போனுக்காக கெஞ்சிய கணவர்..மனைவியின் பிடிவாதம்.. கோபிநாத்தின் முடிவு.. இவரை புரிஞ்சிக்கவே முடியல
சென்னை: விஜய் டிவியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் ஏற்கனவே தந்தை- மகள் -தாய்க்கு இடையேயான பாசத்தை பற்றிய கருத்து பரிமாற்றங்கள் பற்றிய வீடியோ வைரலாகி பலரின் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் நீயா நானா நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக வெளிவர இருக்கும் எபிசோடுகளின் ப்ரோமோ வெளியாகி மேலும் சின்னத்திரை ரசிகர்களிடம் ஆர்வத்தை கூட்டி உள்ளது .
மேலும் பல சுவாரசியங்களை இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் பார்ப்பதற்கு ரசிகர்கள் இப்போதே தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

தொடரும் சுவாரசியம்
கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் மற்றும் அவர்களது கணவன்மார்களை வைத்து நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த எபிசோடில் தந்தை மகள் இடையே நடைபெற் நிகழ்வுகளும் அதை கோபிநாத் கொண்டு சென்ற விதமும் சமூக வலைதளங்களில் செலிப்ரிட்டிகள் தொடங்கி பலரால் மனம் உருகி பாராட்டப்பட்டு வருகிறது. மீதி பாகங்கள் வருகிற வாரங்கள் ஒளிபரப்பாக உள்ள நிலையில், செல்போன் பயன்படுத்துவது குறித்து கணவரும் அவரது மனைவியும் எடுத்து வைக்கும் கருத்துகள் அடங்கிய ப்ரோமோ சுவாரசியமாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

கணவரின் பரிதாப நிலை
பள்ளிக் குழந்தைகள் துவங்கி வீட்டில் இருக்கும் வயதானவர்கள் வரை மொபைல் போன் இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை இருக்கும் இந்த காலகட்டத்தில், மொபைல் போன் இல்லாமல் குடும்ப தலைவர் ஒருவர் இருப்பது பெரும் வியப்பை தருவதாக இருப்பதாகவும் போன் இல்லாத ஏக்கத்தை அந்த கணவர் கூறும்போது பரிதாபமாக தோன்றுவதாகவும் ப்ரோமோவை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.தான் காலில் விழுந்து கேட்ட பின்பும் தன்னுடைய மனைவி தனக்கு மொபைல் போன் தராததாகவும் மிகவும் பரிதாபமாக கூறியுள்ளார் அந்த கணவன்.

மனைவி கூறும் நியாயம்
இந்தப் புலம்பலை கேட்ட கோபிநாத் அவருடைய மனைவியை பார்த்து பள்ளி குழந்தையை ஒடுக்குவது போல் உங்கள் கணவரை மொபைல் விஷயத்தில் ஒடுக்கி உள்ளீர்கள் இது நியாயமா என்று கேட்டதற்கு, அவரது மனைவியும் தன்னுடைய கணவர் மொபைல் போன் பயன்படுத்தினால் மிகவும் நீண்ட நேரம் கேம் விளையாடுவதாகவும், அதனால் சரியான நேரத்திற்கு எழுந்து வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும் கூறினார். இருந்தாலும் இந்தக் காலத்தில் ஒரு போன் வைத்திருக்க அவருடைய கணவரை அனுமதிக்காதது பாவம் இல்லையா.. என்று கூறியுள்ளார்.

கடைசியில் வைத்த ட்விஸ்ட்
இறுதியாக தனக்கு பிடிக்காத கேமை அவர் மொபைல் போனில் நீண்ட நேரம் விளையாடுவதாகவும், அதனால் தான் அவரை மொபைல் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கவில்லை என்று அந்த பெண் கூறுகிறார். அப்படி என்னதான் கேம் விளையாடுவார் என்று கோபிநாத் அந்த பெண்னை பார்த்து கேட்டதற்கு..சர்க்கிள் ரம்மி என்று அந்தப் பெண் சொன்னதும், நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் கொஞ்சம் அதிர்ச்சியாகி, அந்த பெண்ணை பார்த்து நீங்கள் உங்கள் கணவரை மொபைல் போன் பயன்படுத்துவதற்கு அனுமதிக்காது நல்ல விஷயம் தான் என்றும்,அதை அப்படியே தொடருங்கள் என்றும் கூறி உள்ளது போன்று ப்ரோமோ முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications