Biggboss Season 8: பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டாரா ரவீந்தர் சந்திரசேகரன்? அதுதான் காரணமா?
சென்னை: பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியிலிருந்து நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகரன் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் மன வேதனை அடைந்துள்ளார்கள். இனி இந்த பிக்பாஸை எப்படி பார்ப்பது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி 8ஆவது சீசன் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது இந்த வாரம் விஜய் சேதுபதி வந்து பலரை வெளுத்து வாங்கியுள்ளார்.

இங்கு பெண்கள் அணியும் ஆண்கள் அணியும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பெண்கள் அணியில் இருந்து அபியும், ஆண்கள் அணியிலிருந்து முத்துக்குமரனும் வீட்டை மாற்றி இருக்கிறார்கள்.
விஜே விஷால், சீரியல் நடிகை பவித்ராவை வாடி, போடி என அழைப்பதை அவர் கண்டித்த போதிலும் அவர் அப்படியே கூப்பிட்டதால் விஷாலிடம் சண்டையிடுகிறார் பவித்ரா. இதை சமாதானம் செய்ய வந்த ரஞ்சித்துக்கும், ரவீந்தருக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. அந்த சண்டையில் அருணை, ரஞ்சித் தள்ளிவிடுகிறார்.
இதில் அவருக்கு கையில் அடிபட்டு விடுகிறது. அப்போது திடீரென ரஞ்சித்தும் ரவீந்தரும் கட்டி பிடித்துக் கொண்டு தங்களுக்கான சண்டை பிராங்க் என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று விஜய் சேதுபதியிடம் ரவீந்தர் குறித்து ஆர்ஜே ஆனந்தி பேசிய பேச்சை கேட்டு ரவீந்தர் கண்ணீர் வடிக்கிறார்.
இந்த நிலையில் இந்த வாரம் ரவீந்தர் எலிமினேட் ஆகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டியில் ரவீந்தர் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளர் என்றும் அவர் கடைசி வரை பிக்பாஸ் சீசனில் நிலைத்து கோப்பையை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ரவீந்தரும் தான் எலிமினேட் ஆக போவதாக அவரே கூறியிருந்தார். இதுகுறித்து ரவீந்தரிடம் விஜய் சேதுபதி கேட்ட போது , நான் செய்த சேட்டை அப்படி என்றார், மேலும் ரவீந்தருக்கு உடல் பருமன் பெரிய தலைவலியாக இருப்பதால் அவர் எலிமினேட் செய்ய சொல்லியிருப்பார் என்கிறார்கள். மேலும் நிகழ்ச்சிக்கு வரும் போதேல சில சலுகைகளை ரவீந்தர் கேட்டு வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இனி கண்டென்டுக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் விஜய் டிவி ப்ராடெக்ட்களிடம் இருந்து கண்டென்ட் கிடைக்காதே என யூடியூப் சேனல்காரர்களும் கவலைத் தெரிவித்து வருகிறார்கள்.
முதலில் சாச்சனா வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் மீண்டும் உள்ளே அழைத்துக் கொள்ளப்பட்டார். ஒரு எபிசோடிற்கு ரூ 50 ஆயிரம் ஊதியம் பெறும் ரவீந்தர் இந்த வாரம் எவிக்ட் ஆகியுள்ளார் என்ற உறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications