ஆஹா தென்றல் சீரியல் நடிகரின் மகனா இவர்? தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டாரே!.. ஷேர் ஆகும் போட்டோஸ்
சென்னை: ஆஹா சீரியல் நடிகரும் விஜேவுமான தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? ஆச்சரியமாக இருக்கிறதே!
தீபக் தினகர் என்பவர் இந்திய திரைப்பட மற்றும் முன்னணி தமிழ் தொலைக்காட்சி நடிகர், டப்பிங் கலைஞர், ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் நபர் (மாடலிங்), தொலைகாட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.
இவர் சன் தொலைகாட்சியில் முக்கிய நேரத்தில் ஒளிபரப்பப்படும் தொலைகாட்சித் தொடர்பான தென்றலில் இவர் நடிக்கும் தமிழ் என்ற பாத்திரத்திற்காக இவர் அறியப்படுகிறார். மேலும் இவர் ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொலைகாட்சி தொகுப்பாளராக இருக்கிறார்.

தீபக்
தீபக் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் முடித்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியில் முடித்துள்ளார். இவர் 2008ஆம் ஆண்டு சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் விஜய், சீரியல் நடிகர் ஸ்ரீகுமார், சஞ்சீவ் ஆகியோர் நண்பர்களாவார்.

கல்லூரி படிப்பு
தீபக் கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் செல்லும் போது தென்றல் சீரியல் மூலம் முதன்மை கதாபாத்திரத்தில் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். ஜோடி நம்பர் ஒன்னில் பங்கேற்ற இவர் அடுத்ததாக ஸ்டார் விஜய்யில் தொகுப்பாளராக அறிமுகமானார். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். திருமதி செல்வம் தொடரில் செரி எனும் கேரக்டரில் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் பணக்கார வீட்டு பையனாக நடித்துள்ளார்.

ஜென்மம் எக்ஸ்
இவர் ஜென்மம் எக்ஸ் எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அடுத்ததாக இனிய இல்லம், பட்டர்பிளைஸ், கீதாஞ்சலி, மனைவி, செல்வி, மலர்கள், வைரநெஞ்சம், அரசி, ரோஜாக் கூட்டம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். 2கே கிட்ஸ்களின் ஃபேமஸ் நாடகமான கனா காணும் காலங்கள் தொடரிலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

சூப்பர் மாம் சீசன் 1
தற்போது இவர் விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் எனும் சீரியல் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் மாம் சீசன் 1, சூப்பர் மாம் சீசன் 2 ஆகிய நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு அக்னித் என்ற மகன் உள்ளார். தீபக் தன் மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியானது.

தோளுக்கு மேல் வளர்ந்த மகன்
அதில் தீபக்கின் தோளுக்கு மேல் அக்னித் வளர்ந்திருக்கிறார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியான புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் என்னாது தீபக்கிற்கு இத்தனை பெரிய மகனா என கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் வாழ்த்துகள் என கூறி வருகிறார்கள். அது போல் அக்னித் கடந்த இரு திநங்களுக்கு முன்பு நடந்த நீச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றாராம். இதுகுறித்தும் புகைப்படம் வெளியிட்டுள்ள தீபக் தனது மகனுக்கும் அவர் சார்ந்த அணிக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications