Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொட்ட உயரத்தை உதறிய அப்பா! நெப்போலியனின் பல்லாயிரம் கோடி சொத்து.. தனுஷ்னு சொன்னதுமே கண்கலங்கி! சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருதாய் போலவே, கடுமையான உழைப்பு, அருமையான பாசத்தை தந்தையும் காட்டுகிறார்கள்.. அதுபோலத்தான் நெப்போலியனும். தனுஷை பற்றி எப்போது பேசினாலும் நெப்போலியன் கண்கள் கலங்கும்" தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.. அத்துடன், நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு இரண்டாம் முறையாக நடத்தி வைத்த திருமணம் குறித்தும் பேட்டி ஒன்றில் விரிவாகவே கூறியிருக்கிறார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு, பேட்டி தந்துள்ள பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "நெப்போலியனின் மகன் தனுஷ், மயோபதி என்ற தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இதை குணப்படுத்துவதற்காக அரும்பாடு பட்டார் நெப்போலியன்..

Television Napoleon Dhanush

நிறைய மருத்துவர்களை தேடி சென்றார், மகனை எப்படியாவது சரிசெய்துவிட மாட்டோமா? என்று தவித்தார்..

மகனுக்கு சிகிச்சை

திருநெல்வேலியில் இதனை குணப்படுத்த டாக்டர் உள்ளதாக கேள்விப்பட்டு, அங்கு மகனை அழைத்து சென்றார். இதற்காக அங்கேயே தங்கியிருந்து 2 மாதம் சிகிச்சையும் மகனுக்கு கிடைக்க செய்தார்..அந்த சிகிச்சையினால், கணிசமான சதவீதம் உடல்நிலையில் மகனுக்கு முன்னேற்றமும் கிடைத்தது..

இதற்காகவே அந்த டாக்டருக்கு, 2 மயோபதி மருத்துவமனையை நெப்போலியன் கட்டி தந்துள்ளார்.. தன் மகனை போலவே இருக்கும் குழந்தைகள், இங்கு சென்று சிகிச்சையை பெற்று கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இந்த சிகிச்சை மிகவும் விலை உயர்ந்தது என்பதால், இலவசமாகவே அந்த குழந்தைகளுக்கு சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த 2 மருத்துவமனைகளை நெப்போலியன் கட்டி தந்துள்ளார்.

மகனுக்காக முடிவெடுத்த தந்தை

ஒருசூழ்நிலையில், தம்பதியினருக்கு மனமுதிர்ச்சி ஒன்று வரும்.. இனிதான் சூழ்நிலை, இதற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தனர்..

சினிமாவா? அரசியலா? சாப்ட்வேர் பிசினஸா? என்று யோசித்து, மகனுக்காக இனி வாழ்க்கை வாழ்வது என்று முடிவெடுத்தார்.. புகழ்பெற்ற சினிமா நட்சத்திரமாக இருக்கும்போது, மத்திய அமைச்சராக இருக்கும்போது, பிரபலமான அரசியல்வாதியாக இருக்கும்போது, பல கோடிகளை ஈட்டும் சாப்ட்வேர் கம்பெனிகளை நடத்திவரும்போது, அவரது இப்படியொரு முடிவானது மிகவும் கனமானது..

ஏகப்பட்ட சொத்துக்கள்

எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு, வீடுகள், சொத்துக்களையும் விற்றுவிட்டு அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.. அமெரிக்காவிலும் சிட்டியில் இல்லாமல், நகர்ப்புறத்திலிருந்து பல மைல் தூரம் உள்ள கிராமம் போன்ற இடத்தில் பண்ணை வீட்டில் தங்கியிருக்கிறார்.. தனுஷூக்காக அந்த வீட்டை டிசைன் செய்துள்ளார்..

தனுஷ் ஒவ்வொரு அறைக்கும் செல்வதற்கும், படிக்கட்டில் செல்வதற்கும், பாத்ரூமுக்குள் செல்வதற்கும் என தனித்தனி வசதிகள் அந்த வீட்டில் செய்யப்பட்டுள்ளன.. வீட்டிற்கு பின்பக்கத்திலேயே விவசாயம் செய்து வருகிறார்.. நெப்போலியன் 30 வருடங்களுக்கு முன்பு கடுமையாக உழைத்து சம்பாதித்த சொத்துக்களை விற்றுவிட்டுதான் அமெரிக்காவில் செட்டிலாகி உள்ளார்.

