கடலில் 48 நாள் மரண போராட்டம்! சிறுநீரை குடித்து உயிர் பிழைப்பு- நடிகர் ஹரிஷ் கல்யாண் சொன்ன ஷாக் தகவல்!
சென்னை: தமிழ் சினிமாவில் தன் கியூட்டான நடிப்பால் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த ஒரு தகவல், ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. தன்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பின் போது, கடலில் நடந்த ஒரு நிஜ மரணப் போராட்டத்தைக் குறித்து அவர் பகிர்ந்திருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண் சினிமா பயணம்
நடிகர் ஹரிஷ் கல்யாண், கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான சர்ச்சைக்குரிய திரைப்படமான 'சிந்து சமவெளி' மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகக் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து 'அரிது அரிது' போன்ற படங்களில் நடித்திருந்தாலும், எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை.
அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்திருந்த ஹரிஷ் கல்யாணுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கராஜா தயாரித்து இசையமைத்த 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் ஒரு பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ரைஸா நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததோடு, ஹரிஷ் கல்யாணின் சினிமா கேரியருக்கு ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.
இதையடுத்து, 'தாராள பிரபு', 'பார்க்கிங்', 'லப்பர் பந்து' போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஹரிஷ் கல்யாண், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
டீசல் படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சந்திப்பு
ஹரிஷ் கல்யாண் தற்போது இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் 'டீசல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதுல்யா ரவி, வினய் (வில்லனாகக் காவல்துறை அதிகாரி வேடத்தில்), சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்ட 'டீசல்' திரைப்படம், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகர் ஹரிஷ் கல்யாண் 'டீசல்' படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வைப் பகிர்ந்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் பேசியதாவது:
"டீசல் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பு, நாங்கள் இரண்டு, மூன்று நாட்கள் கடற்கரைக்குச் சென்றோம். கடலுக்குள் கூடச் சென்றோம். அப்போது 70 வயது மதிக்கத்தக்க மீனவர் ஒருவர் என்னிடம் ஒரு அதிர்ச்சி தகவலை சொன்னார். புயலால் கடலில் 48 நாட்கள் சிக்கியதாகவும், தனது சிறுநீரையே குடித்து உயிர் பிழைத்ததாகவும் அவர் கூறினார்".
சினிமாவில் நாம் பார்த்து ரசிக்கும் இதுபோன்ற சாகச காட்சிகள், நிஜ வாழ்க்கையில் எப்படி ஒரு மரணப் போராட்டமாக இருக்கும் என்பதை அந்த மீனவரின் அனுபவத்தின் மூலம் ஹரிஷ் கல்யாண் உணர்ந்துள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக மீனவர்கள் ஒவ்வொரு நாளும் கடலுக்குள் சென்று திரும்பி வருவது பெரும் போராட்டம் நிறைந்ததாகத்தான் இருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் சந்திக்கும் துயரங்கள் கேட்போரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. அதுபோலத்தான் இப்போது ஒரு மீனவர் சொன்ன தகவல் பலரையும் வருத்தமடைய செய்திருக்கிறது.
நடிகர் ஹரிஷ் கல்யாணின் இந்த புதிய தகவல், அவருடைய 'டீசல்' படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications