காசுக்காக என்ன வேணாலும் பண்ணுவியானு கேட்டாரு! பிக் பாஸ் ஆடிஷனில் நடந்த சம்பவம்! போட்டியாளர் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் காமன் மேன் என்ற நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. தனியார் தொலைக்காட்சியில் தொடங்கி இருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடந்த டாஸ்க் தான் இப்போ விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் போட்டியாளராக கலந்து கொண்டு ரிஜெக்டான மோனிகா பேசிய பேட்டி இணையத்தில் வைரலகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்பு பிக்பாஸ் காமன் மேன் என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி அதில் கலந்து கொண்டு வெற்றி பெறும் போட்டியாளர் நேரடியாக பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலர் போட்டி போட்டு ப்ரொபைல் அனுப்பி இருந்தனர்.

பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சி

அதில் பலரிடம் நடந்த இன்டர்வியூவில் 50 பேரை செலக்ட் செய்து முதல் ரவுண்டில் டாஸ்க் வைத்திருக்கின்றனர். அந்த டாஸ்க் தான் இப்போ இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. அது ஒரு பக்கம் என்றாலும் இந்த நிகழ்ச்சியில் இருந்து ரிஜெக்ட்டான ஒரு சிலர் சர்ச்சைக்குரிய விஷயங்களையும் பேசி வருகின்றனர். அந்த வகையில் மோனிகா என்ற போட்டியாளர் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Bigg Boss vijay tv

போட்டியாளரின் குமுறல்

மோனிகாவின் காட்சிகள் ப்ரோமோவிலே இடம் பிடித்திருந்தது. அதிலும் தண்ணீர் குடத்தை வைத்துக்கொண்டு மாயா உடன் குழாயடி சண்டை போடுவது போல காட்சிகள் இருந்தது. அதற்கு பின்னால் என்ன நடந்தது என்று மோனிகா பேசும் போது, நான் அந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் கலந்து கொண்டேன். உள்ளே பல போட்டியாளர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாருமே ஓரளவிற்கு இன்புளுசராகவும், யூடியூபர்களாவும் இருந்தார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல பிரபலம் இருந்தது. ஆனால் என்னுடைய அக்கவுண்ட்டே பிரைவேட் அக்கவுண்ட் தான்.

ராஜு மீது குற்றச்சாட்டு

200 பேரு தான் என்னை பாலோ பண்ணுறாங்க. இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது பெரிய விஷயம் ஒரு பிரபலமாக வேண்டும். அல்லது நம்முடைய திறமை பலருக்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் எல்லோரும் கலந்து கொள்கிறார்கள். அதேபோல நானும் கலந்து கொண்டேன். நான் ஒரு பிரைவேட் ஆஃபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக லீவ் போட்டு தான் போனேன். ஆனால் 3 நாளில் என்னை அனுப்பி விட்டார்கள். அதன் நிகழ்ச்சியில் எல்லோரும் உங்களை பற்றி சொல்லுங்கள் என்றார்கள். நான் என்னுடைய சின்ன வயதிலிருந்து கஷ்டப்பட்டது எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது இடையில் ராஜு பேசியது எனக்கு ரொம்ப வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர் இதெல்லாம் ஒரு விஷயமா என்பதுபோல சொல்லிவிட்டார்.

செருப்பை துடைங்க.. இல்லன்னா வெளியே போங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்! கழுவி ஊற்றும் ரசிகர்கள்
நான் 24 வருஷங்களாக பட்ட கஷ்டங்கள் எல்லாவற்றையும் நொடிப்பொழுதில் இது எல்லாருடைய வாழ்க்கையிலும் இருப்பது தான் என்பது போல அவர் பேசியது எனக்கு ஒரு சங்கடத்தை கொடுத்தது. அதற்கு பிறகு நீங்க என்ன சாதித்து இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போ உள்ளே அத்தனை சோசியல் மீடியா பிரபலங்கள் இருக்கும் இடத்தில் நான் அவர்களை எல்லாம் தாண்டி இந்த இடத்திற்கு வந்திருப்பதே சாதனை என்பது போல சொன்னேன். அதற்கு அவர் காசு கொடுத்தா என்ன வேணாலும் பண்ணுவியா என்பதுபோல ஒரு வார்த்தையை விட்டுட்டாரு. அது எனக்கு ரொம்ப கஷ்டமா ஆகிடுச்சு.

Bigg Boss vijay tv

பிக் பாஸ் காமன்மேன் விமர்சனம்

அதைக் கேட்டு என்னால ஒரு நிமிஷம் என்ன பேசுறதுன்னு தெரியல. அவர் என்ன அர்த்தத்துல இதை சொன்னாருன்னு தெரியல. ஆனா அதை கேட்கும் போது தவறான ஒரு அர்த்தத்தில் தான் இருந்தது. சில இடங்களில் மாயாவும் ராஜூவும் பேசியது நோஸ்கட் பண்ற மாதிரியும், போட்டியாளர்களை அவமானப்படுத்துற மாதிரி தான் இருந்தது என்று குற்றச்சாட்டுகள் வைத்திருக்கிறார். இது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பஞ்சாயத்துக்கு பஞ்சம் இருக்காது. இப்போ சொல்லவே வேண்டாம். பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களிலேயே நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+