மகனுக்கு திருமணம்

மிகப்பெரிய பிசினஸ்மேனாக இருந்துவிட்டு, நடிகராக இருந்துவிட்டு, இப்படி விவசாயியாக மாறுவதற்கு தனி மனப்பக்குவம் வேண்டும்.. ஆனால் அன்றுமுதலே எத்தனையோ விமர்சனங்களை கடந்துவந்துவிட்ட நெப்போலியன் இன்று நன்றாக இருக்கிறார்..

தனுஷூக்கு திருமணம் செய்து வைத்து பார்க்க வேண்டும் என்று ஒரு தகப்பனாக ஆசைப்பட்டார்.. ஆயிரம் பொய் சொல்லி திருமணம் நடத்தலாம் என்ற பழமொழியே இருந்தாலும், எதையும் மறைக்காமல் ஒளிவுமறைவின்றி யதார்த்தத்தை சொல்லி பெண் தேடினார்..

அப்போதுதான் திருநெல்வேலியை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண், அனைத்தையும் புரிந்து, தெரிந்துகொண்டு, நான் தனுஷை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்..
திருமணம் நடந்தபோது வந்த பல விமர்சனங்கள் வந்தன.. இவையெல்லாம் ஒரு தகப்பனாக நெப்போலியனை அதிகம் காயப்படுத்தின.

மாதக்கணக்கில் டிராவல்

மகனின் ஆசைப்படியே ஜப்பானில் ஆடம்பரமாக திருமணத்தை நடத்தினார் நெப்போலியன்...பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் தமிழகத்திலிருந்து ஜப்பானுக்கு சென்றார்கள்.. அதேபோல அமெரிக்காவிலிருந்து, ஜப்பான் செல்வதற்கு தனுஷால் ஃபிளைட்டில் செல்ல முடியாது என்பதால், , கப்பலை ஏற்பாடு செய்தார் நெப்போலியன்.. மாதக்கணக்கில் டிராவல் செய்த நெப்போலியன் குடும்பத்தினர், இந்த திருமணத்தை சிறப்பாக நடத்தினார்கள்..

பரிதாபங்கள் கோபி, சுதாகரை பார்க்க வேண்டும் என்று தனுஷ் ஆசைப்பட்டதால், அவர்களை அமெரிக்காவிலுள்ள தங்கள் வீட்டிற்கு வரவழைத்து, பெரிய விருந்தும் தரப்பட்டுள்ளது.. அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை சோஷியல் மீடியாவிலும நெப்போலியன் ஷேர் செய்திருந்தார்..

மீண்டும் கிளம்பிய சர்ச்சை

அந்த போட்டோவில் அக்‌ஷயா இல்லாததை பார்த்த நெட்டிசன்கள், "அக்‌ஷயா எங்கே?" என்று கேட்டிருந்தனர்.. அந்த நேரத்தில் தன்னுடைய பெற்றோரை பார்ப்பதற்காக அக்‌ஷயா தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார்.. விமான பயணம் தனுஷால் செய்ய முடியாது என்பதால், அவர் இங்கு வரவில்லை.. பிறகு மறுபடியும் அக்‌ஷயா அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.. இப்போது அவர்கள் அனைவருமே சந்தோஷமாக இருக்கிறார்கள்.

அமெரிக்கா பிரஜையாக அக்‌ஷயா மாற வேண்டுமானால், அமெரிக்க முறைப்படி திருமணத்தை செய்ய வேண்டும்.

இரண்டாம் முறை திருமணம்

அதனால்தான், கடந்த வாரம் மீண்டும் இரண்டாவது முறையாக திருமணம் நடத்தப்பட்டுள்ளது.. தனுஷ் அக்‌ஷயாவுக்க தாலி கட்டி நடந்த இந்த போட்டோ, வீடியோக்களையும் நெப்போலியன் போஸ்ட் செய்திருந்தார்..

ஒருதாய் போலவே, கடுமையான உழைப்பு, அருமையான பாசத்தை தந்தையும் காட்டுகிறார்கள்.. அதுபோலத்தான் நெப்போலியனும். தனுஷை பற்றி எப்போது பேசினாலும் நெப்போலியன் கண்கள் கலங்கும்..

எல்லாவிதமான உயரங்களையும் விட்டுவிட்டு, ஒரு தகப்பனாக இன்றுவரை தனுஷூக்காக மட்டுமே வாழ்ந்து வருகிறார் நெப்போலியன். அவரது அழகான குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது..இந்த சந்தோஷம் அவர்களுக்கு எப்போதுமே கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+