நான் சீக்கிரமாக செத்துருவேன்.. சாத்தான்குளத்தில் நடந்தது தான் எனக்கும்! கதறி அழுத ஜிபி முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்த ஜிபி முத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கதறி அழுது வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சில நாட்களாக அவர் பற்றி சில சர்ச்சையான செய்திகள் பரவி வருகிறது. அவரின் சொந்த ஊரில் அவருக்கு எதிராக பலர் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தனர். அதை வைத்து இப்போது அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார். போலீஸ் தனக்கு போன் செய்து விசாரணைக்கு வரும்படி கூப்பிட்டுக் கொண்டிருப்பதால் தன்னுடைய குழந்தைகள் வருத்தமடைகிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

ஜிபி முத்து டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் அதில் பிரபலமாக இருந்தார். பிறகு அது பேன் செய்ததும் youtubeயில் லெட்டர் படிப்பு பேமஸ் ஆனார். அதைத் தொடர்ந்து சோசியல் மீடியா பக்கங்களையும் அவர் பயன்படுத்த தொடங்கினார். அவருடைய வீடியோக்கள் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு அவர் பிரபலம் ஆகிவிட்டார். அதன் மூலம் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

GP Muthu bigg boss

சொந்த ஊரில் பிரச்சனை

அதே நேரத்தில் சொந்த ஊரில் அவருக்கு அடுத்தடுத்து பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. அவருடைய ஊரில் ஒரு கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும்போது தெருவில் ஆக்கிரமித்து அந்த கோவில் கட்டப்படுவதாக ஜிபி முத்து புகார் கொடுத்து இருந்தார். அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதிலிருந்து அவர் ஊருக்கும் அவருக்கும் பிரச்சனை நடந்தது.

ஜி பி முத்து மீது புகார்

இது சம்பந்தமாக ஜிபி முத்து பலமுறை கொடுத்திருக்கிறார். இந்த சமயத்தில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியானது. அதில் ஜி பி முத்துவை ஊர்க்காரர்கள் சிலர் அடிப்பதாக அதிலிருந்தது. அந்த வீடியோ வெளியானதும் ஊர்காரர்கள் அதை மறுத்திருக்கிறார்கள். ஜிபி முத்து தன் வீட்டு முன்பு மாந்திரீக பூஜை செய்வதாக சொன்னது எல்லாம் பொய், எங்கள் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான பூஜையை தான் நாங்கள் செய்து கொண்டிருந்தோம் ஆனால் ஜிபி முத்து யூடியூபில் வரும் வருமானத்திற்காக எங்கள் ஊர் காரங்களை அவதூறாக பேசுகிறார் என்று ஜி பி முத்து மீது புகார் கொடுத்து இருந்தனர்.

GP Muthu bigg boss

கண்ணீர் விட்ட ஜிபி முத்து

இந்த நிலையில் இன்று ஜிபி முத்து வெளியிட்ட வீடியோவில், எனக்கு நிம்மதியே இல்ல. மேலும் மேலும் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு இருக்குறாங்க. அதனால போலீஸ் விசாரணைக்கு வாங்கன்னு கூப்பிட்டு இருக்கிறார்கள். அதனால என் பசங்க ரொம்ப பயப்படுறாங்க. என் மகன் விஷ்ணு அழுதுட்டு இருக்கறான். அவன் மனநிலை ரொம்ப ஒரு மாதிரி மாறுது. நான் அவனுக்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே பாதியில் வந்தேன். ஆனால் இப்போது என்னுடைய மகன் படுற கஷ்டத்தை என்னால பார்க்க முடியல.

ஜிபி முத்துவுக்கு சோதனை மேல் சோதனை.. 9 பிரிவில் வழக்குப்பதிவு.. பின்னணி காரணம்!
பேசாம என்னையும் சாத்தான்குளத்தில் அப்பா மகனை அடிச்சு கொன்னாங்களே அதே போல ஜெயில்ல வச்சு கொன்னுருங்க. அப்போ நான் நிம்மதியா போய் சேர்ந்திடுவேன். என்னால முடியல... இதுக்கு மேல என்னால போராட முடியல என்று அவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+