மாரிமுத்து இந்தியன் 2 பற்றி அப்பவே அப்படி சொன்னாரு.. எமோஷனலா பேசிய எதிர்நீச்சல் நந்தினி, கதிர்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பல வருடங்களுக்கு பிறகு இந்தியன் 2 திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்து இருக்கிறார். ஆனால் அந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அவர் கடந்த வருடத்தில் மாரடைப்பால் காலம் ஆகி இருந்தார். இந்த நிலையில் அவரோடு எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நடிகை ஹரிப்பிரியா மற்றும் விபு இந்த திரைப்படம் பார்க்க வந்திருக்கின்றனர். அப்போது மாரிமுத்து குறித்து பேட்டியில் பேசி இருக்கின்றனர்.
நிரந்தரம் இல்லாத உலகத்தில்தான் நாம் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று நிச்சயமற்ற நிலையில் தான் வாழ்க்கை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் சில நினைவுகள் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த மாதிரி தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மாரிமுத்துவின் மரணமும் பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியது.

இப்ப வரைக்கும் அவர் பற்றி பேசும்போது பலர் எமோஷனல் ஆகி வருகின்றனர். மாரிமுத்து பல திரைப்படங்களில் நடித்து, இயக்கி இருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் எதிர்நீச்சல் சிரியலின் மூலமாக கிடைத்தது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்தார் என்று சொல்லலாம். இந்த சீரியல் மூலமாக தனக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் தன்னுடைய வாழ்க்கை எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்றும் பல பேட்டிகளில் சந்தோஷமாக மாரிமுத்து பேசியிருப்பார்.
ஆரம்பத்தில் நான் ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறேன். ஆனால் எதிர்நீச்சல் சீரியலுக்குப் பிறகு எனக்கு நடிகர் ரஜினி, கமலோடு எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். ரஜினியுடன் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் வெளிவந்த போது அவரோடு எதிர்நீச்சல் பிரபலங்கள் பலரும் திரைப்படம் பார்க்க சென்றிருந்தனர்.
அந்த நினைவுகள் குறித்தும் மாரிமுத்து பேட்டிகளில் பேசியிருந்தார். ஆனால் இப்போது அவர் கமலுடன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. அவர் இல்லை என்றாலும் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக அவரோடு எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்த ஹரிப்பிரியாவும், கதிராக நடித்த விபுவும் தியேட்டருக்கு வந்திருக்கின்றனர்.
அப்போது அங்கு அவர்கள் கொடுத்த பேட்டியில் நாங்கள் கமல் சார் நடித்த இந்தியன் 2 திரைப்படத்தை பார்ப்பதற்காக சந்தோஷமாக வந்திருக்கிறோம். இந்த திரைப்படத்தில் மாரிமுத்து சாரும் நடித்திருக்கிறார். அவர் சூட்டிங் ஸ்பாட்டில் இந்த படத்தை பற்றி அதிகமாக பேசிக்கொண்டே இருப்பார். கமலோடு நடிப்பது தனக்கு பெருமையாகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றெல்லாம் அவர் சொல்லிக் கொண்டிருப்பார்.
இப்போது அவர் படம் வெளியாகும் போது இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. ஜெய்லர் திரைப்படம் வெளியாகும் போது நாங்கள் எல்லோரும் அவரோடுதான் படம் பார்த்தோம். இந்த படத்தை பார்க்கும்போது அவர் எங்களோடு இருப்பார் என்று நம்புகிறோம் என அந்த பேட்டியில் ஹரிப்பிரியா மற்றும் விபு பேசியிருக்கின்றனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications