5 ஏக்கர் அரசு நிலத்தை நடிகைகளுக்கு.. ஸ்ரீதேவி நேரடியாக சென்று வாங்கி வந்த விருதுநகர் சீட்.. நிஜமா?
சென்னை: தமிழக அரசு அதிகாரிகளை பொறுத்தவரை நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பற்றி கவலைப்படுவதே இல்லை.. அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வதை பற்றியும் நடவடிக்கை எடுப்பதில்லை.. அன்றைய காலத்திலிருந்தே சினிமா பிரபலங்களுக்கு எத்தனையோ அரசு நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் வேதனை தெரிவித்துள்ளார்.
Channel 5 Tamil என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சமீபத்தில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், அம்பிகா, ராதாவின் ஏஆர்எஸ் கார்டன் உருவான விதம் குறித்தும், ஆக்கிரமிப்பு நிலங்களில் அதிகாரிகளின் அலட்சியம் குறித்தும் விரிவாக பேசியிருந்தார்.

எம்ஜிஆரிடம் கோரிக்கை
குறிப்பாக, "சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோ போலவே, ஒரு ஸ்டுடியோவை சொந்தமாக கட்ட வேண்டும் என்று அம்பிகா, ராதாவின் நீண்ட நாள் ஆசையாகும்.. 1987-ல் எம்ஜிஆர் மரணமடையும் சூழலில் இருந்தார்.. ஒருநாள், அம்பிகா, ராதா, இவர்களது அம்மா சரஸம்மா மூன்று பேரும் எம்ஜிஆரிடம் தங்கள் கோரிக்கைகளை சொன்னார்கள்.. எம்ஜிஆரின் காலில் விழுந்து அழுது இடம் கேட்கிறார்கள்..
அப்போது வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தார் திருநாவுக்கரசு.. உடனே எம்ஜிஆர் திருநாவுக்கரசை அழைத்து, ஏதாவது ஒரு நிலத்தை 99 வருஷத்துக்கு அவர்களுக்கு எழுதித்தந்துவிடுமாறு சொல்கிறார்.. அப்போதுதான், வளசரவாக்கம் பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரப்பட்டது.
உருவானது ஏஆர்எஸ் கார்டன்
எம்ஜிஆர் ஒதுக்கி தந்த அந்த இடத்தில்தான் ஏஆர்எஸ் ஸ்டுடியோ கட்டப்பட்டது. அரசு நிலம் 99 வருஷத்துக்கு இலவசமாக இவர்களுக்கு தரப்பட்டது. திரைப்பட சேவைக்காக இந்த இடம் தரப்பட்டது. இந்த ஸ்டுடியோவை செங்கல், சிமெண்ட், கம்பி, மொசைக் போன்ற அனைத்தும் மறைந்த தலைவர் மூப்பனாரால் இலவசமாக வழங்கப்பட்டது.
இதற்கு காரணம், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்துவதற்கு அம்பிகா, ராதாவை பயன்படுத்தி கொள்ளலாம் என்று மூப்பனார் அப்போது நினைத்தார்.. இதற்காக ராஜீவ் காந்தியிடமும், 2 நடிகைகளையும் அழைத்து சென்று அறிமுகப்படுத்தி வைத்து, தமிழகத்தில் இவர்களை வைத்து வாக்கு வங்கியை உயர்த்த முடியும் என்றும் நம்பிக்கை சொன்னார்.. இது எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு நடந்தது.
விருதுநகரில் சஞ்சய் ராமசாமி
காமராஜர், கக்கன் அரசியல் எல்லாம் இப்போது போய்விட்டது.. ராஜீவ் காந்தி மரணமடைவதற்கு முன்பு, 1991 தேர்தலில், காமராஜரின் பேரன் விருதுநகரில் போட்டியிட சீட் கேட்டார்.. அதற்கு அவரது வேட்பு மனு பரீசிலிக்கப்படுவதாக சொல்லிவிட்டார்கள்.. இதே விருதுநகரில, நடிகை ஸ்ரீதேவியின் தங்கை கணவர் சஞ்சய் ராமசாமி போட்டியிட சீட் கேட்டார். அந்த நேரத்தில் ராஜீவ் காந்தி காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
உடனே ஸ்ரீதேவி காஷ்மீருக்கே கிளம்பி சென்று, தன்னுடைய தங்கை கணவருக்காக ராஜீவ் காந்தியிடம் பேசி சீட் பெற்று தந்தார்.. சஞ்சய் ராமசாமி காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.. ஆனால், ஜெயலலிதா பக்கம் சாய்ந்து, "ஜெ.காங்கிரஸ்" ஆதரவாளர்களில் ஒருவராக மாறிவிட்டார்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications