிகர்கள் தான் சண்டை போடுறாங்க... ஆனா இந்த இரு நடிகர்களும் ஒரே மாதிரி யோசிப்பவர்கள். ஒருவரை ஒருவர் மதிக்கிறவர்கள்." என்று கூறியிருக்கிறார். இந்த வார்த்தைகள் ரசிகர்களுக்கு ஒரு புதிய பார்வையை கொடுத்துள்ளது.
ஆரம்பத்தில் சந்தித்த சவால்கள்
கோபிநாத் மேலும் பேசும்போது, இருவரின் ஆரம்ப காலத்தை நினைவுபடுத்துகிறார். எந்த நடிகரும் முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடிக்க மாட்டார்கள். விஜய்க்கு ஆரம்பத்தில் நிறைய விமர்சனங்கள் வந்தது. "இவர் ஹீரோவா?" இவர் முகத்தை எல்லாம் பார்க்க முடியுமா என்ற கேள்விகள் கூட எழுந்தது. ஆனால் இன்று அதே விஜய் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் நிற்கிறார்.
அதேபோல், அஜித்தும் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னம்பிக்கையால் வளர்ந்து இன்று முன்னணி நடிகராக உள்ளார். "இவர்கள் இருவருக்கும் இருக்கும் காமன் விஷயம் என்னனா, தன்னம்பிக்கை. அதுதான் இவர்களை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்தது" என்று கோபிநாத் கூறியிருக்கிறார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம்












Click it and Unblock the Notifications