மேக்கப் ஹெவியா இருக்கே.. திருமண கோலத்தில் வெட்கத்தை சிந்திய ஹரிப்ரியா!
சென்னை: பட்டுப்புடவை சரசரக்க தலை நிறைய மல்லிகை பூவோடு உடம்பெல்லாம் தங்கநகை மினுமினுக்க மணப்பெண் கோலத்தில் ஜொலிக்கிறார் ஹரிப்ரியா.
இவரை எத்தனை முறை பார்த்தாலும், எத்தனை வருடமாக பார்த்துக் கொண்டே இருந்தாலும் பார்க்க பார்க்க சலிக்கவில்லை. அம்புட்டு அழகாக இருக்கிறார் ஹரிப்ரியா.
இவர் பல சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். தற்போது ஒடிடி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

முதல் சீரியல்
ஹரிப்ரியா கனா காணும் காலங்கள் மூலம் சீரியலில் அடியெடுத்து வைத்தவர் .இதைத்தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள் ,கண்மணி என்ற சீரியல்களின் மூலமாக சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து பல சீரியல்களில் நடித்துள்ளார். ஒரு சிலருக்குத்தான் பாசிட்டிவ் கேரக்டர் மற்றும் நெகட்டிவ் கேரக்டர் இரண்டுமே பொருந்தும். இவரும் அப்படித்தான்.

ரசிக்க வைத்தவர்
கனா காணும் காலங்கள் சீரியலில் கல்லூரி பெண்ணாக வந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க வைத்த இவர் தற்போதும் அதே அழகுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவரை முதல் சீரியல் பார்த்த ரசிகர்கள் அதற்குப் பிறகு லட்சுமி வந்தாச்சு கண்மணி சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் பார்த்ததும் முதலில் ஷாக் ஆகி விட்டனர் .இவரா அவர் என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய முட்டை கண்ணாலே வில்லத்தனத்தை காட்டி அனைவரையும் வெறுப்படைய வைத்து எரிச்சலையும் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

நெகட்டிவ் பாசிட்டிவ்
தொடர்ந்து ஹரிப்ரியா நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருந்ததால் தன்னுடைய மனநிலை ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என கூறியிருந்தார். அந்த அளவு இவருக்கு கேரக்டருக்குள் இறங்கி நடிப்பதுதான் இவருடைய ஸ்பெஷல். சீரியல் நடிகையாக மட்டுமல்லாமல் மாடலாகவும் இவர் இருந்து வருகிறார் .அதனால் அடிக்கடி போட்டோஷூட் எடுத்து குவித்து வருகிறார்.

விளம்பர மாடல்
பொருட்களுக்கு விளம்பரப்படுத்துவது, தற்போது சினிமா நடிகர்களை விடவும் சீரியல் நடிகைகள் தான் பலருடைய மனதினையும் நன்றாக தெரிந்து இவர்கள் வைத்துக்கொள்வதால் அடிக்கடி சீரியல் நடிகைகள் போட்டோஷூட்டில் விருப்பம் காட்டி வருகின்றனர் .அதுவும் இதுவரைக்கும் இல்லாத வகையில் தற்போது புடவையில் இவர் எடுத்த மாடல் போட்டோஷூட்கள் செம வைரல் .

உடற்பயிற்சியில் ஆர்வம்
இவர் ரசிகர்களின் கண்களுக்கு இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பார்த்து பார்த்து உடற்பயிற்சிகளை செய்து தன்னுடைய ரசிகர்களின் கண்களுக்கு என்றும் தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு ஏற்கனவே சீரியல் நடிகர் ஒருவருடன் திருமணம் முடிந்து இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் .

திடீர் மணக்கோலம்
தற்போது அவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. இவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் இவர் தான் தனது பையனை பார்த்துக் கொண்டிருக்கிறார் .இந்த நிலையில் திடீரென்று இவரை மணக்கோலத்தில் கண்டதும் அவருடைய ரசிகர்கள் ஷாக்காகி இருக்கின்றனர் .திடீரென திருமணமா என்று பலர் கேள்வி கேட்டு வருகின்றனர். சிலரோ திருமணத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் .இவர் மாடலாக இருப்பதை தெரிந்து கொள்ளாமல் இவரை பலர் வர்ணித்தும் வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications