ஏன் நீ சாணிய அள்ள மாட்டியா? கெட்ட வார்த்தையில திட்டிட்டாரு மணிவண்ணன்..பேச பேச நெகிழ்ந்த சுந்தர் சி
சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படங்கள் மதகஜராஜா, அரண்மனை 4, கேங்கர்ஸ் போன்றவையாகும்.. இதில், முதல் இரண்டு படங்களும் நல்ல வசூலை பெற்று தந்திருந்தன.. ஆனால், கேங்கர்ஸ் படம் சறுக்கலை தந்துவிட்டது.. இந்நிலையில், சுந்தர் சி அளித்திருந்த பேட்டி ஒன்று , இணையத்தில் பலரது கவனம் பெற்று வருகிறது.. குறிப்பாக, மறைந்த இயக்குனர் மணிவண்ணன் குறித்த 2 தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர். சி. இவர் ஆரம்ப காலத்தில், மறைந்த மூத்த இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்தவர்.. பிறகு 'முறைமாமன்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்..

படத்தின் வெற்றி
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் உட்பட கிட்டத்தட்ட தமிழில் 30க்கும் மேற்பட்ட படங்களை டைரக்ட் செய்திருக்கிறார்.. அதேபோல கடந்த 2006ல் 'தலை நகரம்' படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகியிருந்தார் சுந்தர் சி..
சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, அவர் சுந்தர் சி. குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.. அந்த பேட்டியில், "டைரக்டர் சுந்தர் சி, 'அமைதிப்படை' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
ஆனால், அப்படத்தின் டைட்டில் கார்டில் அவர் பெயரே இல்லை... காரணம், அமைதிப்படை' படம் 1994ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை மணிவண்ணன் இயக்கினார். இப்படத்தில் உதவி இயக்குநராக சுந்தர் சி. பணியாற்றினார். ஆனால், இதற்கு மறு வருடமே சுந்தர் சி இயக்குனராகிவிட்டார். 'அமைதிப்படை' படத்தில் சுந்தர் சி சிறிது காலமே பணியாற்றியதால், அவரது பெயர் டைட்டிலில் இடம்பெறவில்லை என்று கூறியிருந்தார்.
மணிவண்ணன் சார் கிரேட்
இந்நிலையில், அரண்மனை 4 படத்தின் புரமோஷனுக்காக சுந்தர் சி, பல யூடியூப் சேனல்களில் பேட்டி தந்து வந்தார். அப்போது, மணிவண்ணன் குறித்து நெகிழ்ந்து பேசியதாவது:
"மணிவண்ணன் இயக்கத்தில் உருவான படத்தில் உதவி இயக்குநராக சினிமாவில் நான் களமிறங்கினேன். முதல் நாள் சூட்டிங் நடுரோட்டில் ஷாட் வைக்கப்பட்டிருந்தது.. அங்கே இருந்த சாணியை அள்ள வேண்டும் என்று மணிவண்ணன் சார் சொன்னார்.
ஏன் நீ அள்ள மாட்டியா
உடனே நான் இன்னொரு உதவி இயக்குநரிடம், சாணி அள்ளும் படி சொன்னேன்.. இதைக்கேட்ட மணிவண்ணன், அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, "ஏன் நீ அள்ள மாட்டியா"ன்னு இன்னொரு அசிங்கமான வார்த்தையால் திட்டி அதுக்கா வந்திருக்க? என்று கேட்டார்.
பெரிய குடும்பத்தில் இருந்து, சினிமாவுக்கு வந்துவிட்டு, எப்படி சாணி அள்ளுவது என்று நான் அப்போது நினைத்தேன். ஆனால், மணிவண்னன் சார் அன்னைக்கு திட்டிய திட்டு தான் என்னை இன்று மிகப்பெரிய டைரக்டராக மாற்றியிருக்கிறது.
சினிமாவை பொறுத்தவரை, எந்தவொரு விஷயத்தையும் அவங்க செய்வாங்க, இவங்க செய்வாங்கன்னு நினைக்கக் கூடாது. நாமே எடுத்து செய்ய வேண்டும் என்பதுதான் முதல் பாடமாக கற்றுக் கொண்டேன்..
அடங்கியது தலைக்கனம்
பின்னாளில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்த போது சினிமாவை அவர்கள் எப்படி அணுகுகின்றனர் என்பதையும் கற்றுக் கொண்டேன். அவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரங்களே எளிமையாக இருக்கும் போது நாமெல்லாம் எம்மாத்திரம்? என்று நினைத்தேன்.
என்னுடைய தலைக்கனம் அப்போதுதான் முழுமையாக அடங்கியது என்று பேசியுள்ளார். இந்த பேட்டிதான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications