அடுத்த கட்டத்திற்கு செல்லும் புகழ்...ஆதரவு கோரினார் ரசிகர்களிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய முதல் திரைப்படம் விரைவில் வெளியாக போகிற சந்தோஷத்தில் ரசிகர்களிடம் புகழ் ஆதரவு கேட்டுள்ளார்.

அவர் நடித்து முதல்முறையாக வெளியாகும் சபாபதி திரைப்படத்தின் போஸ்டரை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்து இருப்பதால் நெட்டிசன்கள் பலர் சேர்க்கை சரியில்லை என்று இவருக்கு வார்னிங் கொடுத்து வருகின்றனர்.

புகழின் முதல் திரைப்படம்

புகழின் முதல் திரைப்படம்

காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் நடிப்பில் இம்மாதம் வெளிவர இருக்கும் சபாபதி திரைப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பேஜ்ஜில் பகிர்ந்துள்ள 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த புகழ்,தனது திரைப் பயணத்தின் முதல் படத்தை குறித்தும், இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவையும் கோரியுள்ளார்.

புகழுக்குப் புகழ் கிடைக்குமா

புகழுக்குப் புகழ் கிடைக்குமா

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சியை அடைந்த புகழ் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்தாலும், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வந்தார். விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டி ஆகிவிட்ட புகழ், ஏற்கனவே விஜய் டிவியின் ப்ராடக்ட்டான காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துடன் 'சபாபதி' என்ற காமெடி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆனார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து இம்மாதம் இந்த படம் வெளிவர இருக்கிறது. இந்தத் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகழ், இதுவரை தனக்கு ஆதரவையும் அன்பையும் அளித்த ரசிகர்களுக்கு நன்றியையும் கூறி ,இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் அந்த ஆதரவை அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 சங்கடமான நேரமாக இருக்கிறது

சங்கடமான நேரமாக இருக்கிறது

சந்தானம் கதை நாயகனாக நடித்த இந்தப் படம் வெளிவர இருக்கும் இந்த சூழ்நிலையில்..,"ஜெய்பீம்" பட விவகாரம் குறித்த இவரது கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைகளையும், கேள்விகளையும் கிளப்பியுள்ளது.ஒருவேளை தன்னுடைய பட புரமோஷனுக்காக தான் ஜெய்பீம் பட விவகாரத்தில் இவர் கருத்து தெரிவித்து இருப்பாரோ..!? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஒருவரை உயர்த்தி காட்ட.. யாரையும் தாழ்த்தி காட்டக் கூடாது என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தை கூறும் சந்தானம்,தன் படங்களில் வரும் காமெடிகளில் அதனை பின்பற்றுகிறாரா..!? என்றும், பாடி ஷேமிங் செய்வதே அவருடைய காமெடியில் பிரதானமாய் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

விரைவில் வெளியாகும் திரைப்படம்

விரைவில் வெளியாகும் திரைப்படம்

இயக்குனர் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவரும் இந்த திரைப்படத்தில், சந்தானம், புகழ் உடன் இனைந்து எம்.எஸ் பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, போன்ற பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் சாம் சி. எஸ் இந்த திரைப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள பிரபல பைனான்சியர் அன்புச்செழியன் அவர்களின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் நவம்பர் 19ஆம் தேதி வெளியிடுகிறது.

நன்றி மழை பொழிகிறது

நன்றி மழை பொழிகிறது

தான் நடித்துள்ள படங்களில் முதலில் திரைக்கு வர உள்ள இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி என்றும், சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு என்னை காண இருக்கும் எனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள் என்றும், உங்கள் அன்புடன் ஆதரவுடன் மேலும் உங்களை மகிழ்விக்க எனது பணியை தொடர்வேன் என்றும், உங்கள் புகழின் அன்பும்...நன்றிகளும்..என பல நன்றிகளை மழை போல பொழிந்துள்ளார் புகழ். இதைப் பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் தங்களின் ஆதரவு எப்போதும் உண்டு என்று இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+