மணிமேகலையை பற்றி கணவர் வெளியிட்ட பதிவு.. மீண்டும் பழைய இடத்திற்கு வந்தாச்சு.. குவியும் வாழ்த்துக்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு மணிமேகலையை குறித்து அவருடைய கணவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நான்காவது சீசனில் இருந்து மணிமேகலை சில தினங்களுக்கு முன்பு வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில் முதல் முறையாக அவருடைய கணவர் தன்னுடைய மனைவியை குறித்து மகளிர் தினத்தில் புகைப்படங்களை வெளியிட்டு பாராட்டி இருக்கிறார்.
கிராமத்திற்கு சென்றிருந்த மணிமேகலை மீண்டும் சென்னைக்கு வந்திருக்கும் புகைப்படத்தை ரசிகர்களுக்கு பகிர்ந்து இருக்கிறார்.

திடீர் வெளியேற்றம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை திடீரென இந்த நிகழ்ச்சியை விட்டு சில வாரங்களுக்கு முன்பு தான் வெளியேறி விட்டதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது குறித்து ரசிகர்கள் எதற்காக இந்த திடீர் முடிவு என்று கேள்வி கேட்டு வரும் நிலையில் இப்ப வரைக்கும் அதற்கான பதிலை மணிமேகலை கூறவில்லை. ஆனாலும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் தொடர்ந்து மணிமேகலைக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

அதிகமான வருமானம்
எப்போதும் சூட்டிங் இல்லாத நாட்களில் மணிமேகலை தன்னுடைய கணவரோடு சேர்ந்து கிராமத்திற்கு சென்று அங்கிருக்கும் நபர்களோடு ஜாலியாக விடுமுறையை கொண்டாடி, ஊர் சுற்றி அதை வீடியோவாக வெளியிட்டு வருவார். மணிமேகலைக்கு விஜய் டிவி வருமானத்தை விட youtube மூலமாக தான் வருமானம் அதிகமாக வருகிறது என்று சமீபத்தில் மணிமேகலையே ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அந்த அளவிற்கு youtube மூலம் அவருக்கு அதிகமான ரசிகர்கள் அவரை பின்தொடர்கின்றனர். இவர் வெளியிடும் வீடியோக்கள் அதிகமான ரசிகர்களையும் கவர்ந்து இருக்கிறது.

புதிய வீடு
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேற போகிறேன் என்று பதிவை வெளியிட்டு விட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றிருந்த மணிமேகலை அங்கே சில தினங்கள் தங்கி இருந்து அவர் செய்யும் அட்ரா சிட்டிகளை தினமும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், youtube பக்கத்திலும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் மணிமேகலை தன்னுடைய சொந்த உழைப்பில் வாங்கிய இடத்தில் புதியதாக ஒரு வீடு கட்ட பணியை தொடங்கி இருக்கிறார். அது குறித்து மகிழ்ச்சியோடு தன்னுடைய ரசிகர்களிடமும் பகிர்ந்திருந்தார்.

மீண்டும் வந்தாச்சு
இந்த நிலையில் மணிமேகலையின் கணவர் மகளிர் தினத்தில் தன்னுடைய மனைவி குறித்து பெருமையாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கிராமத்தில் இருந்து தான் சொந்த ஊருக்கு திரும்பி விட்டேன் என்கிற புகைப்படத்தை மணிமேகலை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதைக் குறித்து ரசிகர்கள் இனி அடுத்து என்ன பிளான் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications