எதிர்நீச்சல்: கதறி அழுந்த குணசேகரன்.. ஞானம் செய்த செயல்..அதிர்ச்சியான கதிர்.. இனி வரும் திருப்பங்கள்
எதிர்நீச்சல் சீரியலில் ஞானத்தை தான் திட்டியது தவறு என்று குணசேகரன் கதறி அழுகிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் 7ஆம் தேதி 337 வது எபிசோடு ஒளிபரப்பாகியது.
எஸ் டி ஆர் தம்பி, குணசேகரனை ஆள் வைத்து அடித்தபோது ஞானம் குணசேகரனை காப்பாற்றி இருக்கிறார்.
தான் அன்று ஞானத்தை அவமானம் செய்தது தவறு என்று குணசேகரன் கதறி அழ அதை கண்டுகொள்ளாமல் ஞானம் கிளம்பி சென்று விட்டார்.

போலீஸ் ஸ்டேஷனில் வாக்குவாதம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அதிகமான ரசிகர்கள் எதிர்பார்த்த எபிசோடு நேற்று ஒளிபரப்பானது. நேற்றைய எபிசோடு ஆரம்பத்தில் போலீஸ் ஸ்டேஷனில் எஸ் டி ஆர் தம்பி அரசு உங்க அண்ணன் ஒழுங்கா சாப்பிட ஆரம்பித்தது எஸ்டிஆர் வீட்டில் வந்து தான் என்று கூறி, என்ன குணசேகரன் பழைய வரலாறு எல்லாம் உங்க தம்பி கிட்ட நீங்க சொல்லலையா? இல்ல, தெரிஞ்சிக்கிட்டே தெரியாத மாதிரி நடிக்கிறானா? என்று கேட்டுக் கொண்டு, தம்பி கதிர்வேலு உங்க உங்க அண்ணன் உடம்பு வளர்த்தது எஸ்டிஆர் வீட்டு சோத்துல தான் என்று சொல்ல, அதற்கு குணசேகரன் எனக்கு எஸ் டி ஆர் ஓசில சோறு போட்டானா? நான் மாடு மாதிரி உழைச்சிருக்கேன். நான் இன்னைக்கு சொல்றேன். என் உழைப்பில் தான் உங்க அண்ணன் முன்னேறினான் என்று சொல்ல, அதற்கு அரசு நாங்க பரம்பரை பணக்காரங்க இது உலகத்துக்கே தெரியும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு எஸ் பி, அரசு மற்றும் குணசேகரன் இருவரும் வெளியே இருங்க நான் கதிர் மற்றும் அருணிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

குணசேகரனை பற்றி மாமா கூறியது
அடுத்ததாக குணசேகரனின் மாமா ஞானத்திடம் குணசேகரின் ஆரம்ப காலத்தில் தான் டீக்கடையில் வேலைக்கு சேர்த்து விட்டதும், அப்போது வேலையை கற்றுக் கொள்ளாமலே புதிய டீக்கடை வைத்து தரும்படி கேட்டதும், தான் வைத்துக் கொடுத்ததும், அதற்குப் பிறகு தனக்கு உடம்பு சரி இல்லாத நேரத்தில் தான் கடனாக குணசேகரனிடம் பணம் கேட்கும் போது என்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டு, நான் வெளியே வந்த பிறகு மாமன் ஒரு தரித்திரம் பிடித்தவன் இனி அவரோட பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று குணசேகரன் பேசியதை அவருடைய மாமா ஞானத்திடம் கூறிக் கொண்டிருக்கிறார்.

ஆதிரையின் மன மாற்றம்
அடுத்ததாக மருத்துவமனையில் ஆதிரைக்கு ஜூஸ் கொடுத்த நந்தினி, அருணை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாம் ஜாம் என்று வாழ்றதை விட்டுட்டு என்ன ஆதிரை இப்படி பண்ணிட்டா என்று கேட்க? பிறகு ஆதிரை தற்கொலை முயற்சி செய்ததால் நந்தினிக்கு மயக்கம் வந்தது பற்றி ஈஸ்வரி கூற, உங்களை எல்லாம் நான் புரிந்து கொள்ளாமல் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன் என்று ஆதிரை நந்தினி மற்றும் ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்கிறார்.

அடி வாங்கிய குணசேகரன்
அடுத்ததாக எஸ்பி ஆபிசில் வெளியே நின்று கொண்டு எஸ்.டி.ஆர் தம்பி அரசு ஃபோனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பின்னாடி வந்த குணசேகரன், பயந்துகிட்டு ஆட்களை எல்லாம் கூட்டிட்டு வந்திருக்க போல. உங்க அண்ணன் எங்க உங்க அண்ணியோட முந்தானையை பிடித்துக்கொண்டு ஒளிஞ்சிகிட்டு இருக்கானா? என்று பேச என்னுடைய அண்ணனை பத்தி நீ பேசாத என்று அரசு கோவப்பட பதிலுக்கு குணசேகரனும் கோபமாக திட்ட, கூட இருந்த அரசின் அடியாள்கள் குணசேகரின் சட்டையை பிடித்து அடிக்கின்றனர். அதே நேரத்தில் அந்தப் பக்கமாக ஞானம் நடந்து வந்து கொண்டிருக்கும்போது, இதை பார்த்ததும் அடியாள்களை அடித்து குணசேகரனை காப்பாற்றுகிறார். அப்போது அங்கே வரும் எஸ்பி இவர்களை சத்தம் போட்டு வீட்டுக்கு போகும்படி திட்டி விட்டு செல்கிறார்.

அருண் சபதம்
குணசேகரனிடம் அருண் நான் இதுவரைக்கும் அமைதியாக இருந்தேன். அண்ணன் பேச்சை கேட்டுட்டு தான் அமைதியாக இருந்தேன். ஆனால் இனி நான் இப்ப சொல்றேன் உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ உங்க தங்கச்சி ஆதிரையை நான் தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று சவால் விட, அரசும் இனி உன்ன மாதிரி நானும் சாக்கடையில் இறங்கி அடிக்கிறேன். உன் தங்கச்சிக்கு என் தம்பி கூட பிரம்மாண்டமா கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று சவால் விடுகிறார். பிறகு அவர்கள் கிளம்பி செல்ல குணசேகரன் ஞானத்தை கூப்பிட்டு கதறி அழுகிறார்.

கதறி அழும் குணசேகரன்
குணசேகரன் ஞானம் ஞானம் என்று அழுது கொண்டிருக்க ஞானம் அதை சற்றும் கவனிக்காத மாதிரி நடந்து போய்க்கொண்டே இருக்கிறார். குணசேகரன் கதிரிடம் என்ன சட்டையை பிடித்து அந்த அரசு ஆளுங்க அடிச்சிட்டாங்க, அப்போ எங்கிருந்து வந்தான்னு தெரியல என் தம்பி ஞானம் தான் என்னை காப்பாற்றினான் இப்போ ஒரு வார்த்தை கூட பேசாம போயிட்டு இருக்கான். நான் அன்னைக்கு தேவையில்லாம அவன அசிங்கப்படுத்திட்டேன். நான் தப்பு செஞ்சுட்டேன் ஆனா இப்ப அவன் என்கிட்ட பேசாம போறானே என்று கதறி அழுது கொண்டிருக்க, ஞானம் நடந்து கொண்டே இருக்கிறார். இத்துடன் நேற்று எபிசோடு முடிவடைந்தது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications